

இணைய வசதி(internet) இல்லாத இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில், இந்திய தேசியக் கொடுப்பணவு கழகம் (NPCI) மற்றும் ரிசர்வ் வங்கி (RBI) இணைந்து பல புதிய ஆஃப்லைன் யுபிஐ தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் இல்லாத இடங்களிலும் தடையின்றி சாமானியர்களும் எளிதாகப் பணம் அனுப்ப இந்த புதிய தொழில்நுட்பங்கள் பேருதவியாக இருக்கும்.
நாட்டில் பெரும்பாலானவர்கள் ஜிபே, கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனைக்கு முற்றிலும் மாறிவிட்டனர். ஆனால் அதே சமயம் இந்த யுபிஐ பரிவர்த்தனையை மட்டுமே நம்பி வெளியே செல்பவர்கள், இணையம் இல்லாத பகுதிகளில் பெரும் தவிப்பிற்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் இணைய வசதியின்றி யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் திட்டம் விரைவில் அமலுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் உள்ள NFC எனப்படும் Near Field Communication அம்சத்தை யுபிஐ-யிலும் விரிவுபடுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் POS மெஷின்களில் இணையமின்றி மொபைல் போன் மூலம் யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.
இதன் மூலம், POS இயந்திரங்களில் இணைய வசதி இல்லாமலேயே மொபைல் போன் மூலம் பணம் செலுத்த முடியும்.முதற்கட்டமாக, இணையம் இல்லாமல் ரூ.2,000 வரை பரிவர்த்தனை மேற்கொள்ள தேசிய பண வழங்கீடுகள் நிறுவனமான NPCL அனுமதி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது இந்தியாவில் இணையம் இல்லாமல் யுபிஐ(UPI) மூலம் பணம் அனுப்பவும் பெறவும் 3 முக்கிய வழிகள் செயல்பாட்டில் உள்ளன.
இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) பல வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் மற்றும் பட்டன் போன் இரண்டிற்கும் வெவ்வேறு முறைகள் உள்ளன.
USSD குறியீடு சேவை:
ஸ்மார்ட்போன் மற்றும் பேசிக் போன்(GSM) இரண்டிலும் இந்த முறையைப் பயன்படுத்தலாம். இதற்கு இணைய இணைப்புத் தேவை இல்லை.
எப்படி செய்வது?
உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து ஸ்டார் 99 ஹேஷ் (*99#) என டைப் செய்து டயல் பட்டனை அழுத்தவும். பணம் அனுப்புதல், பேலன்ஸ் சரிபார்த்தல், யுபிஐ ஐடி (UPI ID) நிர்வகித்தல் போன்ற பயன்பாட்டிற்கு ஏற்றது. ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூபாய் 5,000 வரை மட்டுமே இதில் அனுப்ப முடியும். கட்டண சேவையாக சுமார் ரூ.0.50 வரை சேவைக் கட்டணம் வசூலிக்கப்படலாம்.
UPI 123PAY:
இது பட்டன் போன்களைப் பயன்படுத்தும் மக்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஆஃப்லைன் சேவை ஆகும்.
IVR முறை:
நீங்கள் 080 4516 3666 அல்லது 6366 200 200 என்ற எண்ணை அழைத்து, குரல் வழிகாட்டுதல் (voice guided) மூலம் பணத்தை அனுப்பலாம். ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூபாய் 10,000 வரை அனுப்பலாம்.
UPI Lite X:
ஸ்மார்ட்போன்களில் இணையம் இல்லாத நேரங்களில், உதாரணத்திற்கு விமானத்தில் அல்லது நெட்வொர்க் இல்லாத இடங்களில் NFC (Near Field Communication) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எளிதாகப் பணம் செலுத்தலாம். ஒரு பரிவர்த்தனைக்கு ரூபாய் 500 வரை அனுமதிக்கப்படுகிறது.
இதன் முக்கிய நன்மைகள்:
நெட்வொர்க் இல்லாத மலைப்பகுதிகள், சுரங்கப்பாதைகள் மற்றும் விமானங்களில் பயணிக்கும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இணைய வசதி பலவீனமாக உள்ள கிராமப்புறங்களிலும் இந்த தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதமாக மாறி உள்ளது.
இந்த முறைகளுக்கும் வங்கி அளவிலான பாதுகாப்பும், யுபிஐ பின்(UPI PIN) குறியீடும் தேவைப்படுகிறது.
தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த சேவை செயல்படுகிறது.