ISRO-ல் 413 பணியிடங்கள்! எழுத்துத்தேர்வு கிடையாது... உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பெங்களூரில் உள்ள URSC மையத்தில் அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ISRO|இஸ்ரோ வேலைவாய்ப்பு
ISRO|இஸ்ரோ வேலைவாய்ப்பு
Updated on

மத்திய அரசு நிறுவனமான இஸ்ரோவில் இருந்து, 100க்கும் மேற்பட்ட முதல்நிலை விஞ்ஞானிகள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர், கடந்த சில மாதங்களாக திடீரென விலகிய நிலையில், புதிய விஞ்ஞானிகளை சேர்த்து, தொடர்ச்சியான பணிகளை மேம்படுத்தும் முயற்சியில், இஸ்ரோ மத்திய ஆட்சேர்ப்பு வாரியமான ஐ.சி.ஆர்.பி., மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் எதிரொலியாக, பொறியியல் மற்றும் வணிகப் பயிற்சிப் பிரிவுகளில் மொத்தம் 410 பணியிடங்களுக்கான அறிவிப்பை ISRO தனது அதிகாரப்பூர்வ இணையதளமான isro.gov.in-ல் வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் (URSC), பட்டதாரி, தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் வணிகப் பயிற்சி (Commercial Practice) ஆகிய பிரிவுகளுக்கான பயிற்சிப் பணியிடங்களை (Apprentice positions) நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) வெளியிட்டுள்ளது.

இப்பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்ப விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள், பதிவுப் படிவத்தில் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வு மெரிட் லிஸ்ட் அடிப்படையில் நடைபெறுகிறது. எழுத்துத்தேர்வு எதுவும் கிடையாது.

பட்டதாரி, தொழில்நுட்ப வல்லுநர் (டிப்ளமோ) மற்றும் வர்த்தக நடைமுறையில் டிப்ளமோ முடித்த பயிற்சி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும்.

இந்தியாவின் மிகச்சிறந்த விண்வெளி நிறுவனங்களில் ஒன்றில் நேரடி அனுபவம் பெற நீங்கள் ஆர்வமாக இருந்தால், ஆகஸ்ட் 29, 2026-க்குள் NATS இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இஸ்ரோ வேலைவாய்ப்பு முக்கிய விவரங்கள்

பணியின் பெயர் - இஸ்ரோ யுஆர்எஸ்சி பயிற்சியாளர்

நிறுவனம் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையம் (URSC), பெங்களூரு

வேலை இடம் - பெங்களூரு, கர்நாடகா

பணியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள் - 410

பட்டதாரி தொழிற்பயிற்சி காலிப்பணியிடங்கள்(Graduate Apprentice (B.E / B.Tech)) – 220 இடங்கள்

தொழில்நுட்பப் பயிற்சியாளர் காலிப்பணியிடங்கள் (Technician Apprentice (Diploma)) – 120 இடங்கள்

applying ISRO job online
applying ISRO job onlineAI Image

வணிக நடைமுறை தொழிற்பயிற்சி காலிப்பணியிடங்கள் (Commercial Practice Apprentice) – 70 இடங்கள்

கல்வி தகுதி - பட்டப்படிப்பு முடித்தவர்களும், டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். (2022 முதல் 2026 வரை தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள்).

விண்ணப்பப் பதிவு தொடக்கம்: ஜூலை 29

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 28 ( இரவு 11:59 மணி வரை)

தேர்வு முறை - தகுதி அடிப்படையிலான குறுகிய பட்டியல் மற்றும் ஆவண சரிபார்ப்பு. அதாவது தேர்வு உங்கள் கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் அமையும், எனவே உங்கள் மதிப்பெண்கள் இங்கு முக்கியமானவை. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். (பயணச் செலவுகள் வழங்கப்படாது).

மாதந்திர உதவித்தொகை (Stipend):

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் , 12 மாத பயிற்சிக் காலத்தில் மாதாந்திர உதவித்தொகையைப் பெறுவார்கள் .

இதையும் படியுங்கள்:
வேலைக்கு அழைக்கும் இஸ்ரோ... மாதம் ரூ.1.42 லட்சம் சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி?
ISRO|இஸ்ரோ வேலைவாய்ப்பு

Graduate Apprentice: மாதம் ரூ. 12,300

Technician & Commercial Practice: மாதம் ரூ. 10,900

விண்ணப்பிக்கும் முறை: NATS இணையதளம் (nats.education.gov.in) அல்லது ISRO Official Website மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒரு மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஆவண சரிப்பார்ப்பு நிறைவடைந்த பிறகு தகுதித் தேர்வில் பெற்ற கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
நாசா மற்றும் இஸ்ரோ விண்கலங்களை வழிநடத்தும் 'அகத்தியர்' நட்சத்திரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
ISRO|இஸ்ரோ வேலைவாய்ப்பு

இஸ்ரோவில் வழங்கப்படும் நிஜ உலகப் பயிற்சி மூலம் உங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி என்பதால் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மறாக்காமல் விண்ணப்பியுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com