பழைய பைக், கார் வாங்க போறீங்களா? ஆன்லைனில் RC மாற்றுவது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன..?

vehicles Online RC Transfer
vehicles Online RC Transferimage credit-linkedin.com
Published on

இந்தியாவில் முன்பெல்லாம் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது கார், பைக் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நாட்டில் பைக் மற்றும் கார்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. புதிதாக வாகனம் வாங்க முடியாதவர்கள் கூட தற்போது பழைய வாகனங்களை வாங்கி உபயோகப்படுத்த தொடங்கி விட்டனர். பழைய வாகனங்களை வாங்கும் போதும், விற்பனை செய்யும் போதும் சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் வாங்கிய பழைய வாகனத்தின் உரிமையை மாற்றாமல் இருந்து விபத்து நேரிட்டால், வாகனத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் RC இல்லை என்றால், பழைய உரிமையாளரே சட்ட சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நீங்கள் பழைய கார் அல்லது பைக் வாங்க முடிவு செய்து உள்ளீர்கள் அல்லது உங்கள் வாகனத்தை வேறொருவருக்கு விற்பனை செய்வதாக இருந்தால் RC புக்கில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். முன்பெல்லாம் RC மாற்றுவது மிகப்பெரிய செயல்முறையாக இருந்தது. அதற்காக இரண்டு அல்லது மூன்று நாட்கள் அலைய வேண்டியிருக்கும். ஆனால், தற்போது (2026) வாகன உரிமையை மாற்றுவது (RC Transfer) ஆன்லைன் மூலம் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் RCயை ஆன்லைனில் மாற்றம் செய்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போறீங்களா? காவல்துறையிடம் மாட்டாமல் இருக்க இத செக் பண்ணுங்க!
vehicles Online RC Transfer

வாகன உரிமையை மாற்றுவதற்கு தேவையான ஆவணங்கள்:

RC புக் ஒரிஜினல்

முகவரி சான்று

புகைப்படம்

ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு

காப்பீட்டு சான்று

படிவம் 29 மற்றும் 30

சேஸிஸ் பென்சில் பிரிண்ட்

ஆன்லைன் மூலம் RC மாற்றுவது எப்படி?

பொதுமக்களின் வசதிக்காக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் 'வாகன்' (Vahan) போர்ட்டலை இப்போது முழுமையாக மேம்படுத்தியுள்ளது. பரிவஹன் இணையதளம்(parivahan.gov.in) மூலமாகவும் RC புக்கில் பெயர் மாற்றம் செய்துக்க கொள்ளலாம்.

முதலில் parivahan.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று அதில் 'Vehicle Related Services' என்பதைத் தேர்ந்தெடுத்து, கிளிக் செய்யவும்.

உங்கள் வாகனப் பதிவு எண், என்ஜின் நம்பர் ஆகியவற்றை என்டர் செய்து "Proceed" என்பதைக் கிளிக் செய்யவும்.

இதில் உங்களுடைய விண்ணப்பத்தைத் (TO/CoA/HPA/HPS/HPT/DupRC) தேர்வு செய்யவும்.

உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை என்டர் செய்து "Generate OTP" என்பதைக் கிளிக் செய்யவும்.

OTP-ஐ பதிவிட்டு "See Details" என்பதைக் கிளிக் செய்யவும்.

"Application Selection" என்பதன் கீழ், "Transfer of Ownership" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

"Transfer of Ownership Details" ஆப்ஷனைத் தேர்வு செய்து வாங்குபவர் பற்றிய தகவல்களை தெளிவாக குறிப்பிடவும்.

"Payments" என்பதைத் தேர்ந்தெடுத்து கட்டணத்தை செலுத்தவும். (வாகன உரிமையை மாற்றுவதற்கான செலவு ரூ.300 முதல் ரூ.2,000 வரை இருக்கலாம் அல்லது அதற்கும் அதிகமாகவும் இருக்கலாம்.)

ஆன்லைனில் வாகன உரிமையை மாற்றுவதற்கான கட்டணத்தைச் செலுத்திய பிறகு, இரண்டு கட்டண ரசீதுகள், அத்துடன் படிவம் 29 மற்றும் 30 ஆகியவை உருவாக்கப்படும்.

ஒரு சில நாட்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட புதிய வாகன பதிவுச் சான்று கிடைத்துவிடும். இது உங்களுக்கு தபால் மூலம் வந்து சேரும் அல்லது RTO அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு வரும்.

நீங்கள் ஆன்லைனில் RCக்கு விண்ணப்பிக்கும்போது, உங்கள் வாகனத்திற்கு நெடுஞ்சாலை டோல் கட்டணங்களில் (Toll Fees) ஏதாவது பாக்கி இருக்கிறதா என்பதை தானாகவே ஆய்வு செய்யும். ஒருவேளை உங்கள் பாஸ்டேக் கணக்கில் பணம் கழிக்கப்படாமல் நிலுவையில் இருந்தாலோ அல்லது அபராதம் இருந்தாலோ, அதைச் செலுத்தும் வரை உங்கள் RC மாற்று விண்ணப்பம் அடுத்த கட்டத்திற்கு நகராது. 'கிளியரன்ஸ்' இருந்தால் மட்டுமே உங்களால் RC மாற்றத்தை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உரிமையாளரின் இறந்து விட்டால் வாகனத்தின் உரிமையை மற்றொரு புதிய உரிமையாளருக்கு மாற்ற 'படிவம் 31' மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் மிக அவசியம்.

வாகனத்தை ஏலத்தில் வாங்கும்போது அல்லது வாகனத்தை மறுவிற்பனை செய்யும் பொழுது 'படிவம் 32' பயன்படுத்தப்பட வேண்டும். ஏலம் எடுத்ததற்கான அதிகாரப்பூர்வ கடிதம் இணைக்கப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மக்களே உஷார்..! இனி டோல் கட்டண நிலுவை இருந்தால்.. இன்சூரன்ஸ், ஆர்சி ரினீவல் பண்ண முடியாது..!
vehicles Online RC Transfer

பழைய வாகனத்தை ஒருவரிடம் இருந்து வாங்கிய பிறகு குறிப்பிட்ட காலத்திற்குள் பெயர் மாற்றம் செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படும். ஒரே மாநில வாகனத்தை 14 நாட்களுக்குள்ளும், வெளிமாநில வாகனத்தை 45 நாட்களுக்குள்ளும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். வெளிமாநில வாகனம் என்றால் அதற்கு பழைய மாநில RTO-விடம் இருந்து NOC (No Objection Certificate) வாங்குவது கட்டாயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com