

பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் போக்குவரத்தை தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணம் அனலவருக்கும் சௌகரியமாக இருக்கும். இருப்பினும் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் விரைவு ரயில் டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம். ஏற்கனவே புக்கிங் செய்த பயணி டிக்கெட்டை கேன்சல் செய்தால், அந்த பெர்த் 2 பயணிகளுக்கு RAC டிக்கெட் முறையில் ஒதுக்கப்படும்.
ஒரே பெர்த்தில் இருவர் பயணிப்பதால் பகல் நேரத்தில் படுக்க முடியாது. அதேசமயம் டிக்கெட் உறுதியான பயணிகளுக்கு கொடுப்பது போல், RAC டிக்கெட் பயணிகளுக்கு தலையணை மற்றும் போர்வை விரிப்புகளும் கொடுக்கப்படாது. இதுகுறித்து பல ஆண்டுகளாக பயணிகள் புகார் தெரிவித்து வரும் நிலையில், பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது ரயில்வே நிர்வாகம்.
இதன்படி இனி RAC டிக்கெட்டில் பயணிக்கும் 2 பயணிகளுக்கும் தலையணை மற்றும் போர்வை விரிப்புகள் வழங்கப்படும்.
ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்தவர், அதனை ரத்து செய்யும்போது காத்திருப்பில் உள்ள இரண்டு பயணிகளுக்கு அந்த ஒரு இடம், RAC டிக்கெட்டாக பகிர்ந்து வழங்கப்படும். RAC டிக்கெட்டில் ஒரே பெர்த்தில் 2 பயணிகள் பயணம் செய்தாலும், இருவரும் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும்.
ஒரே பெர்த்தில் இருவர் பயணிக்கும் போது, ஏன் இருவரும் முழுத் தொகையை செலுத்த வேண்டும்; பாதி கட்டணம் செலுத்தினாலே போதுமானது என நாடாளுமன்ற பொது கணக்குக் குழு கடந்த பிப்ரவரி மாதம் கேள்வியெழுப்பியது. இதனால் டிக்கெட் கட்டணம் பாதியாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அதுகுறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் மற்றொரு சூப்பரான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
ஏசி சேர் கார் தவிர்த்து, 3AC, 2AC உள்ளிட்ட அனைத்து ஏசி வகுப்புகளிலும் RAC டிக்கெட் பயணிகளுக்கு, டிக்கெட் உறுதியான பயணிகளைப் போலவே போர்வை, படுக்கை விரிப்புகள், தலையணை மற்றும் டவல் வழங்கப்பட வேண்டும். RAC டிக்கெட் கட்டணத்தில் படுக்கை வசதிக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆகையால் RAC பயணிகளுக்கு இந்த வசதியை மறுக்கக் கூடாது என ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களுக்கும் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவால் RAC டிக்கெட் பயணிகளுக்கும் ரயிலில் இனி அனைத்து வசதிகளும் கிடைக்கும்.
RAC முறையில் ஒரே இருக்கையை இரு பயணிகள் பகிர்ந்து கொண்டாலும், இருவருக்கும் தனித்தனியாக படுக்கை வசதிகளை வழங்க வேண்டும். இருப்பினும் பல ரயில்களில் RAC டிக்கெட் பயணிகளுக்கு முறையான போர்வையோ அல்லது படுக்கை விரிப்புகளோ வழங்கப்படுவதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய ரயில்வே அமைச்சகம் பயணிகளின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி, இந்த அதிரடி உத்தரவை நடைமுறைப்படுத்தி உள்ளது.
பயணிகளின் வசதிக்காக புதுப்புது நடைமுறைகளை அமல்படுத்தி வரும் ரயில்வ துறை, தற்போது RAC பயணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதிசெய்ய தட்கல் டிக்கெட் முறையில் டோக்கன் வசதியை சமீபத்தில் தான் கொண்டு வந்துள்ளது ரயில்வே துறை. தற்போது RAC பயணிகளுக்கும் படுக்கை விரிப்புகள் வழங்கப்படுவதால், RAC டிக்கெட் புக்கிங்கும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ன