நாளை தான் கடைசி நாள்..! ஒரு ரூபாய் செலவில்லாமல் காசிக்கு செல்ல அரிய வாய்ப்பு..!

காசி தமிழ் சங்கமம் 5.0 திட்டத்தின் கீழ் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தி சென்று வருவது எப்படி என்பதற்கான முழு விவரம்.
காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம்AI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படும் ‘காசி தமிழ் சங்கமம் 5.0’ (Kashi Tamil Sangamam 5.0) நிகழ்வு நவம்பர் 28 முதல் டிசம்பர் 12, 2026 வரை நடைபெற உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு (மத்திய அரசின் காசி தமிழ் சங்கமம் 5.0 திட்டம் மூலம்) இலவசமாகச் செல்ல வரும் நாளை (நவம்பர் 13-ம்தேதி )கடைசி நாளாகும்.

வாழ்க்கையில் ஒரு முறை காசிக்கு சென்று வந்தால் பெரும் புண்ணியம் என்பது ஐதீகம். ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் நீங்களும் காசிக்கு போய், கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் விஐபி தரிசனம் செய்யலாம் என்பது தமிழ்நாட்டில் உள்ள இன்னும் நிறைய பேருக்கு தெரியாது. 8 நாட்கள் இருக்கும் அந்த பயணத்தில் சாப்பாடு, தங்கும் இடம், போக்குவரத்து என்று தமிழ்நாட்டிற்கு திரும்பி வரும் வரைக்கும் நீங்க ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை. முற்றிலும் இலவசம்.

இதை நம்முடைய மத்திய அரசு தான் ‘காசி தமிழ் சங்கமம் 5.0’ (Kashi Tamil Sangamam 5.0) மூலம் ஒருத்தருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் செலவு செய்து காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும், அன்னபூரணி, அயோத்தியா என இந்த அனைத்து இடங்களுக்கும் இலவசமாக கூட்டிட்டு போகப்போறாங்க.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் சுமார் 1,400 பேருக்கு வாரணாசி (காசி), பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வர இலவசப் பயணம், உணவு மற்றும் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒரு குழுவுக்கு தலா 200 பேர் வீதம் 7 குழுக்கள் பங்கேற்கின்றன

இந்த காசி தமிழ் சங்கமம் 5.0 முக்கிய நோக்கமே பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் நடுவில் உள்ள கலாச்சார தொடர்ப்பை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இந்த புனித பயணத்தை ஏற்பாடு செய்து வருகிறது. காசி தமிழ் சங்கமம் மூலமாக தமிழ் பாரம்பரியத்தை உலகறிய செய்ய இந்த இலவச பயணம் கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்படுத்து வருகிறது. இதில் பதிவு செய்வதற்கு ஆன்லைனில் மட்டுமே முடியும்.

மத்திய அரசால் நடத்தப்படும் 'காசி தமிழ் சங்கமம் 5.0' திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலிருந்து காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தி ஆகிய இடங்களுக்கு இலவசப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் பத்திரமாக தமிழ்நாட்டில் பக்தர்கள் இறக்கிவிடப்படுவார்கள்.

இந்த புனித பயணத்தில் நீங்களும் கலந்து கொள்ள விரும்பினால் kashi tamil sangamam என்ற ஆன்லைன் முகவரிக்கு சென்று உங்க category தேர்வு செய்து பதிவு செய்தாலே போதும். நீங்களும் இந்த பயணத்தில் கலந்து கொள்ளலாம்.

சரி வாங்க இந்த இலவச பயணம் குறித்து முழுமையாக பார்க்கலாம்.

முக்கிய விவரங்கள்:

திட்டத்தின் பெயர்: காசி தமிழ் சங்கமம் 5.0 (Kashi Tamil Sangamam 5.0)

பயணக் காலம்: நவம்பர் 28, 2026 முதல் டிசம்பர் 12, 2026 வரை

Kashi Tamil Sangamam 5.0
Kashi Tamil Sangamam 5.0 credit-vyasify.in/current-affairs

விண்ணப்பிக்க கடைசி தேதி: இத்திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் நாளைக்குள் (நவம்பர் 13) விண்ணப்பிக்க வேண்டும். (சில தளங்களில் பதிவு நவம்பர் 28 முதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது)

யாத்திரை செல்லும் இடங்கள், பயண காலம்: ஒவ்வொரு குழுவினருக்கும் 8 நாட்கள் பயணம் (4 நாட்கள் பயணம் + 4 நாட்கள் காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தி ஆகிய இடங்களுக்குப் பார்வையிடுதல் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்).

யாத்திரையில் உள்ளடங்குபவை: பயணம் (பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம்), தங்குமிடம் மற்றும் உணவு முற்றிலும் இலவசம்.

தகுதியுடையவர்கள்: மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள், பெண்கள் மற்றும் ஆன்மீகப் பிரதிநிதிகள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: பதிவு செய்பவர்களுக்கு இணையவழியில் திருக்குறள் சார்ந்த வினாடி வினா (Quiz) மற்றும் தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இதையும் படியுங்கள்:
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி : தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில்கள்!
காசி தமிழ் சங்கமம்

தேவையான ஆவணங்கள்: விண்ணப்பிக்கும்போது ஆதார் அட்டை (Aadhaar ID), கல்வித் தகுதி அல்லது தொழில் சார்ந்த விவரங்கள் மற்றும் 2 MB அளவுக்கு மிகாத அடையாளச் சான்றை (PDF/JPEG/PNG) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

* அதிகாரப்பூர்வ இணையதளமான காசி தமிழ் சங்கமம் போர்ட்டல் (Kashi Tamil Sangamam Portal) இணையதளத்திற்குச் செல்லவும்.

* முகப்புப் பக்கத்தில் உள்ள பதிவு (Registration) பொத்தானைக் கிளிக் செய்யவும்.

* உங்கள் பெயர், தொடர்பு விவரங்கள் மற்றும் தொடர்புடைய பிரிவைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் ஆதார் எண் மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

* பதிவு செய்த பிறகு, உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு 24 மணி நேரத்திற்குள் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் (Confirmation Email) வரும் (ஸ்பேம்/ஜங்க் ஃபோல்டரையும் சரிபார்க்கவும்).

* தேர்வு செய்யப்படுவதற்கான மேற்கோள் மற்றும் வினாடி வினா (Quiz) தகவல்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், இந்தியாவின் பொதுவான நாகரீகப் பாரம்பரியத்தை கொண்டாடுவதிலும் காசி தமிழ்ச் சங்கமம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதையும் படியுங்கள்:
காசி தமிழ் சங்கமம்: தமிழகத்திலிருந்து செல்லும் முதல் குழுவை ஆளுநர் வழியனுப்புகிறார்!
காசி தமிழ் சங்கமம்

காசி யாத்திரை செல்ல இது பொன்னான வாய்ப்பு! இந்த இலவசப் பயணத் திட்டத்தைப் பயன்படுத்தி இறையருள் பெற்றுத் திரும்புங்கள்.