

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடைசியாக 2011-ல் முழுமையான கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெறும் 8-வது கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி முழுமையாக டிஜிட்டல் முறையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மேலும் வரலாற்றிலேயே முதல் முறையாக மக்கள் தங்கள் விவரங்களை இணையதளம் வாயிலாக தாங்களாகவே பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டம் (ஏப்ரல் - செப்டம்பர் 2026) வரையும், இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரியில் தொடங்கும். கணக்கெடுப்பாளர்கள் காகிதங்களுக்குப் பதிலாக ஸ்மார்ட்போன்களில் உள்ள பிரத்யேக மொபைல் செயலி மூலம் தரவுகளைச் சேகரிப்பார்கள்.துல்லியமான தரவுகளைப் பெறுவதற்கும், கணக்கெடுப்புப் பணிகளை விரைந்து முடிக்கவும் இந்த டிஜிட்டல் முறை பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சமீபத்தில் சமூக ஊடகங்களில், 2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு முன்னதாகத் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகப் பலர் தெரிவித்துள்ளனர். இந்த முக்கிய தேசிய நடவடிக்கையில் ஸ்கேமர்ஸ் ஒரு வாய்ப்பைக் கண்டறிந்துள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளாக நடித்து, வீடுகளுக்கு வரும் மோசடி கும்பல்கள் ஆதார் அட்டை, பான் அட்டை போன்ற முக்கிய தனிநபர் தகவல்களையும், OTP எண்களையும் கேட்டு உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தைத் திருடுகின்றனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, மோசடிக்காரர்கள் தங்களைக் கணக்கெடுப்பாளர்கள் என்று கூறிக்கொண்டு வீடுகளுக்குச் சென்று, முக்கியமான தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைப் பெற முயற்சிக்கின்றனர். பல சமயங்களில், மோசடிக்காரர்கள் "சுய கணக்கெடுப்பு" என்ற போர்வையில், விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு மக்களை வலியுறுத்தி, போலி இணைப்புகளையும் செய்திகளையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இதபோன்ற சம்பவம் நடக்காமல் அதை எப்படி முறியடிப்பது என்பது குறித்து இப்போது பார்க்கலாம் வாங்க.
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து இப்போது மறுபடியும் எடுக்கப்படுகிறது. கொரோனா வந்ததால் தான் இந்த இடைவெளி ஏற்பட்டது. தற்போது நடைபெற்று வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு வந்து 33 கேள்விகள் கேட்பாங்க.
இந்த கேள்விகளை மூன்று ஏரியாக்களாக(area) பிரிக்கப்பட்டுள்ளது.
ஏரியா 1-ல் உங்கள் பில்டிங், ஓனர்ஷிப், வீட்டில் எத்தனை ரூம்ஸ் இருக்கு என்பது போன்ற கேள்விகள் இருக்கும்.
ஏரியா 2-ல் அமினிட்டீஸ்(Amenities), வீட்டில் எத்தனை பேர் இருக்காங்க, இன்டர்நெட் கனெக்ஷன், இந்த மாதிரியான கேள்விகள் இருக்கும்.
ஏரியா 3-ல் அசெட்ஸ், கார், டிவி, ஸ்கூட்டர், இந்த மாதிரியான விஷயங்கள் கேட்கப்படும்.
இதை மட்டும்தான் கேட்பார்கள். இதுதவிர உங்களுடைய வங்கி, வங்கி கணக்கு, ஏடிஎம் நம்பர், அக்கவுண்ட் நம்பர், வருமான வரி விவரம், ஆதார்ல இருந்து ஒரு ஓடிபி நம்பர் வந்திருக்கும் என்பது போன்ற கேள்விகளை கேட்க மாட்டார்கள். அப்படி கேட்டால் அவங்க 100 சதவீதம் மோசடிக்காரர்கள்(Scammers).
இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க மக்கள் என்ன செய்யலாம் என்றால் SE.CENSUS.GOV.IN என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுடைய விவரங்களை கொடுத்து லாகின் செய்து உள்ளே சென்றால் 33 கேள்விகளும் ஆன்லைனிலே உங்களுக்கு வரும். அந்த கேள்விகளுக்கான பதிலையும் நீங்கள் ஆன்லைனிலேயே கொடுக்கலாம்.
ஆன்லைனில் கேள்விகளுக்கு பதில் சொல்லும் இடத்தில் உங்களுடைய வீட்டு லொகேஷனையும் நீங்க டேக் செய்து கொள்ளலாம். அனைத்து கேள்விகளுக்குமான பதில்களை கொடுத்து submit கொடுத்தவுடன் 11 இலக்க Enumeration Number கிடைக்கும். இந்த நம்பருக்கு SEID பெயர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி உங்கள் வீட்டிற்கு வரும் போது இந்த SEID மட்டும் கொடுத்தால் போதும். வேறு எதையும் தரவேண்டிய அவசியமில்லை.
உங்கள் வீட்டிற்கு வரும் நபர் உண்மையான சென்சஸ் அதிகாரி (Census Enumerator) தானா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்ற சந்தேகம் உங்களுக்கு வந்தால்,
முதலாவதாக சென்சஸ் அதிகாரி என்று யார் வந்தாலும் அவர்களிடம் கவர்மெண்ட் இஸ்யூட் ஐடி கார்டு (Government-issued ID cards) இருக்கானு கேளுங்க.
இரண்டாவது தற்போது எடுக்கும் கணக்கெடுப்பிற்கு பேப்பர் பயன்படுத்துவதில்லை. எல்லாமே ஆப் மூலமாகத்தான் கணக்கெடுக்கப்படுகிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பதாக சொல்லிக்கொண்டு யாராவது பேப்பர் எடுத்துக்கொண்டு வந்தால் அவங்க உண்மையான அதிகாரிகள் கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மூன்றாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு முற்றிலும் இலவசமானது. மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளுக்காக எந்தக் கட்டணமோ நன்கொடையோ வசூலிக்கப்படுவதில்லை என்பது மற்றொரு முக்கிய எச்சரிக்கையாகும்.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரியிடம் ஏடிஎம் பின், வங்கிக்கணக்கு, ஓடிபி, ஆதார் ஓடிபி, வருமான வரி, ஜிஎஸ்டி பில் என்பது போன்ற உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட எந்த தகவல்களை தரவேண்டாம்.
உண்மையான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகள், வங்கி கணக்கு எண்கள், பற்று அல்லது கடன் அட்டைத் தகவல்கள், யுபிஐ சான்றுகள் அல்லது ஒருமுறை கடவுச்சொற்கள் (OTP) போன்ற வங்கி தொடர்பான விவரங்களை ஒருபோதும் கேட்க மாட்டார்கள் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். அத்தகைய எந்தவொரு கோரிக்கையும் சந்தேகத்திற்கிடமானதாகக் கருதப்பட்டு உடனடியாகப் புகாரளிக்கப்பட வேண்டும்.
அதேபோல், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது ஆதார் அல்லது பான் அட்டை நகல்கள் தேவையில்லை என்று அதிகாரிகள் வலியுறுத்தினர். மோசடிக்காரர்கள் இந்த ஆவணங்களைச் சேகரிக்க முயற்சிக்கலாம், ஆனால் முறையான கணக்கெடுப்பாளர்கள் இந்த முறையில் அடையாளச் சான்றுகளைக் கோருவதில்லை. அறிமுகமில்லாத நபர்களிடம் தனிப்பட்ட ஆவணங்களின் நகல்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அறிமுகமில்லாத நபர்களைத் தங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோசடிகளுக்குப் பலியாகாமல் இருக்க, குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், உங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்புக்காக வருபவர்களிடம் அரசு வழங்கிய அடையாள அட்டை (ID Card) உள்ளதா என்பதைச் சரிபார்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உங்களுக்கு அல்லது தெரிந்தவர்களுக்கு இதுபோன்ற மோசடி நடந்தால், உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணை (National Cyber Crime Helpline) அழைத்து புகார் அளிக்கவும்.