

குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விட்டாச்சி. ஆனா உங்க பசங்க வெளியில் விளையாட போகாமல் செல்போனிலேயே முழுநேரமும் மூழ்கி கிடக்கிறார்களா? அப்படின்னா உங்க குழந்தை செல்போனில் என்ன செய்றாங்க, என்ன பார்க்கிறாங்க என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்ளவும் முடியும், அதனை கட்டுப்படுத்தவும் முடியும்.
குழந்தைகளின் நடவடிக்கைகளை கவனிக்க முடியாமல் வருத்தப்படும் பெற்றோரின் கவலையை போக்குவதற்காக கூகுள் ஃபேமிலி லிங்க் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் ஃபேமிலி லிங்க் (Google Family Link) என்பது குழந்தைகளின் டிஜிட்டல் பழக்கவழக்கங்களை நிர்வகிக்கவும், ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவும் ஒரு இலவச பெற்றோர் கட்டுப்பாட்டு கருவியாகும். அதாவது உங்கள் குழந்தையின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கண்காணிக்கவும், செயலி மற்றும் திரை நேர வரம்புகளை அமைக்கவும், இணையதளங்களைக் கண்காணிக்கவும், மற்றும் கூகுள் ப்ளே செயலிகளின் பதிவிறக்கங்களை நிர்வகிப்பதன் மூலம் உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கூகுள் ஃபேமிலி லிங்க் மூலம் பெற்றோர்கள் கட்டுப்படுத்துவது எளிதாக்கப்பட்டுள்ளது.
இந்த கூகுள் ஃபேமிலி லிங்க் மூலம் உங்கள் குழந்தைகளின் திரை நேரம் (screen time), ஆப் (APP)பயன்பாடு, இருப்பிடத்தைக் கண்டறிதல் மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடுகளை தொலைதூரத்தில் இருந்தே பெற்றோர்கள் தங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து கட்டுப்படுத்தலாம்.
குழந்தைகள் புதிய ஆப்ஸ்களைப் பதிவிறக்கம் செய்யும்போது அனுமதி கோருதல், தேவையற்ற ஆப்ஸ்களைத் தடுப்பது அல்லது அகற்றுவது போன்ற பணிகளையும் இது செய்கிறது.
இந்த வசதி மூலம் போன் வேண்டும் என்று உங்கள் குழந்தைகள் அடம்பிடித்தாலும் அவங்களுடைய முழு கண்ட்ரோலும் உங்களிடம் தான் இருக்கும். கூகுள் ஃபேமிலி லிங்க் மூலம் உங்கள் போனில் இருந்து உங்கள் குழந்தையின் போனை கண்ட்ரோல் செய்ய முடியும்.
உங்கள் போனில் இருந்து உங்கள் குழந்தையின் போனை லாக் செய்யவும் முடியும். மறுபடியும் அன் லாக் செய்ய வேண்டும் என்றால் உங்கள் போனில் இருந்தே செய்துவிட முடியும்.
உங்க குழந்தை ஏதாவது ஒரு ஆப் விளையாட வேண்டும் அல்லது யூஸ் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு டைம் லிமிட் (Time Limits) கூட உங்களால் செய்ய முடியும்.
அதாவது உங்கள் குழந்தை instagram பயன்படுத்த அதுக்கு ஒரு 20 நிமிடம் செட் செய்யலாம் அல்லது பப்ஜி விளையாட வேண்டும் என்று உங்கள் குழந்தைகள் விரும்பினால் 1 அல்லது 2 மணிநேரம் என்று நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் போனில் இருந்தே அவர்கள் விளையாடுவதற்கு Time Limits செட் செய்து அவர்கள் விளையாடுவதை கண்ட்ரோல் செய்ய முடியும். அப்படி செட் செய்தவுடம் நீங்கள் பதிவு செய்த 1 மணிநேரம் மட்டுமே உங்கள் குழந்தைகளால் அவர்களிடம் உள்ள செல்போனில் விளையாட முடியும். அந்த ஒரு மணிநேரம் ஆனாவுடன் கேம் தானாகவே முடிந்துவிடும்.
அதேபோல் குழந்தைகள் இரவு முழுவதும் உங்களுக்கு தெரியாமல் போனில் கேம் விளையாடுகிறார்கள் அல்லது வேறு ஏதாவது செய்து கொண்டிருப்பதாக உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உங்கள் போனிலேயே Scheduled செய்து டவுன் டைம் கொடுத்துவிட்டால் நீங்க எந்த டைம் கொடுக்கிறீங்களோ அந்த நேரத்திற்கு பிறகு உங்கள் குழந்தைகளால் அவர்களுடைய போனில் எதுவும் செய்ய முடியாது.
