டிகிரி இருந்தா போதும்... மாதம் ரூ.35,400 சம்பளத்தில் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் வேலை..!!

ரெயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கைநிறைய சம்பளம், நிலையான வேலை மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.
station master recruitment
station master recruitment AI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்தியன் ரெயில்வே (Indian Railways). மத்திய ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரெயில்வே துறையில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ரெயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கைநிறைய சம்பளம், நிலையான வேலை மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகயே ரெயில்வே வேலையில் சேர வேண்டும் என்ற ஆசையுடன் லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். இதற்காக ரெயில்வே வாரியம் (RRB) மற்றும் ரெயில்வே தேர்வு பிரிவு (RRC) மூலம் ஆண்டுதோறும் பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மத்திய அரசு வேலைக்குத் தயாராகி வரும் பட்டதாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி தரும் அறிவிப்பானது தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்திய ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), 2026 ஆம் ஆண்டுக்கான ரெயில்வே RRB ஸ்டேஷன் மாஸ்டர் (Station Master) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,250 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பட்டப்படிப்பு முடித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த புதிய ரெயில்வே பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

விண்ணப்பிக்கும் தேதி, தகுதி, மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு முறை, வயது வரம்பு, சம்பளம் போன்ற அனைத்து முக்கிய தகவல்களுக்கும் இந்தப் பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க.

ரயில்வே வேலை - முக்கிய விவரங்கள்:

பதவி : ஸ்டேஷன் மாஸ்டர் (Station Master)

காலியிடங்கள் எண்ணிக்கை: தோராயமாக 1,250 பணியிடங்கள் (CEN 08/2026 அறிவிப்பு)

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு (Degree) அல்லது அதற்கு இணையான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்: 7-வது ஊதியக் குழுவின் (7th CPC) படி, ரூ.35,400 அடிப்படைச் சம்பளம் (Level 6) வழங்கப்படும். இதனுடன் விண்ணப்பதாரர்கள் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA), போக்குவரத்துப்படி மற்றும் பிற பொருந்தக்கூடிய ரெயில்வே சலுகைகள் மற்றும் இதர படிகள் சேர்த்து ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை கிடைக்கும்.

வயது வரம்பு: பொதுவாக 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். ரெயில்வே வாரிய விதிகளின்படி, தகுதியுள்ள இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குப் பொருந்தக்கூடிய வயதுத் தளர்வு வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்ப தொடக்கம்: அக்டோபர் 27

ஆன்லைனில் விண்ணப்ப கடைசி நாள்: நவம்பர் 25

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : நவம்பர் 25

Railway Job|ரயில்வே வேலை
Railway Job|ரயில்வே வேலைAI Image

தேர்வு முறை:

கணினி வழித் தேர்வு (CBT - Computer Based Test)

கணினி வழித் திறன் தேர்வு (CBAT - Computer Based Aptitude Test)

சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)

மருத்துவப் பரிசோதனை (Medical Examination - A-2 Standard)

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, ஈடபிள்யூஎஸ் பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ. 500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு 400 ரூபாய் ரிட்டர்ன் செய்யப்படும்.

எஸ்.சி (SC), எஸ்.டி (ST) பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள்/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250 தேர்வு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. தேர்வு எழுதிய பிறகு இவர்களுக்கு முழு கட்டணமும் ரிட்டர்ன் செய்யப்படும்.

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை : தேர்வுக் கட்டணத்தை ரொக்கமாக இ-சலான் மூலமாகவோ அல்லது பற்று அட்டை, கடன் அட்டை, நெட் பேங்கிங் மூலமாகவோ செலுத்தவும்.

இதையும் படியுங்கள்:
ரயில்வே துறையில் வேலை தேடுகிறீர்களா? 3993 காலியிடங்கள் அறிவிப்பு! உடனே விண்ணப்பிங்க..!!
station master recruitment

விண்ணப்பிக்கும் முறை: இந்தியன் ரெயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rrbapply.gov.in/ என்ற RRB அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் மூலமாக தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

முதலில் நீங்கள் RRB-யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று Railway RRB Station Master Recruitment 2026 என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு, Railway RRB Station Master Link-ஐ கிளிக் செய்து, 'ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்' என்ற விருப்பத்தைச் கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.

அனைத்தையும் பிழை இல்லாமல் நிரப்பிய பிறகு ஒருமுறை சரிபார்த்த பின்னர் அதைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பித்த பிறகு, அதனை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
+2 படிச்சிருந்தா போதும்... மத்திய அரசு வேலை ரெடி! – 1,688 ரயில்வே காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
station master recruitment

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.rrbapply.gov.in/ என்ற இணையதள பக்கக்கதை பார்வையிடவும்.

logo
Kalki Online
kalkionline.com