

ஃபையர்-போல்ட் (Fire-Boltt) நிறுவனத்தால் ஃபையர்-லென்ஸ் டூன் (Fire-Lens Dune) ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் வெறும் கண்ணாடியாக மட்டும் அல்லாமல், பாடல் கேட்க, அழைப்புகளுக்கு பதிலளித்துப் பேசும் வகையிலும் இந்த ஸ்மார்ட் கண்ணாடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது வெறும் சாதாரண கண்ணாடி போலத் தெரிந்தாலும், புளூடூத் ஆடியோ மற்றும் ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்ட ஒரு அணியக்கூடிய தொழில்நுட்ப (Wearable Tech) சாதனம் ஆகும்.
இந்த ஸ்மார்ட் கண்ணாடியின் முக்கிய சிறப்பம்சங்கள் :
* காதுகளுக்குள் ஹெட்செட் நுழைக்காமலேயே, ஓபன்-இயர் புளூடூத் ஆடியோ (Open-Ear Audio) மூலம் கண்ணாடியின் சட்டகத்தில் (Frame) உள்ள ஸ்பீக்கர்கள் மூலம் பாடல்களைக் கேட்கலாம்.
* ஒரே ஒரு டச் மூலம் உங்கள் மொபைலில் உள்ள Siri, கூகுள் அசிஸ்டெண்ட் (Google Assistant) அல்லது அலெக்சா (Alexa) போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட்களை (Voice Assistant) எளிதாக இயக்க முடியும்.
* ஸ்மார்ட்போன் அழைப்பு அல்லது பாடல்களை கட்டுப்படுத்த கண்ணாடியின் பக்கவாட்டில் டச் கன்ட்ரோல் (Smart Touch Controls)கொடுக்கப்பட்டுள்ளது. அதனை 2 விநாடிகள் அழுத்திப்பிடித்தால் போதுமானது. அதாவது கண்ணாடியின் பக்கவாட்டில் தொட்டுப் பாடல்களை மாற்றலாம் அல்லது அழைப்புகளில் பேசலாம்.
* கண்ணாடியின் இருபுற முனைகளையும் 5 விநாடிகள் அழுத்தினால் ஸ்மார்ட்போன் உடன் கண்ணாடி புளூடூத் வழியாக இணையும். (ஸ்மார்ட்போனில் புளூடூத் இயக்க நிலையில் இருக்க வேண்டும்)
* ஃபையர் லென்ஸ் டூன் ஸ்மார்ட் கண்ணாடி மூலம் அழைப்புகளுக்கு ஸ்மார்ட்போனை கையில் எடுக்காமல், கண்ணாடியில் உள்ள மைக்ரோஃபோன் மற்றும் டச் கன்ட்ரோல் மூலம் நேரடியாக அழைப்புகளுக்குப் பதிலளிக்கலாம்.
* காதுமடல்களுக்கு அருகே ஆடியோ வரும் வகையில் கண்ணாடியில் ஸ்பீக்கர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாகனம் ஓட்டும்போது, நடக்கும்போது, உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்யும்போது அல்லது பயணம் செய்யும்போது ஹேண்ட்ஸ்-ஃப்ரீ புளூடூத் அழைப்பு மற்றும் ஆடியோவை அனுபவிக்கவும்.
* வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் சார்ஜிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபையர் லென்ஸ் டூன் ஸ்மார்ட் கண்ணாடியை வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 4 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
இரட்டை 60mAh பேட்டரிகள் மூலம் முழுமையாக சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் பிளேடைம் (Playtime) மற்றும் 72 மணி நேரம் ஸ்டேண்ட்பை (Standby) வசதி கிடைக்கும்.
* புளூடூத் மூலம் ஸ்மார்ட்போன் உடன் கண்ணாடியை இணைத்துக்கொள்ளலாம்.
* அலாரம், நாள்காட்டி, கூகுள் வழித்தடம் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தலாம்.
* உங்களுக்குக் கண் பார்வை குறைபாடு (கண்ணாடி பவர்) இருந்தால், இதன் ஃபிரேமை மாற்றாமல் உங்கள் பவர் லென்ஸ்களை (Prescription Lens Support) இதில் பொருத்திக் கொள்ள முடியும்.
லேசான எடை, டிரெண்டியான லுக், ஸ்டைலையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் நவீன வடிவமைப்பு தான் இந்த ஃபையர் லென்ஸ் டூன் ஸ்மார்ட் கண்ணாடி.
நீங்கள் வேலை செய்தாலும், பயணம் செய்தாலும் அல்லது வெளியே சுற்றினாலும், இதன் லேசான ஃபிரேம் உங்களுக்கு முழு வசதியைத் தரும். அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை விரும்பும் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இது மிகவும் ஏற்றது.
இதன் அசல் விலை ரூ.8,999 ஆகக் குறிப்பிடப்பட்டாலும், தற்போதைய தள்ளுபடி சலுகைகளில் இது சுமார் ரூ.1,967 முதல் ரூ.1,999 வரையிலான பட்ஜெட் விலையில் கிடைக்கிறது.
இந்த ஃபையர் லென்ஸ் டூன் ஸ்மார்ட் கண்ணாடியை நீங்கள் Fire-Boltt அதிகாரப்பூர்வ வலைத்தளம், Amazon India அல்லது Flipkart ஆன்லைன் தளங்கள் மூலம் வாங்கலாம்.