இனி டெங்கு பயம் வேண்டாம்! இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி அறிமுகம்..!!

இந்தியாவில் முதன் முறையாக டெங்கு காய்ச்சலுக்கு தயாரிக்கப்பட்ட 'கியூடெங்கா' (Qdenga) எனப்படும் தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது.
Takeda's Qdenga Vaccine|டெங்கு தடுப்பூசி
Takeda's Qdenga Vaccine|டெங்கு தடுப்பூசிimage credit-@CMEINDIA1
Updated on

டகேடா பயோ பார்மசூட்டிகல்ஸ் (Takeda Biopharmaceuticals) என்ற இந்தியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'கியூடெங்கா' (QDENGA) தடுப்பூசிக்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் (DCGI) சந்தை அங்கீகாரத்தை வழங்கியதைத் தொடர்ந்து, இந்தியா தனது முதல் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் (Aedes aegypti) வகை கொசுக்களால் பரவும் ஒரு பொதுவான வைரஸ் நோயாகும். இது திடீர் அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, மூட்டு மற்றும் தசை வலி ஆகியவற்றை ஏற்படுத்தும். அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகி, இரத்தப் பரிசோதனை மூலம் டெங்குவை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம்.

2026-ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுவதாகவும், நாடு முழுவதும் 67 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் பதிவாகும் மொத்த டெங்கு பாதிப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் பதிவாகிறது. மழைக்காலம் மட்டுமே இதன் பரவல் காலம் என்ற நிலை மாறி, தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் காற்று மாசுபாடு காரணமாக தற்போது நாடு முழுவதும் குறிப்பாக வட மாநிலங்கள் மற்றும் பெருநகரங்களில் இதன் தாக்கம் தீவிரமாக உள்ளது. தலைநகர் டெல்லி, உத்தரப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா (புனே) போன்ற பகுதிகள் டெங்கு பாதிப்பு மிகுந்த இடங்களாக அறியப்படுகின்றன.

இந்நிலையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, இந்தியாவில் முதன் முறையாக டெங்கு காய்ச்சலுக்கு தயாரிக்கப்பட்ட 'கியூடெங்கா' (Qdenga) எனப்படும் தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது.

டகேடா பயோ பார்மசூட்கல்ஸ் (Takeda Biopharmaceuticals) என்ற இந்திய நிறுவனம் தயாரித்துள்ள டெங்கு காய்ச்சலுக்கான 'கியூடெங்கா' என்ற தடுப்பூசியை, 4 முதல் 60 வயது வரையிலான நபர்களுக்கு செலுத்தும் வகையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அங்கீகாரம் பெற்ற முதல் டெங்கு தடுப்பூசியாக 'கியூடெங்கா' உருவெடுத்துள்ளது.

குறிப்பாக இது நான்கு வகையான டெங்கு வைரஸ்களுக்கும் (DENV-1, DENV-2, DENV-3 மற்றும் DENV-4) எதிராகப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு முன் டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் இதனைச் செலுத்தலாம். தடுப்பூசி போடுவதற்கு முன் பரிசோதனைகள் தேவையில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது, சில டெங்கு தடுப்பூசிகளைப் போலல்லாமல், 'கியூடெங்கா' தடுப்பூசிக்கு முன் பரிசோதனை தேவையில்லை. இதனால், தகுதியுள்ள நபர்கள், முன்பு டெங்கு தொற்று ஏற்பட்டதா என முதலில் பரிசோதிக்கப்படாமலேயே தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

டெங்கு பரவலாக உள்ள நாடுகள் மற்றும் மற்ற பிராந்தியங்களில், 28,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 19 முதற்கட்ட, இரண்டாம் மற்றும் மூன்றாம் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்பு, இந்தியாவில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்!
Takeda's Qdenga Vaccine|டெங்கு தடுப்பூசி

4 முதல் 60 வயது வரையிலான மக்களிடம் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மதிப்பீடு செய்வதற்காக, இந்தியாவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட DEN-302 மருத்துவ பரிசோதனையின் முடிவுகளும் இந்த முடிவை ஆதரித்துள்ளன.

