குட் நியூஸ்..! உங்கள் தங்கம் உண்மையானதா? போலியா..? இனி வீட்டிலிருந்தே கண்டறியலாம்..!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தங்க நகைகளில் போலி ஹால்மார்க் (Hallmark) முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
Gold Purity Signs
Gold Purity Signsimage credit-ntvtelugu.com
Updated on

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இயங்கும் பிரபல நகைக்கடை ஒன்றில் போலி ஹால்மார்க் முத்திரை கொண்ட தங்க நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் ஆசையுடன் தங்க நகைகளை வாங்கும் பெண்களிடையே அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியது. மேலும் அந்த கடையில் இருந்து கிட்டதட்ட நான்கரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரை அச்சிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தங்கத்திற்கு ஹால்மார்க் (Hallmark) இருந்தால் தான் அது ஒரிஜினல், கலப்படமற்ற தங்கம். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தங்க நகைகளில் போலி ஹால்மார்க் (Hallmark) முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

6 இலக்க HUID (Hallmark Unique Identification) எண் இல்லாதது, தெளிவற்ற முத்திரை மற்றும் சந்தேகத்திற்கிடமான விலைக்குறைப்பு ஆகியவை போலி ஹால்மார்க் நகைகளின் முக்கிய அடையாளங்களாகும்.

உங்களிடம் உள்ள தங்கம் நகைகளை சுத்தமானதா அல்லது கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் சுலபமான முறையில் அறிந்து கொள்ள முடியும். இதற்காக உங்களிடம் உள்ள தங்க நகைகளை எல்லாம் தூக்கிக்கொண்டு நகைக்கடைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தே அறிந்து கொள்ளமுடியும். வாங்க அது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
வெள்ளி ஹால்மார்க் : சாமானியர்களுக்கு லாபமா?... நஷ்டமா?
Gold Purity Signs

BIS Care செயலி மூலம் தங்க நகை மீதான 6 இலக்க HUID எண்ணை சரிபார்க்க வேண்டும், இதுவே மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமாகும்.

முதலில் உங்கள் செல்போனில் BIS CARE APP என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் verify HID என்ற ஆப்ஷன் உள்ளே சென்று நீங்கள் வாங்கிய தங்க நகையின் HID நம்பரை அதில் பதிவு செய்து Search கொடுத்தால் உங்கள் தங்க நகையின் உடைய முழுமையான விவரமும் அதில் வந்து விடும். நீங்கள் உங்கள் தங்க நகையை எந்த கடையில் வாங்கினீர்கள், வளையளா, கம்மலா, செயினா, நீங்கள் நகை வாங்கிய நாள் மட்டுமின்றி உங்கள் தங்க நகையின் பியூரிட்டி (Purity)முதற்கொண்டு அனைத்து விவரங்களும் அதில் வந்து விடும்.

அதேசமயம் BIS Hallmark Verification செய்யும் போது error அல்லது no result அல்லது NO such HUID Number exist என்று வந்தால் போலி ஹால்மார்க் நகைகள் குறித்து காவல் துறை அல்லது BIS-ல் complaint@bis.gov.in மூலம் புகார் அளிக்கலாம்.

இந்த ஆப் நகைக்கு மட்டும் கிடையாது. நீங்கள் வாங்கும் BSI சர்டிபிகேட் இருக்கும் எல்லா பொருட்களையுமே ஒரிஜினலா இல்லையா என்பதை இந்த ஆப்பில் போய் தெரிந்து கொள்ள முடியும்.

அதேபோல் பொதுமக்கள் தங்க நகைகளை வாங்க செல்லும்போது, நீங்கள் வாங்கும் தங்க நகையின் 916 ஹால்மார்க் முத்திரையின் அருகில் இருக்கும் எண்ணை BIS CARE செயலியில் பதிவு செய்து பார்த்தால் கடையின் பெயர், உரிய உரிமம் பெற்று உள்ளாரா? என்ற தகவல்கள் அனைத்தும் வந்து விடும். அதனை நீங்கள் வாங்கும் நகைக்கடையில் இருந்தே அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு சரியான தகவல்கள் வரவில்லை என்றால் பொதுமக்கள் உடனடியாகஇந்திய தர நிர்ணய ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று இந்திய தர நிர்ணய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
நகை வாங்க போறீங்களா? கொஞ்சம் நில்லுங்க... இத படிங்க!
Gold Purity Signs

மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படும் நகைகள் பெரும்பாலும் போலியாக இருக்கும். எனவே பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க அங்கீகரிக்கப்பட்ட, BIS உரிமம் பெற்ற நகைக்கடைகளில் மட்டுமே வாங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com