

சமையல் கேஸ் சிலிண்டர் தொடர்பான விதிமுறைகளில் பல மாற்றங்களை மத்திய அரசு அடிக்கடி அறிவித்துக்கொண்டே இருந்தாலும், அவை பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களுக்கு இன்னும் வரவில்லை.
இந்நிலையில் தான் ஒரு சூப்பரான அறிவிப்பை அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) அறிவித்துள்ளது. அதன்படி, இந்நிறுவனம் தனது 5 கிலோ எடை கொண்ட 'சோட்டு' (chhotu cylinder) சிலிண்டர்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு திரும்பப்பெறும் (Buyback) வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது, இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள காலி சிலிண்டரைத் திரும்ப ஒப்படைக்கும்போது, ஒரு சிலிண்டருக்கு ரூ.500 திரும்ப அளிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 5 கிலோ எல்பிஜி சிலிண்டர் (LPG cylinder), குறைந்த அளவு எரிவாயுவைப் பயன்படுத்துபவர்கள், பேச்சிலர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் வேறு நகரங்களில் வாடகைக்கு வசிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
முகவரிச் சான்று (Address proof) எதுவும் இன்றி, செல்லுபடியாகும் அடையாள அட்டையை மட்டும் காட்டி இந்த இணைப்பை எளிதாகப் பெறலாம் என்பதே இந்த இணைப்பின் சிறப்பம்சமாகும்; மேலும், இதற்காக எந்தவிதக் வைப்புத்தொகையும் (Security Deposit) வசூலிக்கப்படுவதில்லை.
இண்டேன், பாரத் கேஸ், எச்பி கேஸ் விநியோகஸ்தர்கள் மற்றும் சில பல்பொருள் அங்காடிகள் (Supermarkets) அல்லது சில்லறை கடைகளில் 5 கிலோ எடை கொண்ட 'சோட்டு' (Chhotu) சிலிண்டரை வாங்கலாம் அல்லது ரீஃபில் செய்து கொள்ளலாம்.
நீங்கள் இந்த சிலிண்டரை எத்தனை நாட்கள் பயன்படுத்தியிருந்தாலும், சிலிண்டரை விற்பனை மையத்தில் திரும்ப ஒப்படைக்கும்போது நிலையான ரூ.500 வைப்புத் தொகை அல்லது buyback தொகையைத் திரும்பப் பெறலாம்.
சொந்த ஊர்களுக்குத் திரும்பும் போதோ அல்லது இணைப்பு தேவையில்லை என்றாலோ வாடிக்கையாளர்கள் சிலிண்டரை எளிதாக விற்பனைப் புள்ளிகளில் (Point of Sales) ஒப்படைத்து இந்த ரூ.500-ஐப் பெற்றுக் கொள்ளலாம்.
நீங்கள் 5 கிலோ சிலிண்டரைத் திருப்பிக் கொடுக்க விரும்பினால், சிலிண்டருடன் சேர்த்து நீங்கள் முதலில் பெற்ற வாடிக்கையாளர் சந்தா சீட்டு (Subscription Voucher - SV) மற்றும் எரிவாயு நுகர்வோர் அட்டை (Gas Passbook) ஆகியவற்றையும் விநியோகஸ்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் ஒப்படைக்கும் சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டர் (Regulator) ஆகிய இரண்டும் எந்தவித சேதமுமின்றி, நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
வைப்புத்தொகையைத் திரும்பப் பெற, அசல் சந்தா வவுச்சர் (Original Subscription Voucher - SV) மற்றும் உங்களது அடையாள அட்டை (ID Proof) ஆகியவற்றுடன் விநியோகஸ்தரை (Gas Distributor) அணுக வேண்டும்.
சிலிண்டரை வெற்றிகரமாக ஒப்படைத்த பிறகு, நீங்கள் செலுத்திய வைப்புத் தொகை (Security Deposit) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்த ரூ. 500 திரும்பப் பெறும் (Buyback) சலுகையானது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 'சோட்டு' (Chhotu) எனப்படும் 5 கிலோ எடையுள்ள சிறிய LPG சிலிண்டர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெரிய சிலிண்டர்களைத் (14.2 கிலோ) திருப்பி ஒப்படைக்கும் போது, அவை வாங்கப்பட்ட காலத்தின் அடிப்படையில் தேய்மானம் கணக்கிடப்பட்டு அல்லது பழைய வைப்புத்தொகை ரசீதின் அடிப்படையிலேயே பணம் தரப்படும்.
ஆனால், இந்த 5 கிலோ 'சோட்டு' சிலிண்டரை எப்போது திருப்பித் தந்தாலும், தேய்மானக் கணக்கீடு எதுவும் இல்லாமல் உறுதியான தொகையாக (Fixed Refund) ரூ. 500 வாடிக்கையாளர்களுக்குத் திரும்ப வழங்கப்படுகிறது.