ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கு தான்..!

பாக்கெட் சப்பாத்தி, பரோட்டா சாப்பிட்டால் மாரடைப்பு வருமா?: உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிப்பது எதை? - உண்மை நிலவரம் என்ன?
பாக்கெட் சப்பாத்தி
பாக்கெட் சப்பாத்திsource:AI image
Updated on

தற்போதைய அவசர வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் பணிக்கு சென்றால் தான் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியும் என்ற நிலையில் உணவு சமைக்க நேரத்தை ஒதுக்குவது முடியாத காரியமாக உள்ளது.

இந்த நேரத்தில் பயனுள்ளதாக இருக்கிறது பாக்கெட்டில் வரும் ரெடிமேட் சப்பாத்தி புரோட்டா வகையறாக்கள். பொதுவாகவே இயற்கைக்கு மாறாக செய்யப்படும் செயற்கை உணவுகளை குறிப்பாக பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவை தவிர்ப்பதே உடல் நலனுக்கு ஆரோக்கியம் என்ற கருத்து இருந்தாலும் 'பசி வந்து விட்டால் பத்தும் பறக்கும்' என்ற பழமொழிக்கேற்ப துரிதமாக செய்யப்படும் பாக்கெட் சப்பாத்திகளையே நாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஆனால் பாக்கெட் சப்பாத்தி, பரோட்டாவால் இதய நோய் வரும் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது (WHO) உலக சுகாதாரத்துறை .இதற்கு என்ன காரணம்?

பொதுவாக பாக்கெட் பரோட்டா சப்பாத்திகள் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்க மலிவான பாமாயில் மற்றும் மார்க்கரின் ( Margarine) எனப்படும் செயற்கை வெண்ணெய் சேர்க்கப்படுவதாகவும் இவற்றில் உடலுக்கு மிகவும் ஆபத்தான ட்ரான்ஸ்ஃபேட் (Trans fat) அதிக அளவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. நாம் சாப்பிடும் உணவில் தினசரி சிறிய அளவில் இந்த டிரான்ஸ்ஃபேட் சேர்த்தால் கூட இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வரும் அபாயம் 23 சதவீதம் அதிகரிப்பதாக உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ரெடிமேட் பாக்கெட் சப்பாத்தி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, தயாரிப்பு நிறுவனத்தைப் பொறுத்து சிலஉணவுச் சேர்க்கைப் பொருட்கள்/பாதுகாப்புப் பொருட்கள் (food additives/preservatives ) பயன்படுத்தப்படலாம். ஆனால் FSSAI-யின் விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட சேர்க்கைப் பொருட்கள் மட்டுமே குறிப்பிட்ட உணவு வகைகளில், நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விதி இருப்பதால் எல்லா பாக்கெட் சப்பாத்தியிலும் ஒரே பொருள் பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்கெட் சப்பாத்தியில் பயன்படுத்தப்படக்கூடிய preservatives FSSAI விதிகளில் பாதுகாக்கப்பட்ட சப்பாத்திக்கு சோர்பிக் அமிலம் (sorbic acid) மற்றும் சோடியம்/பொட்டாசியம்/கால்சியம் உப்புகள் மற்றும் அதன் போன்றவை அனுமதிக்கப்பட்டுள்ளன. சப்பாத்தி கெடாமல் இருக்க சேர்க்கப்படும் preservative-ஐ விட, அதில் பயன்படுத்தப்படும் எண்ணெயில் நலன் கெடும் trans fat எனப்படும் கொழுப்பு உள்ளதா என்பதை கவனிப்பதுதான் இதய ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியம் என்கின்றனர் உணவு சுகாதார நிபுணர்கள்.

(Trans fat) டிரான்ஸ்ஃபேட் மொத்த கலோரி அளவில் 1%-க்கும் குறைவாக இருக்க வேண்டும். 2,000 கலோரி உணவில் இது ஒரு நாளைக்கு 2.2 கிராமுக்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆகவே அனுமதிக்கப்பட்ட அளவில் பயன்படுத்தப்படும் sorbate போன்ற preservatives-ஐ மட்டும் வைத்து “இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும்” என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்றும் இதயத்திற்கு கவலைக்குரியதாக இருப்பது கெட்ட கொழுப்பை (LDL) அதிகரித்து, HDL எனப்படும் நல்ல கொழுப்பை குறைத்து, இதய நோய் அபாயத்தை அதிகரிக்க காரணமாக இருப்பது தொழில்முறை டிரான்ஸ் கொழுப்பு (industrial trans fat) .என்று WHO கூறுகிறது.

Are only parottas harmful to the body?
Are only parottas harmful to the body?

இதனால் காலப்போக்கில் ரத்தக்குழாய்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து ரத்தக்குழாய் சுருக்கம்/அடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்றும் FSSAI-யும் அதிக கொழுப்பு, உப்பு கொண்ட பாக்கெட் உணவுகளை வழக்கமான உணவாக அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க அல்லது கட்டுப்படுத்த அறிவுறுத்துகிறது

பாக்கெட் சப்பாத்தி வாங்கும்போது ப்ரிசர்வேடிவ் இருக்கிறதா?” என்பதை விட “ஹைட்ரஜனேற்றப்பட்ட/பகுதி ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய் + டிரான்ஸ் கொழுப்பு + நிறைவுற்ற கொழுப்பு எவ்வளவு? என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இருப்பினும் பாக்கெட் மேல் உள்ள தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ,பேட்ச் எண் , (Expiry/Best Before + Storage Best Before/Use By, Batch No., Refrigerate after opening) போன்ற சேமிப்பு வழிமுறைகளைப் பாருங்கள். தேதி கடந்த பாக்கெட்டை வாங்க வேண்டாம்.

ஆகவே பொதுவாக அனுமதிக்கப்பட்ட அளவில் சேர்க்கைப் பொருள் உள்ள “பாக்கெட் சப்பாத்தி/பரோட்டா சாப்பிட்டால் இதய நோய் வரும்” என்பது முழுமையாக சரியான கூற்று அல்ல என்றும் ஆனால் சில ரெடிமேட் உணவு வகைகளை தொடர்ந்து (packaged/ready-to-cook) பொருட்களை அடிக்கடி அதிக அளவில் சாப்பிடுவது இதயநலத்திற்கு ஆபத்தை அதிகரிக்கலாம் என்று மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர்.

Disclaimer for Wellness section : மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்
இதையும் படியுங்கள்:
சூடான சாப்பாட்டுல நெய் கலந்து சாப்பிடும் பழக்கத்துக்கு பின்னால இவ்வளவு பெரிய ரகசியம் இருக்கு!
பாக்கெட் சப்பாத்தி
logo
Kalki Online
kalkionline.com