குட் நியூஸ்..!காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த ஆபரண தங்கம் விலை..!

ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை!: 10 நாட்களில் சவரனுக்கு ரூ.8,240 உயர்வு
தங்கம் விலை
தங்கம் விலைAI Image
Updated on

தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே போகிறது. இனியாவது தங்கம் விலை குறையுமா என எதிர்பார்ப்பில் மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.அந்த அளவிற்கு தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு கடந்த சில தினங்களாக உயர்ந்து கொண்டு செல்கிறது.

தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 1 லட்சத்துக்கும் கீழே சரியும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது விலை உயர்வு.

பொதுவாக அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் அந்நாட்டின் பொருளாதாரம் உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது. அமெரிக்க டாலர் மதிப்பு வலுவாக இருந்தபோது, முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் அதிக லாபம் தருகிற பிற முதலீடுகளின் மீது கவனம் செலுத்தி வந்தனர். அதனால் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்தது.

ஆனால், தற்போது அமெரிக்காவில் வெளியான வேலைவாய்ப்பு அறிக்கையானது தங்கம் விலை ஏற்றத்திற்கு வழிவகுத்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அங்கு வேலைவாய்ப்பு குறைந்து வருவதால், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு குறைந்திருக்கிறது. இதன் காரணமாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

பாதுகாப்பான முதலீடு ஒன்றாக பார்க்கப்படுகிறது தங்கம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தங்கத்தின் புழக்கம் அதிகம். மேலும், நமது பாரம்பரியம் மற்றும் கலாசார நிகழ்வுகளில் முக்கிய இடம் வகிக்கிறது. அதனாலேயே நமது மக்களிடையே தங்கம் விலை மாற்றம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு வரை தங்கம் விலை இனிமேல் ஏறுமுகத்தில் தான் இருக்கப்போகிறது. தங்கம் என்பது வெறும் கனவு என்ற நிலை தான் இருந்தது. ஆனால் அதனை அமெரிக்கா - ஈரான் போர் மாற்றியமைத்தது. மடமடவென சரிந்த விலையால் வாடிக்கையாளர்கள் மிகுந்த உற்சாகமடைந்தாலும், தங்கத்தின் மீதான ஈடுபாடு குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக, கடந்த ஆண்டில் கடும் விலையேற்றம் இருந்தபோது கூட தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டிவந்தவர்கள், இப்போது வாங்கலாமா அல்லது வேண்டாமா? என்ற குழப்பத்திலேயே இருப்பதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

கடைசி 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது தெரியுமா..? சவரனுக்கு ரூ. 8,240 உயர்ந்திருக்கிறது.

gold price
gold rate

நேற்று (ஆகஸ்ட் 10) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,950-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 300 அதிகரித்து, ரூ. 14,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 120 குறைந்து சவரன் ரூ. 1,11,600-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் ரூ. 2,400 அதிகரித்து ரூ. 1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 11) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்து 1,14,000 ரூபாய்க்கும், கிராமுக்கு 300 ரூபாய் அதிகரித்து 14,250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது. ஒரு சவரன் 1,13,200க்கும், ஒரு கிராம் 100 ரூபாய் குறைந்து 14,150க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை :

வெள்ளி விலை கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 2,60,000 ரூபாய்க்கும், கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.வெள்ளி விலையில் மாலையில் எந்த மாற்றமும் இல்லை.

இதையும் படியுங்கள்:
ஷாக்.! ஒரே நாளில் ரூ.2400 உயர்ந்த தங்கம்.. ரூ.10,000 உயர்ந்த வெள்ளி..!
தங்கம் விலை
இதையும் படியுங்கள்:
அறிவால் உலகை வெல்வது எப்படி? சட்ட மேதை அம்பேத்கரின் வைர வரிகள்!
தங்கம் விலை
logo
Kalki Online
kalkionline.com