வங்கியில் 13,706 காலிப்பணியிடங்கள்...டிகிரி போதும்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

நாடு முழுவதும் உள்ள பிராந்திய ஊரக வங்கிகளில் 13,706 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை IBPS வெளியிட்டுள்ளது.
Bank job
Bank job
Updated on

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) நாடு முழுவதும் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) அலுவலக உதவியாளர் (Clerk) மற்றும் துணை மேலாளர் (Assistant Manager) உள்ளிட்ட அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 13706 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழ்நாடு கிராம வங்கியில் கிளர்க் பணிக்கு 244 இடங்களும், துணை மேலாளர் பணிக்கு 90 இடங்களும் உள்ளன.

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், அந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் உள்ளூர் மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

மொத்த காலியிடங்கள்: இந்தியா முழுவதும் 13,706 கிராம வங்கிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி:

* கிளர்க் (கிளர்க் பணி) மற்றும் துணை மேலாளர் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு, உள்ளூர் மொழி மற்றும் கணினியை இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

* பிற அதிகாரிகள் பணியிடங்களுக்கு, அந்தந்த பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை படிப்புகளை படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

கிளர்க் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 01.09.2026 அன்று 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 01.09.2026 அன்று 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பிற அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 01.09.2026 அன்று 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி, எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி (PWD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

தேர்வு முறை:

* கிளர்க் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகள் மட்டுமே உண்டு. இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது.

IBPS Clerk Job Announcement |கிளர்க் பணி
Bank Jobs 2026|கிளர்க் பணி

* துணை மேலாளர் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படி நிலைகளில் தேர்வு முறை இருக்கும்.

* பிற அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஒரே ஒரு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என தேர்வு செயல்முறை இருக்கும்.

* தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

தேர்வு நடைபெறும் நாள்:

துணை மேலாளர் பணிக்கான முதல்நிலைத் தேர்வு நவம்பர் 21 மற்றும் 22-ம்தேதிகளில் நடைபெற உள்ளது. கிளர்க் பணிக்கான முதல்நிலைத் தேர்வு டிசம்பர் 6, 12 மற்றும் 13-ம்தேதிகளில் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்:
வங்கியில் வேலை...டிகிரி போதும்: 11,403 காலியிடங்கள், தமிழகத்தில் மட்டும் 675!! உடனே அப்ளை பண்ணுங்க!
Bank job

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை தேர்வர்கள் ஆன்லைனில் https://www.ibps.in/ என்ற முகவரியில் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2026

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவு, ஓபிசி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினர் ரூ.850-ம், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் ரூ.175-ம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பை படித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ரூ.85,000 சம்பளம்.. பேங்க் ஆஃப் பரோடாவில் 2,482 காலிப்பணிடங்கள்..விண்ணப்பிப்பது எப்படி?
Bank job

மேலும் தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்களை https://www.ibps.in/wp-content/uploads/Window-Notification_CRP-RRBs-XV.pdf இங்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com