டிகிரி போதும்...35,000 சம்பளத்தில் ரெயில்வேயில் வேலை...உடனே அப்ளை பண்ணுங்க.!

மத்திய அரசு வேலைக்காகக் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு இந்திய ரயில்வே புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Railway Jobs - RRB
Railway Jobs
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பெற வேண்டும் என்று முயற்சி செய்து வரும் பட்டதாரிகளுக்கு இந்திய ரயில்வேயின் புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRB), பட்டதாரி அளவிலான 3,548 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.

ரயில்வே அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, சரக்கு ரயில் மேலாளர், மூத்த எழுத்தர் மற்றும் தட்டச்சுப் பணியாளர், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சுப் பணியாளர் மற்றும் தலைமை வர்த்தக மற்றும் பயணச்சீட்டு மேற்பார்வையாளர் ஆகிய நான்கு பதவிகளில் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

NTPC Graduate பிரிவில் இடம்பெறும் இந்த வேலைவாய்ப்புகளுக்கு மாத அடிப்படைச் சம்பளம் ரூ.29,200 முதல் ரூ.35,400 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வேலைவாய்ப்பு :

காலிப்பணியிடங்கள் மொத்தம்: 3,548

பதவி விவரங்கள்: இதில் முக்கியமாக 'Goods Train Manager' உள்ளிட்ட பல்வேறு பட்டதாரி நிலை NTPC பதவிகள் அடங்கும்.

சரக்கு ரயில் மேலாளர் (Goods Train Manager): 2,750

மூத்த எழுத்தர் மற்றும் தட்டச்சர் (Senior Clerk Cum Typist): 371

இளநிலை கணக்கு உதவியாளர்(Junior Accounts Assistant Cum Typist): 300

முதன்மை வர்த்தக மற்றும் பயணச்சீட்டு மேற்பார்வையாளர்(Chief Commercial Cum Ticket Supervisor): 127

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு டிகிரி (Any Degree) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 2027 ஜனவரி 1-ம் தேதியின்படி வயது 18 முதல் 33 வரை இருக்க வேண்டும். இருப்பினும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

ரயில்வே வேலைவாய்ப்பு
ரயில்வே வேலைவாய்ப்புAI Image

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பம் உள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.11.2026 (இரவு 11:59 மணி வரை).

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்: 08.11.2026

விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய : நவம்பர் 9 முதல் 18 வரை கால அவகாசம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக சொன்னால் நம்ப வேண்டாம் : இது புது வகை மோசடி - இந்தியன் ரெயில்வே..!
Railway Jobs - RRB

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்கள் ரூ. 250 மட்டும் செலுத்தினால் போதும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டும்

தேர்வு முறை: முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட கணினித் தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

சம்பளம்: முதன்மை வர்த்தக மேற்பார்வையாளர் பதவிக்கு அடிப்படை சம்பளமாக ரூ.35,400-மும், மற்ற மூன்று பதவிகளுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.29,200-மும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (7-வது ஊதியக் குழுவின்படி).

முக்கிய குறிப்பு:

விண்ணப்பிக்கும் முன்பு ஆதார் அட்டையில் உள்ள பெயர், பிறந்த தேதி ஆகியவை பத்தாம் வகுப்புச் சான்றிதழுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தேவையான கல்விச் சான்றிதழ்கள், புகைப்படம், கையொப்பம் உள்ளிட்டவற்றைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்த பின்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முழுமையான விதிகள் மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்கு rrb.indianrailways.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
டிகிரி இருந்தா போதும்... மாதம் ரூ.35,400 சம்பளத்தில் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் வேலை..!!
Railway Jobs - RRB

ரெயில்வே வேலை என்பது நல்ல ஊதியம், பணிப்பாதுகாப்பு மற்றும் பல்வேறு பதவி உயர்வு வாய்ப்புகளை வழங்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பாகும். எனவே தகுதியுள்ள பட்டதாரிகள் கடைசி நாளுக்காக காத்திருக்காமல் இன்றே அதிகாரப்பூர்வ RRB இணையதளத்தில் அறிவிப்பை முழுமையாகப் படித்து விண்ணப்பிக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com