தாய்ப்பாலுக்கு நிகரான சத்தா? நெஸ்லேவின் விளம்பரத்தை நம்பி ஏமாறாதீங்க.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய அரசு!

குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக நெஸ்லே இந்தியா (Nestlé India) நிறுவனத்திற்கு எதிராக FSSAI வழக்கு பதிவு செய்துள்ளது.
பால் பவுடர்
பால் பவுடர்AI iMage
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக நெஸ்லே இந்தியா (Nestlé India) நிறுவனத்திற்கு எதிராக மூன்று தனித்தனி சட்டப்பூர்வ வழக்குகளை (Adjudication cases) பதிவு செய்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, மும்பை பங்குச்சந்தையில் நெஸ்லே இந்தியாவின் பங்குகள் சுமார் 2% வரை (செப்டம்பர் 18) சரிவைச் சந்தித்தன.

நெஸ்லே இந்தியா (Nestle India) நிறுவனம் தனது லாக்டோஜன் ப்ரோ 1 (Lactogen Pro 1) மற்றும் NAN எக்செல்லா ப்ரோ ஸ்டேஜ் 1 (NAN Excella Pro Stage 1) ஆகிய குழந்தைகளுக்கான பால் பவுடர் தயாரிப்புகளில் இந்த விளம்பரக் கோரிக்கைகளை முன்வைத்தது.

தற்போது இந்த விளம்பரப் பிரச்சாரம் மற்றும் தயாரிப்பு உரிமைகோரல்கள் தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

எக்செல்லா ப்ரோ ஸ்டேஜ் 1 (NAN Excella Pro Stage 1) - இது குழந்தைகளுக்கான ஆரம்பநிலை பால் உணவு. இதில் தாய்ப்பாலில் இயற்கையாகக் காணப்படும் சர்க்கரை மூலக்கூறுகளை ஒத்த "5 HMOs" (Human Milk Oligosaccharides) இருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது. இதில் உள்ள '5 HMOs' 'Whey Protein' என்ற விளம்பர கூற்றுகள் விதிமுறைகளுக்கு எதிரானவை.

லாக்டோஜன் ப்ரோ 1 (Lactogen Pro 1)- இந்தக் குழந்தைகளுக்கான பால் பவுடரில் உள்ள வே புரோட்டீன் (Whey Protein) ‘எளிதில் ஜீரணமாகக்கூடியது’ (easy to digest) என்ற விளம்பர வாசகத்தை நெஸ்லே பயன்படுத்தியிருந்தது. இது நுகர்வோரை ஈர்க்கும் வகையில் தவறாக வழிகாட்டக்கூடிய விளம்பரம் என கண்டறியப்பட்டுள்ளது.

நெஸ்லேவின் மற்றொரு தயாரிப்பான ஃபாலோ-அப் ஃபார்முலா (Follow-up Formula) பால் பவுடர் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அதில் இருக்க வேண்டிய பயோடின் (Biotin - Vitamin B7) சத்தின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தர அளவை விடக் குறைவாக இருந்தது ஆய்வகச் சோதனையில் கண்டறியப்பட்டது.

இரண்டாவது முறை மறுபரிசீலனை செய்யப்பட்ட போதும் இது தரக்குறைவானது என உறுதி செய்யப்பட்டதையடுத்து அதுவும் இந்த சட்ட நடவடிக்கைக்குள் சேர்க்கப்பட்டுள்ளது.

விசாரணையில் விற்பனையை அதிகரிக்கும் வகையிலான விளம்பரக் கூற்றுகள் மற்றும் பிரசாரங்களை தடுக்கும் விதிகள் மீறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரண்டு தயாரிப்புகளின் விளம்பரங்களும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள்) ஒழுங்குமுறைகள், 2020-ன் பிரிவு 4(2) மற்றும் 1992-ன் IMS சட்டப் பிரிவு 3-ன் படி, குழந்தைகளின் உணவுப் பொருட்களை விளம்பரப்படுத்துதல் மற்றும் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் விளம்பரப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான விதிமுறைகளை மீறியுள்ளதாக FSSAI தெரிவித்துள்ளது.

ஈ-காமர்ஸ் (e-commerce)தளங்களில் உள்ள இந்தத் தயாரிப்புகளின் விளம்பரப் பொருட்களை ஆய்வு செய்த FSSAI, ‘நெஸ்லே இந்தியா’ நிறுவனத்திற்கு எதிராக விதிமீறல்கள் தொடர்பாக 3 தனித்தனி சட்டப்பூர்வ வழக்குகளைத் (Adjudication cases) தொடுத்துள்ளது.

FSSAI
FSSAI image credit-kanakkupillai.com

ஈ-காமர்ஸ் தளங்களில் இந்தத் தயாரிப்புக்காக விளம்பரப்படுத்தப்பட்ட "5 HMOs" மற்றும் "Whey Protein" (வே புரோட்டீன் எளிதில் ஜீரணமாகும்) போன்ற வாசகங்கள், நுகர்வோரைக் கவரும் வகையில் அமைந்த விளம்பரக் கட்டுப்பாடுகளை மீறும் வகையில் உள்ளதாக FSSAI சுட்டிக்காட்டியுள்ளது.

குழந்தை உணவுகளின் விற்பனையை அதிகரிப்பதற்கான இத்தகைய விளம்பரங்கள் சட்டம் 2020-இன் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளதாக FSSAI குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் FSSAI-ன் குற்றச்சாட்டை மறுத்துள்ள நெஸ்லே நிறுவனம், தங்களின் தயாரிப்புகள் அனைத்தும் இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டே தரம் மற்றும் லேபிளிங் செய்யப்பட்டுள்ளன என்றும், இந்த லேபிள்கள் முன்பே FSSAI நிபுணர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது. தங்களின் லேபிளில் உள்ள தகவல்கள் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலான உண்மைத் தகவல்களே என்று கூறி, இது குறித்த விரிவான பதிலை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையே இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்த சில மாதங்களாக பல்வேறு முக்கிய உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் மீது கடுமையான தடைகளையும், புதிய கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
மக்களுக்கு அடுத்த ஷாக்..! DABUR-ஐ தொடர்ந்து Fortune எண்ணெய்க்கு அபராதம் விதித்த FSSAI..!!
பால் பவுடர்

சமீபகாலமாக 'அனலாக் பனீர்' (Fake Paneer), DABUR, Fortune Oil, பான் மசாலா பேக்கேஜிங், டாபர் நிறுவனத்தின் 27 தயாரிப்புகள், Diageo, Inbrew, Old Monk போன்ற மதுபான பிராண்டுகள், எவரெஸ்ட், எல்ஜி பெருங்காயம் போன்ற பொருட்களை விற்பனை செய்ய FSSAI தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Aquagri Processing நிறுவனத்தின் உணவு சேர்க்க பொருளான 'கேரஜீனன்' (Carrageenan) மற்றும் Nilgiri Oil & Allied Industries நிறுவனத்தின் 'ஷாலிமார் செஃப் மல்லித்தூள்' (Coriander Powder) ஆகியவற்றை உடனடியாக சந்தையிலிருந்து திரும்பப் பெற (Recall) உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
எவரெஸ்ட், எல்ஜி பெருங்காயத்தூள் தரமற்றவை: விற்பனைக்கு தடை விதித்தது FSSAI..!
பால் பவுடர்

டாபர் (Dabur) போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களின் தேன், நெய் உள்ளிட்ட பொருட்களுக்கு "100% Pure" அல்லது "100% Natural" என்ற லேபிள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com