மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க..! ₹2 லட்சம் வரை அள்ளித் தரும் 'இந்தியா-ஏஐ ஃபெலோஷிப் 2026'!

ஏஐ துறையில் ஆராய்ச்சி செய்யும் இளங்கலை, முதுகலை மற்றும் பி.எச்.டி மாணவர்களுக்கான இந்தியா-ஏஐ ஃபெலோஷிப் 2026 திட்டத்தின் தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை....
IndiaAI scholarship
IndiaAI scholarshipAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

இன்றைய டிஜிட்டல் உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மிகக் குறுகிய காலத்தில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. மனிதர்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து பெரிய தொழில் நிறுவனங்கள் வரை அனைத்திலும் AI-ன் ஆதிக்கம் நிறைந்துள்ளது.

இதற்கிடையே எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தியாவிலும் ஏஐ ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு முக்கியப் பகுதியாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் இயங்கும் 'இந்தியா-ஏஐ மிஷன்' (IndiaAI Mission), செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் ஆராய்ச்சி மற்றும் திட்டங்களை மேற்கொள்ளும் கல்லூரி மாணவர்களுக்கு 'இந்தியா-ஏஐ ஃபெலோஷிப் 2026' (IndiaAI Fellowship 2026) என்ற சிறப்பு நிதியுதவித் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இளங்கலை (UG), ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு (IDD) மற்றும் முதுகலை (PG) மாணவர்கள் அனைவரும் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது. மேலும் இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் வரும் நவம்பர் 30-ம்தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபெலோஷிப்பிற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தகுதிகள் மற்றும் நிதியுதவி விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? (தகுதிகள்)

இந்தியக் குடியுரிமை கொண்ட, முழுநேரப் படிப்புகளைப் பயிலும் பின்வரும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:

* 4 ஆண்டுகள் கொண்ட இளங்கலை (UG) படிப்புகளின் இறுதி ஆண்டில் (7வது அல்லது 8வது செமஸ்டர்) இருக்கும் மாணவர்கள் மற்றும் பொறியியல், அறிவியல், மருத்துவம், சட்டம், வணிகவியல் மற்றும் கலை என எந்தத் துறையைச் சேர்ந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

* முழுநேர முதுகலைப் (PG) படிப்புகளில் 1, 2 அல்லது 3-வது செமஸ்டரில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

* செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த துறைகளில் முழுநேரமாகப் புதியதாகச் சேர்ந்த அல்லது முதலாம் ஆண்டு பயிலும் பிஎச்.டி மாணவர்களும் (PhD) விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கூடுதல் கல்வித் தகுதிகள்:

* மாணவர்கள் தங்களின் முந்தைய செமஸ்டர்கள் வரை குறைந்தபட்சம் 7.0 / 8.0 CGPA அல்லது 70% - 80% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் (படிப்பு நிலையைப் பொறுத்து மாறுபடும்).

* பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 3 முழுநேர AI சார்ந்த பாடங்களை (AI-related courses) முடித்திருக்க வேண்டும் (எ.கா: Machine Learning, Computer Vision, Data Science போன்றவை).

இந்தியா-ஏஐ ஃபெலோஷிப்
இந்தியா-ஏஐ ஃபெலோஷிப்

* பகுதிநேர (Part-time) மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.

நிதியுதவி எவ்வளவு கிடைக்கும்?

மாணவர்களின் கல்வி நிலை மற்றும் ஆராய்ச்சியின் தன்மைக்கு ஏற்ப நிதி ஆதரவு வழங்கப்படுகிறது:

* இளங்கலை (UG) & ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு (IDD) படிக்கும் மாணவர்களுக்கு ₹1 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும் சர்வதேச AI மாநாடுகளில் (International Conference) கட்டுரை சமர்ப்பிக்கத் தேர்வானால் பயணச் செலவுக்காக கூடுதல் ₹1 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

* முதுகலை (PG) மாணவர்களுக்கு ₹2 லட்சம் வரை மொத்தமாக வழங்கப்படும். மேலும் சர்வதேச AI மாநாடுகளில் கட்டுரை சமர்ப்பிக்கத் தேர்வானால் பயணச் செலவுக்காக கூடுதல் ₹1 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

* முனைவர் பட்ட ஆய்வாளர்கள் (PhD) முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.70,000 ஊக்கத்தொகையும், 3-ஆம் ஆண்டில் இந்தத் தொகை மாதம்தோறும் ரூ.75,000 ஆக உயர்த்தப்படும். 4 மற்றும் 5-ஆம் ஆண்டுகளில் மாதம்தோறும் ரூ.80,000 வரை உதவித்தொகையாகப் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வேலைகளை எளிதாக்கும் செயற்கை நுண்ணறிவு: மனிதர்களை மாற்றிவிடுமா AI?
IndiaAI scholarship

பி.எச்.டி (PhD) மாணவர்களின் ஆராய்ச்சிப் பணிகளை மேலும் எளிதாக்க, ஆண்டுக்கு ₹2 லட்சம் வரை ஆராய்ச்சி மானியம் (Research Grant) மற்றும் சர்வதேச மாநாட்டுப் பயணத்திற்கு ₹1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

* முக்கிய சிறப்பம்சமாக மாணவர்கள் தயாரிக்கும் ஏஐ ஆராய்ச்சி கட்டுரைகள் (AI Research Papers) ரேட்டிங் 100-க்கும் அதிகமாக உள்ள புகழ்பெற்ற சர்வதேச மாநாடுகளில் (International Conferences) ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று கட்டுரைகளைச் சமர்ப்பிக்க வசதியாக, பயணம் மற்றும் தங்குமிடச் செலவுகளுக்காக ஒருமுறை ஊக்கத்தொகையாக ரூ. 1 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பும் மாணவர்கள் fellowship.indiaai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் தங்களது DigiLocker மற்றும் கல்விச் சான்றிதழ்களைக் கொண்டு வரும் நவம்பர் 30-ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
எந்திரனாகும் மனிதன்: வேலையைப் பறிக்கும் செயற்கை நுண்ணறிவு!
IndiaAI scholarship

மாணவர்கள் விண்ணப்பிக்கும் முன், தங்களின் தகுதி அளவுகோல்கள், தேவைப்படும் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகளை இணையதளத்தில் தெளிவாகப் படித்துப் பார்த்த பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com