இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank - IOB) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 250 லோக்கல் பேங்க் ஆபிசர் (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.85,000 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்திலேயே பணியமர்த்தப்படுவார்கள்.
பொதுத்துறை வங்கி என்பதால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கின்றன. வங்கி வேலை கனவுடன் இருப்பவர்களுக்கு இது மிகவும் அரிய வாய்ப்பாகும்.
இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..
பணியிடங்கள் விவரம் :
பதவியின் பெயர் : லோக்கல் பேங்க் ஆபிசர் (LBO)
மொத்த காலியிடங்கள் : 250
மாநில வாரியான காலிப்பணிடங்கள் :
தமிழ்நாடு - 100
கர்நாடகா - 50
மகாராஷ்டிரா - 50
குஜராத் - 50
கல்வித் தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி எழுத, படிக்க, பேச கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
10, 12-ம் வகுப்பில் உள்ளூர் மொழியை படிக்காத விண்ணப்பதாரர்கள் தேர்வு செயல்முறையின் போது மொழித் தேர்ச்சி தேர்வில் (LPT) தகுதி பெற வேண்டியது கட்டாயம்.
வயது வரம்பு :
வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 2006 ஆகஸ்ட் 1-ம்தேதி நிலவரப்படி கணக்கிடப்படும்.
அரசுவிதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது. அதன்படி எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 35 வயது வரையும், ஓபிசி (OBC) பிரிவினருக்கு 33 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு (PWBD) 10 ஆண்டுகள் வரையும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி விதிகளின்படி பொருந்தக்கூடிய படிகள் மற்றும் சலுகைகளுடன் மாதத்திற்கு ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை :
ஆன்லைன் தேர்வு
தனிப்பட்ட நேர்காணல்
ஆவண சரிபார்ப்பு
மொழித் தேர்ச்சி தேர்வு (LPT)
இறுதித் தகுதி பட்டியல் -> இணையவழித்தேர்வு - 80% மதிப்பெண் + நேர்காணல் 20% வெயிட்டேஜ் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் :
SC / ST / PWBD விண்ணப்பதாரர்கள் : ரூ.175
பொது / ஓபிசி / ஈடபிள்யூ மற்றும் இதர விண்ணப்பதாரர்கள் : ரூ.850
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : ஆகஸ்ட் 24-ம்தேதி
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.iob.on) மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் : ஆகஸ்ட் 8-ம்தேதி
ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி : ஆகஸ்ட் 24-ம்தேதி
தேர்வு மையங்கள்:
சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோவை, திருச்சி, வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி / நாகர்கோவில், தஞ்சாவூர், கடலூர் ஆகிய இடங்களில் தேர்வுகள் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தேர்வு எழுத விரும்பும் மாவட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.
அதன் அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு அறிவிப்பை படிக்க: https://www.iob.bank.in/en/careers