

தினமும் அளவுக்கு அதிகமாக தினமும் பீட்சா, பர்கர் என்ற நொறுக்குத்தீனி வகைகளையும் பாஸ்ட் புட் (fast food) என்கிற துரித உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த அம்ரோஹாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி அம்ரோஹா தினமும் அதிகளவு துரித உணவுகளை சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த மன்சூர்கான் என்பவரின் மகள் அம்ரோஹா. இவர் ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தினமும் வீட்டில் சமைக்கக்கூடிய உணவுகளை தவிர்த்து விட்டு வெளியில் இருந்து பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் ஃபுட் உணவுகளையும், துரித உணவுகளையும் மட்டுமே இவர் அதிகளவு சாப்பிடுவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் அவருக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் அவருக்கு அதிகளவு துரித உணவுகளை சாப்பிட்டு குடல் கடுமையாக சேதமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது செரிமான அமைப்பு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு அதனால் குடலில் ஓட்டை விழுந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து சிறுமியின் உடல் மிகவும் மோசமடைந்ததையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அந்த சிறுமியின் வயிற்றில் இருக்கக்கூடிய குடல் பகுதிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டதாக கூறி அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
ஆனால் 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். துரித உணவு அதிகளவு சாப்பிட்டதால் 16 வயது சிறுமி உயிரிழந்தது அவரது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியதுடன் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தினமும் பீட்சா, பர்கர் என்ற நொறுக்குத்தீனி வகைகளையும் பாஸ்ட் புட் என்கிற துரித உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மரணம் ஏற்படுமா என்ற அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள் துரித உணவை ஏன் குறை கூறுகிறார்கள்?
தற்போதைய காலகட்டத்தில் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை சாப்பிடுவதை அதிகம் பேர் விரும்புகின்றனர். அந்த வகையில் இதுபோன்ற துரித உணவுகளை சாப்பிடுவதால் இதுபோன்ற ஆபத்தான பிரச்சனைகள் வருமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை அதிகளவு விரும்பி சாப்பிடும் மக்கள் பொதுவாக 40 வயதிற்கு மேல் தான் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரும் என்று நினைக்கிறார்கள். அதாவது இளம் வயதில் ஓடியாடி விளையாடுவதால் கல்லை சாப்பிட்டாலும் கரைந்து விடும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால் சிறு வயதில் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை எவ்வளவு சாப்பிட்டாலும் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறார்கள்.
ஆனால் சமீபத்தில் இந்திய குழந்தை மருத்துவ அகாடமி (indian academy of pediatrics) 5 வயதில் இருந்து 20 வயது வரை உள்ளவர்களிடம் உணவு பழக்கம் எப்படி உள்ளது அவர்கள் அன்றாடம் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடுகிறார்கள் என்பது குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டது.
அதில் தெரிய வந்த உண்மை என்னவென்றால் ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு சேர வேண்டிய ஊட்டச்சத்தில் 50 சதவீதம் வரை, ஜங்க் ஃபுட் என்கிற துரித உணவு, ultra processed foods, பீட்சா, பர்கர், அதிகளவு உப்பு, சர்க்கரை சேர்த்த உணவுகள், trans fat and saturated fat அதிகம் உள்ள உணவுகளை குழந்தைகள் அதிகம் சாப்பிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பழக்கம் முன்பை விட தற்போது பலமடங்கு அதிகமாகி உள்ளது. இதனால் உடல்பருமன் முதலில் அதிகமாகி மெல்ல மெல்ல அடுத்தடுத்த பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது.
insulin hormone நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், HTL என்கிற நல்ல கொழுப்பு குறைந்து LDL என்கிற bad cholesterol அதிகமாகி fatty liver போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. அதுமட்டுமின்றி இளம் வயதில் இதய பிரச்சனை வருவதற்கு இவை அனைத்து வேகமாக வேலை செய்கிறது. ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் 30, 40 வயதிற்கு மேல் வரவேண்டிய இந்த பிரச்சனைகள் சிறு குழந்தைகள் முதல் டீன்ஏஜ் பருவத்திலேயே மெல்ல மெல்ல வர ஆரம்பித்து விடுகிறது.
குறிப்பாக துரித உணவை அதிகமாக உட்கொள்வது, வளரும் குழந்தைகள் மற்றும் டீனேஜர்களுக்கு, செரிமான அமைப்பை அதிக சுமைக்கு ஆளாக்கும்.
இத்தகைய உணவில் பெரும்பாலும் கொழுப்பு, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், உப்பு மற்றும் சேர்க்கைகள் அதிகமாக இருக்கும், ஆனால் நார்ச்சத்து குறைவாக இருக்கும். காலப்போக்கில், இது செரிமானத்தை மெதுவாக்கும், குடலை எரிச்சலூட்டும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும்.
துரித உணவு, குளிர் பானங்கள், சிப்ஸ் மற்றும் பொரித்த உணவுகளை அடிக்கடி உட்கொள்வது இயற்கையான பசியை அடக்கி இளைஞர்களுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தூண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜங்க் ஃபுட் என்பதை தவிர்க்கவே முடியாத இந்த காலகட்டத்தில் 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கவோ கூடாது என்றும் 5 வயதிற்கு மேற்ப்பட்ட குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை மட்டும் கொடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல் டீன்ஏஜ் வயதினர் மாதத்திற்கு இருமுறை சாப்பிடுவதே அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உத்தரபிரதேச மாணவியின் மரணத்தில் மூலம் ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நம்முடைய குழந்தைகள் ஆசையாக கேட்கிறார்களே என்ற காரணத்திற்காக அவர்களது உடல் நலத்திற்கு மிகப்பெரிய தீங்கை ஏற்படுத்தும் ஜங்க் ஃபுட் அல்லது பாஸ்ட் புட்டை வாங்கி கொடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும் என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இந்த சோகம் குடும்பங்கள் குழந்தைகள் எப்போதாவது என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை மட்டுமல்ல, அவர்கள் தினமும் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.