இல்லத்தரசிகளே கவனம்..! உங்கள் வீட்டில் இந்த பேட்ச் எவரெஸ்ட் சீரக தூள் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

எவரெஸ்ட் சீரகப் பொடியில் ஆபத்தான பூச்சிக்கொல்லி எச்சங்கள் கண்டறியப்பட்ட செய்தி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Everest சீரகத் தூள்
Everest சீரகத் தூள்AI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

உணவுப் பாதுகாப்பு விதிகளையும் சுகாதார நெறிமுறைகளையும் மீறியதற்காக, பிரபல பிராண்டான ‘எவரெஸ்ட்’ (Everest) நிறுவனத்தின் சீரகத் தூள் பேட்ச் ஒன்றைச் சந்தையிலிருந்து உடனடியாகப் திரும்பப் பெறவும், ‘கிரியேட்டிவ் பேக்கர்ஸ்’ நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யவும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் (Everest Food Products) என்பது இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய மசாலா தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.

'எவரெஸ்ட் மசாலா' என்ற பிராண்ட் பெயரில் 45-க்கும் மேற்பட்ட தூய மற்றும் கலப்பு மசாலா வகைகளை இந்நிறுவனம் விற்பனை செய்கிறது.

இந்தியாவின் நம்பர் 1 மசாலா பிராண்டான இது, சுமார் 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது. அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் இதன் பிராண்ட் தூதர்களாக (Brand Ambassadors) விளம்பரம் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், எவரெஸ்ட் நிறுவனத்தின் பாக்கெட் செய்யப்பட்ட 'சீரகத் தூள்' (Cumin Powder) மாதிரிகளை ஆய்வு செய்ததில், அதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பூச்சிக்கொல்லி மருந்து (Pesticide Residue) கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்த குறிப்பிட்ட சீரகத் தூள் பேட்ச் (Batch No. E080668761) தயாரிப்புகளை சந்தையிலிருந்து உடனடியாக திரும்பப் பெற (Recall) FSSAI அதிரடி உத்தரவிட்டுள்ளது.

எவரெஸ்ட் சீரகப் பொடியில் ஆபத்தான பூச்சிக்கொல்லி எச்சங்கள் கண்டறியப்பட்ட செய்தி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, உணவுப் பாதுகாப்பு அமைப்புகள் சில பிராண்டுகளின் மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு (Ethylene Oxide) போன்ற நச்சு இரசாயனங்கள் கலந்திருப்பதை ஆய்வக சோதனைகள் மூலம் கண்டறிந்து FSSAI எச்சரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில் கோவாவில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் FSSAI அதிகாரிகளால் சேகரிக்கப்பட்ட எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் (Everest Food Products) பாக்கெட் செய்யப்பட்ட சீரகப் பொடி மாதிரி, ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ‘அஸோக்ஸிஸ்ட்ரோபின்’ (azoxystrobin) மற்றும் ‘தியாமெதோக்சம்’ (Thiamethoxam) ஆகிய வீரியமிக்க பூச்சிக்கொல்லி எச்சங்கள் அதிகளவில் கலந்துள்ளது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-இன் கீழ், அந்த சீரகத் தூள் ‘உண்பதற்கு ஆபத்தானது’ ‘பாதுகாப்பற்றது’ என அறிவிக்கப்பட்டது. நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு, மாதிரி மீண்டும் மத்திய உணவு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட போதிலும், பரிசோதனையில் அதே முடிவு உறுதியானது. இதனால், உடனடியாக அந்த குறிப்பிட்ட பேட்ச் சீரகத் தூள் முழுவதையும் சந்தையில் இருந்து உடனடியாக திரும்பப் பெற்று, அது தொடர்பான முழு அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு எவரெஸ்ட் நிறுவனத்திற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் நுகர்வோர் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக, கடுமையான ஒழுங்குமுறை விதிமுறைகளைத் தொடர்ந்து அமல்படுத்தி வருவதுடன், கடந்த சில மாதங்களாக, உணவு வணிக நிறுவனங்கள் மற்றும் மின்-வணிக நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளை FSSAI தீவிரப்படுத்தியுள்ளது.

FSSAI
FSSAI

இந்த நடவடிக்கைகள் குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அது பொதுமக்களுக்குத் தெரிவித்து வருகிறது.

அதேபோல் கடுமையான சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக பிரபல 'சுகர் & ஸ்பைஸ்' (Sugarr & Spice) பேக்கரி உரிமையாளரான கிரியேட்டிவ் பேக்கர்ஸ் அண்ட் கன்ஃபெக்ஷனர்ஸ் பிரைவேட் லிமிடெட் (M/s Creative Bakers and Confectioners Pvt. Ltd.) நிறுவனத்தின் உரிமத்தை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது. FSSAI அதிகாரிகள் நடத்திய ஆய்வில், சமையல் கூடங்களில் அழுக்கு, சிலந்தி வலைகள், ஈக்கள் மற்றும் எலிகளின் நடமாட்டம் அதிகளவில் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையும் படியுங்கள்:
தாய்ப்பாலுக்கு நிகரான சத்தா? நெஸ்லேவின் விளம்பரத்தை நம்பி ஏமாறாதீங்க.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய அரசு!
Everest சீரகத் தூள்

மேலும், அழுகக்கூடிய உணவுப் பொருட்கள் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்ததும், துருப்பிடித்த கொள்கலன்களில் மூலப்பொருட்கள் சேமிக்கப்பட்டதும், பராமரிப்பு ஆவணங்கள் முறையாக இல்லை என்பதும் அம்பலமானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (அக்டோபர் 3) நெஸ்லே (Nestle) நிறுவனத்தின் ‘குறைந்த கொழுப்புள்ள பால் சார்ந்த ஒயிட்னர்’ (Low Fat Dairy Whitener) மாதிரி ஒன்று ‘தரமற்றது’ மற்றும் ‘பாதுகாப்பற்றது’ என தெரியவந்ததையடுத்து அதன் விற்பனையைத் தடை செய்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அந்த அதிர்ச்சி விலகுவதற்குள், தற்போது எவரெஸ்ட் சீரகப் பொடியிலும் ஆபத்தான பூச்சிக்கொல்லி எச்சங்கள் கண்டறியப்பட்டதாக வெளியாகும் செய்தி பொதுமக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
“எதை தான் நம்பி சாப்பிடுவது?” – நெஸ்லே நிறுவனத்தின் ‘டெய்ரி ஒயிட்னர்’ விற்க தடை..!
Everest சீரகத் தூள்

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்த சில மாதங்களாக பல்வேறு முக்கிய உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் மீது கடுமையான தடைகளையும், புதிய கட்டுப்பாடுகளையும் விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com