அபாரமான திறமை,அசத்தல் வெற்றி:காமன்வெல்த்தில் சாதனை படைத்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கிளாஸ்கோ 23-வது காமன்வெல்த் போட்டிகள் நிறைவு: 39 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பிடித்தது இந்தியா!
காமன்வெல்த் போட்டிகள் 2026
காமன்வெல்த் போட்டிகள் 2026source:dd news
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ஸ்காட்லாந்தில் நடைபெற்ற 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன. இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று நான்காம் இடத்தைப் பிடித்தது. குத்துச் சண்டை போட்டிகளில் இந்தியா சாதனை படைத்தது. குல்வீர் சிங் 5000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். மாற்றுத்திறனாளி பிரிவு போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

கிளாஸ்கோ நகரில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 74 நாடுகளைச் சேர்ந்த 3000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றார்கள். மொத்தம் 10 விளையாட்டுகள் 4 இடங்களில் விளையாடப்பட்டன. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கான 6 பாரா விளையாட்டுகளும் நடைபெற்றன. வழக்கமாக 20க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெறும். ஆனால் இம்முறை செலவு குறைப்பு நடவடிக்கையாக துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மின்டன், ஹாக்கி, டேபிள் டென்னிஸ் போன்றவை சேர்க்கப்படவில்லை. இதில் இந்தியாவுக்கு சாதகமான இந்த விளையாட்டுகள் இல்லாதது, அணியின் பதக்க எண்ணிக்கையை வெகுவாக குறைத்துள்ளது. இருந்தாலும் குத்துச்சண்டை, தடகளம், பளு தூக்குதல் போன்றவற்றில் இந்திய அணியினர் நன்கு செயல்பட்டு பதக்கங்களைக் குவித்தனர்.

இந்தியாவிலிருந்து 48 வீராங்கனைகள், 78 வீரர்கள் உட்பட 191 பேர் கொண்ட குழு பங்கேற்றது. இந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பிடித்தது ஆஸ்திரேலியா 163, இங்கிலாந்து 106, கனடா 59. இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 39 பதக்கங்களுடன் நான்காம் இடத்தை பிடித்தது.

தென்னாப்பிரிக்க நீச்சல் வீரர் சாட் லெ குளோஸ் 34, ஒட்டுமொத்த காமன்வெல்த் விளையாட்டில் அதிக பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக 21 பதக்கங்கள் (7 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம்) கைப்பற்றி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியோன் 32 இடம் பிடித்துள்ளார். இவர் 20 (14 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம்) பதக்கங்களை வென்றுள்ளார்

ஸ்காட்லாண்டின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடைபெற்றது. ஆண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டத்தின் பைனலில், இந்தியா சார்பில் குல்வீர் சிங் 28 பங்கேற்றார். இவர் இலக்கை 13 நிமிடம், 24.95 வினாடியில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு 5000 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். இவர் பெற்ற இரண்டாவது பதக்கம் இது. ஏற்கனவே 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். காமன்வெல்த் விளையாட்டு அரங்கில் ஒரு சீசனில் இரண்டு தடகள பதக்கங்கள் வென்ற முதல் இந்தியராக குல்வீர் சிங் திகழ்கிறார்.

காமன்வெல்த் போட்டிகள் 2026
காமன்வெல்த் போட்டிகள் 2026source:espncricinfo

கடந்த 2018 கோல்டுகோஸ்ட் போட்டிகளில் 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்கள் குத்துச்சண்டையில் வென்றதே இந்தியாவின் அதிகபட்சமாக இருந்தது. ஆனால் இம்முறை அதை முறியடித்து 7 தங்கம், 3 வெள்ளி என 10 பதக்கங்களை வென்றுள்ளது. அதேபோல் பாரா பிரிவில் இந்திய அணியினர் கடந்த 2022 பர்மிங்ஹாம் போட்டிகளில் 1 தங்கம், 1 வெண்கலம் என 2 பதக்கங்கள் வென்ற நிலையில், இம்முறை 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது. 2002 முதல் 2022 வரை மொத்தமாக காமன்வெல்த் போட்டிகளில், பாரா விளையாட்டுகளில் இந்தியா 7 பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், தற்போது இந்த ஒரே ஆண்டில் மட்டும் 7 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் முதல் குழுவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பினர். இவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. 24 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், 2030 அக்டோபரில் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இது 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காமன்வெல்த் போட்டிகளுடைய நூற்றாண்டு கொண்டாட்டமாகவும் அமைய உள்ளது. இந்தியாவில் இரண்டாவது முறையாக நடைபெற உள்ள இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2010ல் முதல் முறையாக டெல்லியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில்:

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நமது அணியின் செயல்பாட்டை கண்டு பெருமிதம் கொள்கிறேன். 13 தங்கம் உட்பட 39 பதக்கங்களை இந்தியா வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்தப் போட்டிகள் முழுவதும் நமது திறமையான விளையாட்டு வீரர்கள் அபாரமான திறமை, உறுதி மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர். அவர்களின் கடின உழைப்பு நமது இளைஞர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும். இந்திய அணி முழுவதற்கும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். அவர்கள் தொடர்ந்து தங்களின் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
நெட்பிளிக்ஸின் லேட்டஸ்ட் ஃபீல் குட் வெப் சீரிஸ் 'Musafir Cafe' விமர்சனம்!
காமன்வெல்த் போட்டிகள் 2026
இதையும் படியுங்கள்:
நாளை மறுநாள் நிலவில் மோதப்போகும் ‘பால்கன்-9 ராக்கெட்’... நடக்கப்போகும் விபரீதம் என்ன?
காமன்வெல்த் போட்டிகள் 2026
logo
Kalki Online
kalkionline.com