பயிர்க் காப்பீடு செய்வது எப்படி? கடைசி தேதி நீட்டிப்பு.! முழு விவரம் இதோ.!

பிழையின்றி ஆன்லைனிலேயே விண்ணப்பித்து அரசு இழப்பீட்டுப் பாதுகாப்பைப் பெற முழுமையான எளிய வழிகாட்டி.
பயிர்க் காப்பீடு
Crop insurance
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

நாடு முழுவதும் சம்பா பருவத்திற்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வது அவசியமாகும். வெள்ளம், கனமழை மற்றும் புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் காலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டால், உரிய நிவாரணம் வழங்கப்படும். இதற்கு விவசாயிகள் முன்கூட்டியே பயிர்க் காப்பீடு செய்ய வேண்டியது அவசியமகும்.

இந்நிலையில் நடப்பு சம்பா பருவத்திற்கு பயிர்க் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 15 ஆக இருந்தது. இதற்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்கும் படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பயிர்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை கூடுதலாக 16 நாட்களுக்கு நீட்டித்துள்ளது அரசு. இதன்படி சம்ப பருவ பயிர்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி வரை விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்யலாம்.

தமிழ்நாட்டில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிர்களுக்கான பிரதமரின் விரிவான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் வருகின்ற டிசம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம், நெல் சாகுபடி பணிகள் மற்றும் சர்வர் தொழில்நுட்ப சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் ஒப்புதலோடு இந்தக் காலக்கெடு இன்று (நவம்பர் 11) நீட்டிக்கப்பட்டுள்ளது.

பயிர்க் காப்பீடு செய்யும் இடங்கள்:

* பொது சேவை மையங்கள் (CSC)

* தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACCS)

* தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளம் (PMFBY Portal).

தேவையான ஆவணங்கள்:

* ஆதார் அட்டை நகல்

* நடப்பு ஆண்டிற்கான சிட்டா / அடங்கல்

* வங்கி சேமிப்புக் கணக்கு

* நில வரைபடம்

* விதைப்புச் சான்றிதழ்

Crop Insurance For Paddy
crop insurance
இதையும் படியுங்கள்:
‘கோல்டன் சான்ஸ்’.. மிஸ் பண்ணிடாதீங்க.! 𝟮 நாட்களில் ரூ.1,920 சரிந்த தங்கம்!
பயிர்க் காப்பீடு

விண்ணப்பிக்கும் முறை:

1. முதலில் மத்திய அரசின் பயிர்க் காப்பீட்டு போர்ட்டலுக்கு (pmfby.gov.in) செல்ல வேண்டும்.

2. ​முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Farmer Corner’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

3. ‘Guest Farmer’ அல்லது புதிய பயனராகப் பதிவு செய்வதற்கு மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் உள்நுழையவும். பெயர், முகவரி, அடிப்படை விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவு செய்யவும்.

4. அடுத்ததாக மாநிலத்தின் பெயர், மாவட்டம், வருவாய் கிராமம், சர்வே எண் மற்றும் சாகுபடி செய்யும் சம்பா பருவ நெல் வயல் பரப்பளவு உள்ளிட்ட ​பயிர் விவரங்களை உள்ளிடவும். ​

5. சிட்டா அடங்கல், ஆதார் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு பாஸ்புக் நகல்களை PDF அல்லது JPEG வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

6. கடைசிய்க ​விவசாயிகள் காப்பீட்டுக் கட்டணத்தை UPI அல்லது Net Banking வழியாகச் செலுத்தி விட்டு, ரசீதைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் பயிர்க் காப்பீடு செய்ய முடியாத விவசாயிகள், பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பதிவு செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
இனி விவசாய அடையாள எண் தேவையில்லை.! பயிர் காப்பீட்டில் பெரிய மாற்றம்.!
பயிர்க் காப்பீடு