டெங்கு காய்ச்சலுக்கு எதிரான இந்த 'கியூடெங்கா' தடுப்பூசியானது தலா 0.5 மில்லி அளவுள்ள இரண்டு ஊசிகளாக, மூன்று மாத இடைவெளியில் தோலுக்கு அடியில் செலுத்தப்பட உள்ளது.

இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஆண்டுக்கு 5 கோடி டோஸ்கள் வரை உற்பத்தி செய்வதற்காக, ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பயோலாஜிக்கல் E நிறுவனத்துடன் டகேடா பயோ பார்மசூட்கல்ஸ் ஒரு உற்பத்தி கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளதால், இந்திய சந்தைக்கு இதன் விலை போட்டித்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்காலத்தில் இது அரசின் நோய்த்தடுப்புத் திட்டங்களில் சேர்க்கப்படுகிறதா என்பதைப் பொறுத்தும் இதன் விலை அமையும்.

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும், கொசுக்களால் பரவும் நோயான டெங்குவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இந்த அங்கீகாரம் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது என்று டகேடா பயோபார்மசூட்கல்ஸ் கூறியுள்ளது.

‘2022-ல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, கியூடெங்கா 43 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 32 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Dengue fever |டெங்கு தடுப்பூசி
Dengue fever |டெங்கு தடுப்பூசி

இந்த அங்கீகாரம் இந்தியாவில் டெங்கு தடுப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது’ என்று டகேடாவின் மருந்து சந்தைகளின் தலைவர் மகேந்தர் நாயக் கூறினார்.

ஏழு ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட நீண்டகால தரவுகளின்படி, இந்த தடுப்பூசியானது நான்கு டெங்கு வைரஸ் வகைகளால் ஏற்படும் டெங்கு தொற்று மற்றும் மருத்துவமனைச் சேர்க்கைக்கு எதிராக தொடர்ந்து பாதுகாப்பளிக்கிறது என்று அந்த நிறுவனம் கூறியது.

நாட்டின் பல பகுதிகளில் டெங்கு வைரஸின் நான்கு வகைகளும் (serotypes) ஒரே நேரத்தில் பரவி வருவதால், உலகில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதாக டகேடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் 'கியூடெங்கா'வைப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைப்பதாகவும், அதிக பரவல் உள்ள பகுதிகளில் தடுப்பூசி போடுவதற்கு முந்தைய பரிசோதனை (screening) ஏதுமின்றி பொது நோய்த்தடுப்புத் திட்டங்களில் இதனைச் சேர்ப்பதை ஆதரிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

இதையும் படியுங்கள்:
தமிழகத்தை அச்சுறுத்தும் டெங்கு..! சென்னை உட்பட 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை..!
Takeda's Qdenga Vaccine|டெங்கு தடுப்பூசி

தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்கான சர்வதேசத் தரநிலைகளை 'கியூடெங்கா' பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்தும் வகையில், உலக சுகாதார அமைப்பின் 'முன்-தகுதி' (prequalification) அங்கீகாரத்தையும் இது பெற்றுள்ளது.

இதன் மூலம், யுனிசெஃப் (UNICEF) மற்றும் பான் அமெரிக்க சுகாதார அமைப்பு (PAHO) போன்ற உலகளாவிய முகமைகளில் இந்த தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெங்கு என்பது 125-க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவாகியுள்ள, கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். அந்நிறுவனத்தின் தகவலின்படி, உலகளாவிய டெங்கு பாதிப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் காணப்படுகிறது;

இதையும் படியுங்கள்:
மக்களே உஷார்.! அதிவேகமாக பரவும் டெங்கு.. அடுத்த 60 நாள் ரொம்ப கவனம்...!
Takeda's Qdenga Vaccine|டெங்கு தடுப்பூசி

விரைவான நகரமயமாக்கல், காலநிலை மாற்றம் மற்றும் கொசுக்களின் பரவலான இனப்பெருக்கம் ஆகியவை நாடு முழுவதும் நோய்த்தொற்று அபாயத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

logo
Kalki Online
kalkionline.com