

நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது சாதாரண பெட்டிக்கடைகள் தொடங்கி மிகப்பெரிய நிறுவனங்கள் வரை யுபிஐ பரிவர்த்தனைகளை ஏற்றுக் கொள்கின்றன. இந்த நிலையில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை இன்று முதல் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற அப்ளிகேஷன்களில் நடைமுறைக்கு வருகிறது. அதாவது பின் நம்பர் இல்லாமல் மொபைல் ஃபோன் மூலம் கைரேகை, முகஅடையாளம் போன்ற பயோமெட்ரிக் அடையாளத்தை பயன்படுத்தி யுபிஐ (UPI) வழியாக பணம் செலுத்தும் வசதி (யுபிஐ பேமெண்ட்) அமலுக்கு வருகிறது.
UPI சேவையை பயன்படுத்தாதவர்களை இப்போது விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் UPI பயன்பாடு அதிகரித்துள்ளது. கையில் ஒரு பைசா ரொக்கமாக கொண்டு செல்லாமல், பெட்டி கடை முதல் வணிக வளாகம் முதல் நினைத்ததை தற்போது UPI செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட இந்த UPI மூலமாக பணப்பரிமாற்றம் எளிதாக இருப்பதால், பொதுமக்களும் அதிக அளவில் இதை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். UPI சேவைகளுக்காக கூகுள் பே (Google Pay), ஃபோன்பே (PhonePe), பீம் (BHIM) உள்ளிட்ட பல்வேறு மொபைல் அப்ளிகேஷன்கள் செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே Google Pay, PhonePe, BHIM ஆகிய UPI செயலிகளில் கைரேகை அல்லது முகஅடையாளம் வைத்து பணம் செலுத்தும் வசதி கிடைக்கிறது.
Google Pay, PhonePe மற்றும் BHIM ஆகிய UPI செயலிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக கைரேகை (Fingerprint) அல்லது முக அடையாளத்தை (Face ID) பயோமெட்ரிக் லாக் (Biometric Lock) ஆகப் பயன்படுத்தும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த வசதி செயல்படும் முறையில் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது:
ரூ. 5,000 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்கு, 4 அல்லது 6 இலக்க UPI PIN-க்கு பதிலாக கைரேகை அல்லது முகஅடையாளத்தைப் பயன்படுத்தலாம். இந்த வசதியை ஒவ்வொரு UPI செயலியிலும், தகுதியான வங்கிக் கணக்கிற்கு தனியாக செயல்படுத்த வேண்டும். இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் வேகமாகவும் எளிமையாகவும் மாற்றுகிறது.
வசதியை இயக்கும்போது ஒருமுறை UPI PIN மூலம் சரிபார்ப்பு செய்ய வேண்டும்; அதன் பிறகு தகுதியான பரிவர்த்தனைகளில் பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்.
நீங்கள் செயலியைத் திறக்கும்போது (App Lock)மற்றவர்கள் யாரும் அதை அணுகாமல் இருக்க கைரேகை அல்லது முக அடையாளத்தைப் பயன்படுத்தலாம்.
பணப் பரிவர்த்தனையை இறுதி செய்து (Transaction) பணத்தை அனுப்பும்போது, பாதுகாப்புக் காரணங்களுக்காக யுபிஐ பின் (UPI PIN) எண்களை மட்டுமே கட்டாயம் உள்ளிட வேண்டும். அதற்குப் பதிலாக கைரேகையைப் பயன்படுத்த முடியாது.
ரூ.5,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு வழக்கமான UPI PIN தொடர்ந்து தேவைப்படும். கைரேகை அல்லது முகஅடையாள சரிபார்ப்பு தோல்வியடைந்தால், UPI PIN மூலம் பணம் செலுத்தும் வசதி தொடரும். இதனால் பாதுகாப்பும் வசதியும் சமநிலைப்படுத்தப்படுகிறது.
ஆனால், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ லைட் (UPI Lite) வசதியைப் பயன்படுத்தினால், ரூ.500-க்கு உட்பட்ட சிறிய தொகைகளை யுபிஐ பின் இல்லாமலேயே, கைரேகை அல்லது முக அடையாளம் மூலமாகவே எளிதாக அனுப்ப முடியும்.
இந்த மாற்றத்தின் முக்கிய நன்மை வேகமும் சுலபமும் ஆகும். பலர் யுபிஐ பின் எண்ணை மறந்து சிக்கலில் சிக்குவதை தவிர்க்கலாம். கைரேகை அல்லது முக அடையாளம் மூலம் ஒரு தொடுதலில் பணம் அனுப்ப முடியும். இதன் மூலம் யுபிஐ பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக இணையவழி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் பின் நம்பரை பயன்படுத்தி மோசடி, ஸ்கேனர் மூலம் மோசடி என பல்வேறு முறைகேடுகளுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். யுபிஐயின் இந்த சேவை மூலம் PIN பகிர்வால் ஏற்படும் மோசடிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கைரேகை மற்றும் முக அடையாளம் நகலெடுக்க முடியாதவை என்பதால், பரிவர்த்தனை பாதுகாப்பு அதிகரிக்கும். இதனால் சிலர் ஏற்கனவே பகிர்ந்த PIN-களை தவறாக பயன்படுத்துவது போன்ற மோசடிகள் குறைய வாய்ப்புள்ளது.