தொடர்ந்து சரியும் தங்கம் விலை: நகையாக வாங்குவது லாபமா..? நஷ்டமா? முழு விவரம்..!

தங்கம் விலை சரிந்துள்ள இந்த நேரத்தில் நகையாக வாங்குவதா அல்லது டிஜிட்டல் முறையில் முதலீடு செய்வதா? விரிவான அலசல்.
gold purchase
gold purchaseAI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

இப்போது இருக்கக்கூடிய பொருளாதார சூழல், நாடுகளிடையே நடக்கும் போர் பதற்றம், அதனால் வரக்கூடிய விளைவுகள் என இதுபோன்ற பல பிரச்சனைகள் நம்மை சூழ்ந்திருக்கும் நிலையில் தங்கத்தில் முதலீடு செய்வது சரியா அல்லது தங்கத்தை ஆபரணங்களாக வாங்குவது சரியா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க.

தற்போதைய சந்தை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ12,695-க்கும், ஒரு சவரன் ரூ.960 குறைந்து ரூ.1,01,560-க்கும் விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,480 குறைந்துள்ளது.

தங்கம் விலை உயரும் என்ற கணிப்புக்கு எதிராக விலை சரிந்து வருவது, இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 2026-ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மீண்டும் தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே சரியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. ஏற்கனவே பலமுறை தங்கம் விலை குறைந்து, ரூ.1 லட்சத்துக்கு அருகே வந்த போதெல்லாம் திடீரென உயர்ந்தது. ஆனால் இம்முறை அப்படி நடக்காது என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

உலக அளவில் தங்கம் என்பது ஒரு பாதுகாப்பான முதலீடாகவும், எப்போதுமே லாபம் தரும் ஒரு சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியக் குடும்பங்களில் தங்கத்திற்கு என்று ஒரு தனித்துவமான கலாச்சார மற்றும் பொருளாதார மதிப்பு உண்டு. ஆனால், தங்கம் உண்மையில் ஒரு பாதுகாப்பான பாதுகாப்புக் கவசமாக (Safe-haven asset) செயல்பட்டாலும், அது நேரடியாக எந்த வருமானத்தையும் ஈட்டித் தராத ஒரு சொத்து என்பதே பொருளாதார வல்லுநர்களின் பொதுவான கருத்தாகும்.

தங்கத்தை பங்குச் சந்தையில் (Share market) வாங்கினால் அதில் இருந்து வருமானம் (Income/Returns) ஈட்ட முடியும். நிலையான வைப்புத்தொகையில் (fixed depositive) போட்டால் நிலையான வருமானம் வரலாம். ஆனால் ஆபரணத் தங்கத்தில் அவ்வாறு வராது.

பொதுவா தங்கம் விலை குறைவாக இருக்கும் போது வாங்குவதும், விலை அதிகரிக்கும் போது அதை விற்பதும் தான் முதலீட்டு வியூகம். யாராக இருந்தாலும் இதை தான் செய்வார்கள்.

மக்கள் தங்கத்தை ஒரு சிறந்த முதலீடாகப் பார்ப்பதற்குக் காரணம் அதன் விலை உயர்வு மட்டுமே. ஆனால், அந்த விலை உயர்வுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணி இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதுதான். தற்போதைய நிலவரப்படி தங்கம் விலை குறைவதற்கு முக்கிய காரணம் அமெரிக்க டாலர் வலுவான நிலையிலேயே நீடிப்பதாகும்.

அதாவது, சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் குறியீடு (DXY) 102.40 என்ற அளவைத் தாண்டி வலுவாக உள்ளது. டாலர் மதிப்பு அதிகமாக இருக்கும் போது தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் அதை விற்று டாலரில் முதலீடு செய்வார்கள். இவ்வாறு செய்யும்போது தானாகவே தங்கம் அதிகளவில் கிடைக்கும் நிலை ஏற்பட்டு அதன் விலை அதிரடியாக குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
‘கோல்டன் சான்ஸ்’.. மிஸ் பண்ணிடாதீங்க.! 𝟮 நாட்களில் ரூ.1,920 சரிந்த தங்கம்!
gold purchase

அமெரிக்காவில் வட்டி விகிதம் எப்பொழுதெல்லாம் அதிகமாக இருக்கிறதோ அப்போது எல்லாம் தங்கம் விலை குறைவும்.

இந்த வட்டி விகித உயர்வு எதிர்பார்ப்பு அதிகரிப்பதே தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணம் என வர்த்தக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

வரும் நாட்களில் தங்கம் விலையை பொறுத்தவரை, குறுகிய காலத்தில் சரிவு தொடரும் வாய்ப்பு இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக அமெரிக்க பணவீக்கம், டிசம்பர் மாத வட்டி விகித முடிவு, டாலர் மதிப்பு ஆகியவை தங்கத்தின் அடுத்தகட்ட விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணகளாக உள்ளன.

அதேநேரம் வட்டி உயர்வு எதிர்பார்ப்பு குறைந்தாலோ, உலகளாவிய பொருளாதார அல்லது புவிசார் பதற்றங்கள் அதிகரித்தாலோ தங்கம் மீண்டும் விலை உயர வாய்ப்புக உள்ளது.

