வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்.! ஜனவரி 1 முதல் இந்த சேவை கிடைக்காது... உடனே இதைச் செய்யுங்க!

ஜனவரி 1 முதல் அமலாகும் புதிய RBI விதி; பரிவர்த்தனை விவரங்களைப் பெற வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டிய முக்கிய மாற்றம்.
புதிய விதிமுறை
RBI Rules
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு சேவையையும் இலவசமாக வழங்குவதில்லை. ஏடிஎம் கார்டு பயன்படுத்துவது முதல் எஸ்எம்எஸ் அலெர்ட் வரை அனைத்திற்குமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற 2027 ஜனவரி 1 முதல் ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள் அமலுக்கு வரவுள்ளன. இதன்படி ரூ.500-க்கும் குறைவான பணப் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் எஸ்எம்எஸ் அலெர்ட் அனுப்பினால் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்தப் புதிய விதிமுறைகள் பொதுத்துறை மற்றும் அனைத்து தனியார் வங்கிகளுக்கும் பொருந்தும். இந்நிலையில் யுபிஐ பரிவர்த்தனையில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது HDFC வங்கி.

இதன்படி ரூ.500 மற்றும் அதற்கும் குறைவான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு எஸ்எம்எஸ் அலெர்ட் அனுப்புவதை HDFC வங்கி முற்றிலுமாக நிறுத்துகிறது.

HDFC வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

* எஸ்எம்எஸ் அலெர்ட் நிறுத்தம்:

ரூ.1 முதல் ரூ.500 வரையிலான சிறிய மதிப்பு கொண்ட யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு, இனி மொபைல் வழியாக எஸ்எம்எஸ் அறிவிப்புகள் ஏதும் வராது. எஸ்எம்எஸ் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கும் நிலையில், எஸ்எம்எஸ் அனுப்புவதையே நிறுத்தியுள்ளது HDFC வங்கி. இருப்பினும் ரூ.500-க்கும் மேலான பணப் பரிவர்த்தனைகளுக்கு எஸ்எம்எஸ் அலெர்ட் எப்போதும் போல தொடரும்.

* மெயில் அலெர்ட்:

வங்கி வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனைத் தொகை எவ்வளவு என்றாலும், அனைத்து யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கும் இ-மெயில் அலெர்ட் எப்போதும் போலவே தொடர்ந்து அனுப்பப்படும். மேலும் HDFC வங்கி செயலி வழியாக பணப் பரிவர்த்தனை குறித்த புஷ் நோட்டிபிகேஷன்கள் தொடர்ந்து அனுப்பப்படும்.

எஸ்எம்எஸ் அலெர்ட்
SMS Alert
இதையும் படியுங்கள்:
கூட்டுறவு vs தனியார் வங்கி: ​1 கிராமுக்கு அதிக பணம் எங்கே? விண்ணப்பிக்கும் முன் 7 செக் லிஸ்ட்!
புதிய விதிமுறை

RBI விதிமுறை:

வருகின்ற 2027 ஜனவரி 1 முதல் இந்தியன் ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய வழிகாட்டுதல்கள் அமலுக்கு வரவுள்ளன. இதன்படி ரூ.500-க்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே எஸ்எம்எஸ் அலெர்ட் கட்டாயம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.1 முதல் ரூ.500 வரையிலான பணப் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் எஸ்எம்எஸ் அனுப்பினால், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் படியே தற்போது HDFC வங்கி புதிய விதியைக் கொண்டு வந்துள்ளது. இனி அடுத்தடுத்து மற்ற வங்கிகளும் இந்த மாற்றத்தைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் புதிய மாற்றத்தால் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைகளில் எவ்வித தடையும் ஏற்படாது.

இதையும் படியுங்கள்:
பழைய கம்பெனி பிஎஃப் பணத்தை எடுக்கலையா? முடங்கிய பணம் நேரா வங்கி கணக்கிற்கு வரும்: EPFO புது ரூல்ஸ்!
புதிய விதிமுறை

வங்கி வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

ரூ.500-க்கும் குறைவான சிறிய பணப் பரிவர்த்தனை குறித்த விவரங்களைத் தவறாமல் பெற வெண்டுமெனில், மெயில் ஐடியை வங்கிக் கணக்கில் இணைப்பது அவசியமாகும். அவ்வகையில் நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களோ, அந்த வங்கியில் சரியான இ-மெயில் ஐடி இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ஒருவேளை இமெயில் ஐடி இணைக்கப்படவில்லை எனில், முதல் வேலையாக வங்கிக் கணக்கில் இ-மெயில் ஐடியை அப்டேட் செய்து விடுங்கள்.

நெட் பேங்கிங் பயன்படுத்துபவர் என்றால், ஆன்லைனிலேயே இமெயில் ஐடியை இணைக்க விண்ணப்பிக்கலாம். இல்லையெனில் நேரடியாக வங்கிக் கிளைக்குச் சென்று இமெயில் ஐடியை இணைத்துக் கொள்ளுங்கள்.