தங்கம் இப்போ வாங்கலாமா? இந்த 3 தேதிகளில் தங்கம் விலையில் நடக்கப்போகும் ‘ட்விஸ்ட்’!

இந்த மூன்று முக்கியத் தேதிகளே தங்கத்தின் அடுத்தகட்ட போக்கைத் தீர்மானிக்கப் போகின்றன எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Gold price
Gold price
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கம் விலை, தற்போது முப்பத்தி ஒன்று புள்ளி ஏழு சதவீதம் வரை மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.

நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகம் சரிந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தங்கம் விலை தொடர் சரிவைக் கண்டு வருகிறது. கடந்த 16 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 15,360 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை திடீரென அதிரடியாக உயர்ந்தது.

அதன்படி, நவம்பர் 23-ம்தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,600க்கும், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.115 உயர்ந்து ரூ.11,715-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.920 உயர்ந்து, ரூ.93,720-க்கு விற்பனையாகிறது. கடந்த 16 நாட்களில் சவரனுக்கு ₹13,560 வரை குறைந்த பிறகே இந்தச் சிறிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே திடீரென எகிறத் தொடங்கியிருக்கும் தங்கம் விலையால், இப்போதே நகை வாங்குவதா இல்லை விலை குறையும் வரை காத்திருப்பதா என்ற தவிப்பில் மக்கள் உள்ளனர். அவர்களின் இந்தக் குழப்பத்திற்கு விடையளிக்கும் விதமாக, இன்று (நவம்பர் 25), டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 9 ஆகிய மூன்று முக்கியத் தேதிகளே தங்கத்தின் அடுத்தகட்ட போக்கைத் தீர்மானிக்கப் போகின்றன எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவது, கடன் பத்திரங்களின் வருவாய் உயர்வு மற்றும் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவைதான் தங்கம் விலை சரிய முக்கியக் காரணமாக உள்ளன.

தங்கம் விலை
தங்கம் விலை

இன்று (நவம்பர் 25), அமெரிக்க மத்திய வங்கி (US Fed) மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கும் பணவீக்க அறிக்கை வெளியாகிறது. உணவு மற்றும் எரிசக்தி விலைகளைத் தவிர்த்து வெளியிடப்படும் இந்த அறிக்கை, அமெரிக்காவின் உண்மையான விலைவாசி அழுத்தத்தை உலகிற்குக் காட்டும். பணவீக்கம் அதிகமாக இருந்தால் வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது; இது தங்கம் விலையை மேலும் குறைக்கலாம். அதாவது வங்கி வைப்பு நிதியைப் போலத் தங்கம் வட்டி தராது என்பதால், வட்டி விகிதம் உயரும்போது தங்கத்தின் மீதான ஈர்ப்புக் குறைகிறது.

வரும் டிசம்பர் 4-ம்தேதி அமெரிக்காவின் வேலைவாய்ப்புச் சந்தை நிலவரம் வெளியாகிறது.

இதையும் படியுங்கள்:
தங்கம் விலை வீழ்ச்சி: நகைக் கடன் வாங்கியவர்களுக்கு காத்திருக்கும் சட்ட, நிதி சிக்கல்கள் என்ன?
Gold price

அங்கு வேலைவாய்ப்புகள் வலுவாக இருந்தால் வட்டி விகிதக் கட்டுப்பாடுகள் தொடரும் என்பதால் தங்கம் விலை சரியும், மாறாக வேலைவாய்ப்பு குறைந்திருந்தால் தங்கம் விலை உயரத் தொடங்கும்.

வேலைவாய்ப்பு வலுவாக இருந்தால் டாலர் மதிப்பு உயர்ந்து, தங்கத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கும்.

இந்த இரண்டு மிகப்பெரிய நிகழ்வுகளைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் 9-ம்தேதி உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க மத்திய வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்த இறுதி முடிவு (US Fed) அறிவிக்கப்பட உள்ளது. வட்டி விகிதத்தை 0.25% உயர்த்துவதற்கான வாய்ப்பு 96% வரை உள்ளதாகக் கணிக்கப்படுகிறது.

மேலும் அன்று எடுக்கப்படும் முடிவும், எதிர்கால வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகளும்தான் தங்கம் விலையைத் தீர்மானிக்கும்.

இந்தியாவில் தங்கம் விலையானது சர்வதேசச் சந்தை நிலவரம், ரூபாய் மற்றும் டாலருக்கு இடையிலான மதிப்பு, இறக்குமதி வரி மற்றும் அமெரிக்கா – ஈரான் போர்ப் பதற்றம் ஆகியவற்றைப் பொறுத்தே மாறுபடுகிறது.

இதையும் படியுங்கள்:
​மீண்டும் ஷாக்.! 2 நாட்களில் ரூ.2,000 உயர்வு! இனி தங்கம் வாங்கறது அவ்ளோ ஈஸி இல்ல!
Gold price

எனவே, தற்போதைய விலையே குறைந்தபட்ச விலை என நினைத்து அவசரப்படாமல், இந்த மூன்று முக்கியத் தேதிகளில் வெளியாகும் முடிவுகளைக் கவனித்து, நிபுணர்களின் ஆலோசனையோடு முதலீடு செய்வதே புத்திசாலித்தனமாக இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.