அந்த வகையில் தங்கம் வாங்குவதிலும், அதில் முதலீடு செய்வதிலும் பல மறைமுகச் சிக்கல்களும் இழப்புகளும் உள்ளன. இந்தியச் சூழலில் தங்கத்தை ஒரு முதலீடாகப் (தங்கம் முதலீடு) பார்ப்பதில் உள்ள நன்மைகள் மற்றும் அதற்குப் பின்னால் மறைந்துள்ள பொருளாதாரச் சிக்கல்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

நீங்கள் நிலத்திலோ அல்லது வங்கிக் வைப்பு நிதியிலோ முதலீடு செய்தால், அது உங்களுக்குத் தொடர்ச்சியான வருமானத்தையோ அல்லது வட்டியையோ தரும். ஆனால் தங்கம் அவ்வாறு எந்தவொரு மாதாந்திர அல்லது வருடாந்திர வருமானத்தையும் தருவதில்லை.

தங்கம் விலை|தங்கம் முதலீடு
தங்கம் விலை|தங்கம் முதலீடு

பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கு மாற்றாக, ஒரு முதலீட்டுத் தொகுப்பில் (Portfolio) சமநிலையை உருவாக்கத் தங்கம் உதவுகிறது.

தங்கம் என்பது எவ்வித வட்டியும் தராத ஒரு சொத்து (Interest-yielding asset அல்ல). மேலும், சந்தையில் வட்டி விகிதங்கள் மற்றும் பாண்ட் (Bond) வருமானம் உயரும்போது தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.

தங்கத்தின் விலை உயர்வது போல் தோன்றினாலும், அது பெரும்பாலும் நமது நாட்டின் நாணயத்தின் மதிப்பு (Inflation / Currency devaluation) குறைவதையே காட்டுகிறது.

தங்கத்தை வீடுகளில் பாதுகாப்பாக வைத்திருப்பது பெரிய அச்சுறுத்தலாகும். திருட்டுப் பயம் மற்றும் வங்கி லாக்கர் (Locker) வசதிக்கான கட்டணச் செலவுகள் இதில் அடங்கும்.

பங்குகள் (Dividends) அல்லது வங்கி வைப்புநிதி (Interest) போல, தங்கம் எந்தத் தொடர் வருமானத்தையும் உற்பத்தி செய்வதில்லை. இதன் விலை உயர்வு முழுக்க முழுக்கத் தேவை மற்றும் விநியோகத்தை மட்டுமே சார்ந்துள்ளது.

இந்தியாவில் தங்கத்தை ஆபரணங்களாக வாங்கும்போது 10% முதல் 25% வரை செய்கூலி மற்றும் சேதாரமாக வீணாகிறது. ஆனால், அதே நகையை விற்பனை செய்யும்போது இந்தச் செய்கூலி மற்றும் சேதாரத்திற்கான தொகை திரும்பக் கிடைப்பதில்லை. இதனால் நகையாக வாங்கும் போது அதன் மதிப்பில் பெரும் பகுதியை நாம் இழந்துவிடுகிறோம்.

இதையும் படியுங்கள்:
இன்ப அதிர்ச்சி.!! நம்பவே முடியல... 4 நாட்களில் ரூ.4,480 சரிந்த தங்கம்.! ரூ.5,000 சரிந்த வெள்ளி.!
gold purchase

எனவே, ஆபரணத் தங்கத்தை ஒரு முதலீடாகக் கருதுவது முற்றிலும் தவறானது.

தங்கம் வாங்கும்போது 3% ஜிஎஸ்டி (GST) செலுத்த வேண்டும். மேலும், லாக்கர் வாடகை மற்றும் காப்பீட்டுச் செலவுகள் முதலீட்டின் நிகர லாபத்தைக் குறைக்கின்றன.

அதிக அளவில் ரொக்கம் கொடுத்து தங்கம் வாங்குவதில் சட்டக் கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாங்கும் போது PAN கார்டு விவரங்கள் மற்றும் ரசீதுகள் அவசியம். ரசீது இல்லாமல் தங்கம் வாங்கினால் பிற்காலத்தில் விற்பதிலோ அல்லது சட்டரீதியான சிக்கல்களிலோ பெரும் பாதிப்பு ஏற்படும்.

இந்தியா தனது தங்கத் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்வதால், இது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் (Foreign Exchange Reserves) அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் உலகளாவிய போர் பதற்றங்கள் நிலவும் சூழலில், தங்கத்தை டிஜிட்டல் அல்லது பங்குச்சந்தை (Gold ETF / Mutual Funds) வடிவில் முதலீடு செய்வதே லாபகரமானது மற்றும் பாதுகாப்பானது.

இதையும் படியுங்கள்:
அவசரப்பட்டு வாங்காதீர்கள்: தங்கம் வெள்ளி முதலீடு செய்முன் இதைத் தெரிந்துகொள்ளுங்கள்!
gold purchase

நகைகள் அல்லது நாணயங்களாகப் (Physical Gold) பிசிகலாக வாங்குவதை விட, முதலீட்டு நோக்கத்திற்காக டிஜிட்டல் முறைகளைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.