ஆண் இனம் அழியப்போகிறதா? ஆய்வில் அதிர்ச்சி!

X & Y Chromosomes
X & Y Chromosomes
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

உலகம் முழுவதும் மனிதர்கள் சிதறிக்கிடப்பதற்கு ஆண் பெண் என்ற இரண்டு இனம்தான் காரணம். இப்போது திடீரென்று ஆண்கள் இனம் இல்லையென்றால்….?

மனித இனம் பெருகுவதற்கு ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் அவசியம். இந்த இனப்பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது க்ரோமோசோம்கள். ஆண்களுக்கு X மற்றும் Y க்ரோமோசோம்கள் உள்ளன. பெண்கள்ளுக்கு இரண்டு X க்ரோமோசோம்கள் உள்ளன. ஆண்களின் இந்த Y க்ரோமோசோமே ஆண் பாலினத்தில் இனப்பெருக்க உறுப்புகளை உருவாக்கும் மரபணுக்களை கொண்டுள்ளது.

X க்ரோமோசோமுடன் ஒப்பிடும்போது Y க்ரோமோசோம் சிறியதாக உள்ளது என்றாலும், இது கருவில் உள்ள டெஸ்டிஸ் ஆண் உறுப்பு விரைகளின் வளர்ச்சியை தூண்டுகிறது.

ஒரு பெண் கருத்தரித்த 12 வாரங்களில் பாலினத்தை நிர்ணயிக்கும் பகுதியான Y குரோமோசோமின் முதன்மை மரபணு, ஆண் இனப்பெருக்க உறுப்புகளை உருவாக்குவதற்கு மரபணு பாதையை செயல்படுத்துகிறது. இந்த மரபணு மற்றொரு முக்கிய மரபணுவான SOX9 தூண்டுவதன் மூலம் செயல்படுகிறது. இது இந்த குழந்தை ஆணாக வளர்வதை உறுதி செய்கிறது.

அந்தவகையில், இந்த Y க்ரோமோசோம் குறைந்து வருவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் Y குரோமோசோம் அதன் சொந்த 1438 மரபணுக்களில் 1393 ஐ இழந்துவிட்டதாக மரபியல் பேராசிரியரான ஜெனிபர் ஏ. மார்ஷல் கிரேவ்ஸ் தெரிவித்துள்ளார். மீதமுள்ள மரபணுக்களும் இன்னும் 10 மில்லியன் ஆண்டுகளில் முற்றிலும் இழந்துவிடலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. அகையால், 10 மில்லியன் அண்டுகள் கழித்து முழுவதுமாக ஆண்கள் இனம் அழிந்துவிடலாம் என்ற கவலைத் தோன்றியுள்ளது.

இந்த கவலைக்கு ஜப்பானில் நடத்தப்பட்ட ஸ்பைனி எலி குறித்த ஆராய்ச்சி ஆறுதல் அளித்துள்ளது. ஏன் தெரியுமா?

Y க்ரோமோசோம் இல்லாத ஸ்பைன் எலியின் ஆண் பாலினத்தை மீட்டெடுக்க ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் Y க்ரோமோசோம் நகர்ந்து மற்ற க்ரோமோசோம்களுடன் இணைந்தது தெரியவந்தது. முக்கியமாக குரோமோசோம் 3 ல் உள்ள SOX9 மரபணுவுக்கு அருகில் உள்ள டிஎன்ஏ நகல். இது ஆண்களிடம் மட்டும் உள்ள மரபணு. இது பெண்களிடம் இல்லாதது.

இதையும் படியுங்கள்:
Water Fasting பற்றிய முழு விவரங்கள் இதோ! 
X & Y Chromosomes

அதனால் காணாமல் போன Y குரோமோசோமின் SRY மரபணுவின் பங்கை இது எடுத்துகொள்கிறது. இதனால், Y க்ரோமோசோம் இல்லையென்றாலும்கூட அந்த இனத்தை அழியவிடாமல் தடுப்பதற்கு வழி இருக்கிறது என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது.

ஆனாலும், இன்னும் மனிதர்களுக்கு இது செயல்படுத்திப் பர்க்கவில்லை என்பதால் எதையும் இறுதியாக சொல்லிவிட முடியாது.

ஒருவேளை 10 மில்லியன் ஆண்டுகளுக்கு பின் ஆண் இனம் அழிந்துவிட்டால், அது மனித இனம் அழிவதற்கான முக்கிய புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com