குறிப்பாக இன்டர்நெட்டில் இப்போது கண்டதும்(தவறான வீடியோ, புகைப்படங்கள்) வரஆரம்பித்து விட்டது. தெரிந்தோ அல்லது தெரியாமலோ advertisementல் வருவதை உங்கள் குழந்தைகள் கிளிக் செய்து ஆப்(APP) பதிவிறக்கம் ஆகிவிட்டால் என்ன செய்வது என்று பெற்றோர்கள் பயப்பட வேண்டாம். நீங்க உங்களுடைய போனிலேயே அதாவது கூகுள் ஃபேமிலி லிங்கில் அதற்கான கட்டுப்பாடுகளும் (Restrictions) கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களுடைய போனில் இருந்து controls போய் Google Playகுள் Apps And Games என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் போய் எந்த வயதினர் யூஸ் பண்ணக்கூடிய ஆப்ஸ் மட்டும் Install பண்ணலாம் என்ற ஆப்ஷன் இருக்கும். அதை மட்டும் நீங்கள் செலக்ட் செய்து விட்டால் உங்கள் குழந்தைகள் அந்த ஆப்பை மட்டும் தான் பதிவிறக்கம் செய்ய முடியும். இது இல்லாம வேறு ஏதாவது ஆப்பை உங்கள் குழந்தைகள் பதிவிறக்கம் செய்தால் உங்கள் போனுக்கு நோட்டிபிகேஷன்(notification) வரும். அதை அப்ரூவ் பண்ணணுமா, வேண்டாமானு நீங்க தான் முடிவெடுக்கணும்.
அதுமட்டுமின்றி உங்கள் குழந்தைகள் நண்பர்களுடன் வெளியில் விளையாட சென்றால் அவர்கள் இருக்கக்கூடிய லொகேஷனையும்(Child's location) நீங்க உங்க போனிலேயே தெரிந்து கொள்ள முடியும்.
அதேபோல் உங்கள் குழந்தை browserக்கு போய் websiteக்கு போக வேண்டும் என்றாலும் அந்த வெப்சைட் அப்ரூவ் பண்ணணுமா வேண்டாமானு நோட்டிபிகேஷன் உங்களுக்கு தான் வரும். நீங்க Ok என்றால் மட்டுமே அப்ரூப் பண்ண முடியும்.
உங்கள் குழந்தையின் பாதுகாப்பிற்காக இந்த விஷயங்களை செட்டப் செய்வது மிகவும் சுலபம். இப்போது உங்கள் குழந்தை போனையும், உங்கள் போனையும் வைத்து எப்படி இதை செட்டப் செய்வது என்று பார்க்கலாம் வாங்க..
குழந்தையின் தொலைபேசியில் :
உங்கள் குழந்தையின் போனில் இருந்து Phone Setting சென்று, "Google" என்பதைக் கிளிக் செய்யவும். அதில் "அனைத்து சேவைகளையும்" (All Services) தேர்ந்தெடுக்கவும், "பெற்றோர் கட்டுப்பாடு" (Parental Control) என்பதைக் கிளிக் செய்யவும்.
"குழந்தையின் மின்னஞ்சல்" (Child's Email) என்பதைத் தேர்ந்தெடுத்துத் தொடரவும்.
"பெற்றோரின் மின்னஞ்சல் ஐடி" (Parent’s Email ID) மூலம் உள்நுழைந்து தொடரவும்.
Instructions படிக்கவும், குழந்தையின் மின்னஞ்சல் ஐடியின் கடவுச்சொல்லை உள்ளிடவும் (Enter password of child’s Email ID) என்பதற்குக் கீழே வந்து, கண்காணிப்பை (Supervision) அனுமதிக்கவும்.
கடைசியாக அமைப்பை மதிப்பாய்வு செய்து Done என்பதைக் கிளிக் செய்யவும்.
அடுத்து பெற்றோரின் தொலைபேசியில் :
Google Play Store-லிருந்து "Family Link" செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்.
"பெற்றோரின் மின்னஞ்சல் ஐடி" மூலம் உள்நுழையவும்.
இனிமேல் நீங்கள் உங்கள் போனில் இருந்து எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் குழந்தையின் தொலைபேசியைக் கண்காணிக்கலாம்.