“எதை தான் நம்பி சாப்பிடுவது?” – நெஸ்லே நிறுவனத்தின் ‘டெய்ரி ஒயிட்னர்’ விற்க தடை..!

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பை விற்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ளது.
Nestle baby food
Nestleimage credit-grobank.co.za, thehindu.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) கீழ் நடத்தப்பட்ட ஆய்வகப் பரிசோதனையில், நெஸ்லே (Nestle) நிறுவனத்தின் ‘குறைந்த கொழுப்புள்ள பால் சார்ந்த ஒயிட்னர்’ (Low Fat Dairy Whitener) மாதிரி ஒன்று ‘தரமற்றது’ மற்றும் ‘பாதுகாப்பற்றது’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ‘குறைந்த கொழுப்புள்ள பால் சார்ந்த ஒயிட்னர்’ (Low Fat Dairy Whitener) விற்பனையைத் தடை செய்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் FSSAI உத்தரவிட்டுள்ளது.

நெஸ்லே நிறுவனத்தின் குறிப்பிட்ட தயாரிப்பு தரமற்றது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த அதிரடியாக தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நெஸ்லே நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.

டெல்லியில் உள்ள 'பாரத் ஹோட்டல்ஸ் லிமிடெட்' (The Lalit) வளாகத்தில் இருந்து நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான ‘குறைந்த கொழுப்புள்ள பால் சார்ந்த ஒயிட்னர்’யின் மாதிரி சேகரிக்கப்பட்டது.

இதுதொடர்பான உணவு ஆய்வாளரின் ஆய்வக அறிக்கையில், நெஸ்லே நிறுவனத்தின் குறிப்பிட்ட தயாரிப்பு ‘தரமற்றது’ மற்றும் ‘பாதுகாப்பற்றது’ எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006 ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு மாறாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வகப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவு வணிக அமைப்பிற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் முறைப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளதுடன், 6 பாதுகாப்பற்றது எனக் கண்டறியப்பட்ட குறிப்பிட்ட உணவுப் பொருளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு நெஸ்லே நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமாக உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு இணங்காத நெஸ்லேவின் ‘குறைந்த கொழுப்புள்ள பால் சார்ந்த ஒயிட்னர்’ தயாரிப்பு தொடர்பாக, மெசர்ஸ் பாரத் ஹோட்டல்ஸ் நிறுவனத்திற்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

FSSAI தடை
FSSAI தடைimage credit-kanakkupillai.com

மேலும், மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் குறிப்புக்காகவும் ஆய்வகப் பரிசோதனை அறிக்கையின் நகல் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-இன் குறிப்பிட்ட பிரிவின் கீழ், இச்சம்பவம் தொடர்பாக சட்டப்பூர்வமாக மேல்முறையீடு செய்ய நெஸ்லே மற்றும் ஹோட்டல் நிர்வாகத்திற்கு உரியக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தொகுப்புகளைச் (batches) சேர்ந்த தயாரிப்புகளை வாங்குவதற்கு அல்லது உட்கொள்வதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை சரிபார்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைப் பரிசோதிப்பதிலும், நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் தரநிலைகளை, மாதிரிகள் பூர்த்தி செய்யாதபோது உரிய நடவடிக்கை எடுப்பதிலும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் முக்கிய பங்கை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் இந்த அறிக்கைக்கு நெஸ்லே இந்தியா நிறுவனம் உடனடியாக விளக்கம் அளித்துள்ளது.

தங்கள் நிறுவனத்தின் ‘குறைந்த கொழுப்புள்ள பால் சார்ந்த ஒயிட்னர்’ முற்றிலும் பாதுகாப்பானது என்றும், அனைத்து அரசு விதிமுறைகளுக்கும் உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

பாலில் இயற்கையாகவே பாஸ்பரஸ் (Phosphorus) உள்ளதாகவும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படியே தயாரிப்பு பாதுகாப்பாக இருப்பதாகவும் நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவு ஆய்வாளரின் ஆய்வகம் இயற்கையான பாஸ்பரஸையும், சேர்க்கப்பட்ட பாஸ்பரஸாகக் கணக்கிட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக நெஸ்லே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாகத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் தரவுகளையும் அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளதாகக் கூறியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, குழந்தைகளுக்கான 'NAN Excella Pro Stage 1', 'Lactogen Pro 1' மற்றும் 'Follow-up Formula' ஆகிய உணவுப் பொருட்களில் விதிமீறல் ஈடுபட்டதாக நெஸ்லே இந்தியா நிறுவனத்திற்கு எதிராக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மூன்று தனித்தனி சட்டப்பூர்வ வழக்குகளைப் பதிவு செய்திருந்தது.

இதையும் படியுங்கள்:
பெற்றோர்கள் பீதி..! குழந்தைகளுக்கு நெஸ்லே பவுடர் பால் தர வேண்டாம் - சவுதி அரசு எச்சரிக்கை..!
Nestle baby food

இந்தச் சூழலில், அந்நிறுவனத்தின் 'Low Fat Dairy Whitener' விற்பனைக்கும் தற்போது தடை விதிக்கப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்த சில மாதங்களாக பல்வேறு முக்கிய உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் மீது கடுமையான தடைகளையும், புதிய கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.

சமீபத்தில், போலியான 'அனலாக் பனீர்', டாபரின் 27 தயாரிப்புகள், பார்ச்சூன் எண்ணெய், எவரெஸ்ட் மசாலா, எல்.ஜி. பெருங்காயம் மற்றும் ஓல்ட் மாங்க் உள்ளிட்ட மதுபான பிராண்டுகளின் விற்பனைக்கும், தேன் மற்றும் நெய் பாக்கெட்டுகளில் '100% Pure' அல்லது '100% Natural' என்ற விளம்பர லேபிள்களைப் பயன்படுத்த டாபர் போன்ற நிறுவனங்களுக்கு FSSAI தடை விதித்திருந்தது.

இதையும் படியுங்கள்:
எவரெஸ்ட், எல்ஜி பெருங்காயத்தூள் தரமற்றவை: விற்பனைக்கு தடை விதித்தது FSSAI..!
Nestle baby food

அதேபோல் 'கேரஜீனன்' (Carrageenan) மற்றும் Nilgiri Oil & Allied Industries நிறுவனத்தின் 'ஷாலிமார் செஃப் மல்லித்தூள்' ஆகியவற்றைச் சந்தையிலிருந்து உடனடியாகத் திரும்பப் பெறவும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com