குட் நியூஸ்..! அரசு ஊழியர்களை தொடர்ந்து கோவில் பெண் ஊழியர்களுக்கும் 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு..!

அரசு பெண் அரசு ஊழியர்களை தொடர்ந்து திருக்கோவில் பெண் பணியாளர்களின் மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசுAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோவில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு காலம் 12 மாதங்களாக (365 நாட்கள்) உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious and Charitable Endowments Department) மாநிலத்திலுள்ள இந்து திருக்கோவில்கள், மடங்கள் மற்றும் அறக்கொடைகளைப் பராமரித்து நிர்வகிக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 46,341 கோவில்களும் மற்றும் மத நிறுவனங்களும் உள்ளன. இதில் சுமார் 43,677 கோவில்களும், 24 சமணக் கோவில்களும், 45 மடங்களும், மடங்களுக்குச் சொந்தமான 81 கோவில்களும் மற்றும் பல அறக்கட்டளைகளும் அடங்கும். இத்துறை தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டம், 1959 இன் (Tamil Nadu HR&CE Act XXII of 1959) கீழ் செயல்படுகிறது.

கோவில்களில் இணையவழி தரிசனம், பிரசாத முன்பதிவு, அன்னதானத் திட்டம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நடத்துதல் போன்ற பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோவில்களில் ஆயிரக்கணக்கான பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் திருக்கோவில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோவில்களில் பணியாற்றும் பெண் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இதுவரை வழங்கப்பட்டு வந்த 9 மாத கால மகப்பேறு விடுப்பு, தற்போது 12 மாதங்களாக ( 1 வருடம்) உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக அரசு பெண் அரசு ஊழியர்களுக்கு இணையாக திருக்கோவில் பெண் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது அதே சலுகை முறைப்படுத்தப்பட்டு திருக்கோவில் பெண் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசில் பணியாற்றும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு, இரண்டு குழந்தைகள் வரையில் அவர்களுக்கு 12 மாதங்கள் (1 வருடம்) சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

TN HRCE Job Vacancies
TN HRCE

இந்த 12 மாத விடுப்பு காலத்திலும் பெண் பணியாளர்களுக்கு முழுச் சம்பளமும் (Paid Leave) வழங்கப்படும்.

திருக்கோவில் பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த மகப்பேறு விடுப்பு உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருக்கோவில் பணியாளர்கள் ஓய்வுபெறும் போது, அவர்கள் தங்களது கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பை (Earned Leave) ஒப்படைத்து அதற்கான பணப்பலனைப் பெறும் உச்சவரம்பு 210 நாட்களிலிருந்து 240 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
தந்தைக்கு மகப்பேறு விடுப்பு அவசியமா?
தமிழக அரசு

இதன் மூலம் ஓய்வு பெறும் கோவில் பணியாளர்கள், தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையாக அதிகபட்சமாக 240 நாட்கள் வரை பணப்பலனைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில், இந்து சமய நிறுவனங்களின் பணியாளர் (பணி நிபந்தனைகள்) விதிகள் 2020-ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருக்கோவில்களில் பணிபுரியும் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கு இணையாக இந்த முக்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திருக்கோவில் பணியாளர்களின் பணிநலன், குடும்ப நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையின் மூலம் ஆயிரக்கணக்கான கோவில் ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு : இனி 3-வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு!
தமிழக அரசு

மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை, திருக்கோவில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும் சமூகப் பாதுகாப்பையும் மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com