ஜியோவின் 'Happy New Year 2.0' சலுகை! அன்லிமிடெட் 4G, 5G டேட்டா திட்டங்கள்! முழு விவரம்..!

ஜியோ தனது 'Happy New Year 2.0' சலுகையின் கீழ் அன்லிமிட்டெட் 4G மற்றும் 5G டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Jio Happy New Year 2.0 plans
Jio Happy New Year 2.0 plansAI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

இந்திய டெலிகாம் சந்தையில் 524 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் மிகப்பெரிய மொபைல் மற்றும் முன்னணி டிஜிட்டல் இணைப்பு சேவை வழங்கும் நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தனது 10-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களைக் குஷிப்படுத்தும் வகையில் 'ஹேப்பி நியூ இயர் 2.0' (Happy New Year 2.0) என்ற பெயரில் புதிய அன்லிமிடெட் (Unlimited) 4G மற்றும் 5G டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2016 செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ வணிக ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

கடந்த மார்ச் 31 நிலவரப்படி இந்தியா முழுவதும் சுமார் 524.4 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு ஜியோ முதலிடத்தில் உள்ளது. இதில் 268.5 மில்லியனுக்கும் அதிகமானோர் 5ஜி (5G) சேவையைப் பயன்படுத்துகின்றனர். வருவாய் மற்றும் ஒரு பயனருக்கான சராசரி வருவாயில் (ARPU) ஏர்டெல் முன்னணியில் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் பிராட்பேண்ட் விரிவாக்கத்தில் ஜியோ தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

பயனர்களை ஈர்க்க சிம் கார்டை இலவச பயன்பாட்டுக்கு வழங்கியது. அதன் பின்னர் ரீசார்ஜ் கட்டணங்களை அறிமுகம் செய்தது. இப்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் ஜியோ தனது 'Happy New Year 2.0' சலுகையின் கீழ் அன்லிமிட்டெட் 4G மற்றும் 5G டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

முக்கியத் திட்டங்கள் மற்றும் தொடக்கத் தேதிகள் (ஜியோ திட்டங்கள்):

ரூ.399 திட்டம்: ஜியோவின் புதிய முதன்மைத் திட்டமாக ரூ. 399 ரீசார்ஜ் அறிமுகமாகியுள்ளது.

ஜியோ திட்டங்கள்
Jio|ஜியோ திட்டங்கள்

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தில், தினசரி வரம்பே இல்லாமல் அன்லிமிடெட் 4G மற்றும் 5G டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் கிடைக்கும் அதுமட்டுமன்றி தினமும் 100 எஸ்.எம்.எஸ் (SMS) கிடைக்கும். மேலும், ரூ. 4,000 மதிப்புள்ள 12 மாதங்களுக்கான Canva Pro சந்தா, JioHotstar Mobile, FanCode, JioGames மற்றும் 50GB JioAICloud இலவச ஸ்டோரேஜ் ஆகியவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஜியோவின் புதிய முதன்மைத் திட்டம் நவம்பர் 24 முதல் கிடைக்கும்.

ரூ.3,999 திட்டம்: இது அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் டென்ஷன் வேண்டாம் என நினைப்பவர்களுக்காக 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட வருடாந்திரத் திட்டமாகும். அன்லிமிட்டெட் 4G மற்றும் 5G டேட்டா சலுகை உள்ளது. மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
ஜியோ ஐபிஓ அலாட்மென்ட் ரகசியம்: பங்குதாரர் பிரிவில் ஏமாற்றம் ஏன்?
Jio Happy New Year 2.0 plans

அதுமட்டுமின்றி, கூடுதலாக, ரூ. 1,590 மதிப்புள்ள 12 மாத Canva Pro Lite சந்தா, JioHotstar Mobile, FanCode மற்றும் 50GB JioAICloud ஆகியவை இலவசமாகக் கிடைக்கும். நவம்பர் 24 முதல் கிடைக்கும்.

ரூ.25 திட்டம்: அவசரத்திற்கு அன்லிமிட்டெட் 5G டேட்டா தேவைப்படுபவர்களுக்காக இந்த மலிவு விலை ஆட்-ஆன் பேக்குகளை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் இரண்டு நாட்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டாவும் கிடைக்கும். இதில் வேகக் குறைப்போ அல்லது டவுன்லோடு வரம்போ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 24 முதல் கிடைக்கும்.

ரூ.15 திட்டம்: இது 1 நாளுக்கு அன்லிமிட்டெட் 5G டேட்டா வழங்கும் திட்டமாகும். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. இதில் வேகக் குறைப்போ அல்லது டவுன்லோடு வரம்போ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.50 இரவு நேர டேட்டா திட்டம்: நைட் ஷிப்ட் வேலை செய்பவர்களுக்காக ரூ. 50 விலையில் புதிய 'அன்லிமிடெட் நைட் டேட்டா' பேக் அறிமுகமாகியுள்ளது. 28 நாட்களுக்கு தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அன்லிமிட்டெட் 4G மற்றும் 5G டேட்டா வழங்கும். இந்த நைட் டேட்டா உங்களின் வழக்கமான பகல் நேர டேட்டா இருப்பைப் பாதிக்காது. நவம்பர் 26 முதல் ரீசார்ஜ் செய்யக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஜியோ பயனாளர்களுக்கு காத்திருக்கும் ஷாக்..! இனி ரீசார்ஜ் இல்லாட்டி இன்கம்மிங் கட்..!
Jio Happy New Year 2.0 plans

வாடிக்கையாளர்கள் MyJio செயலி, ஜியோ அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அருகிலுள்ள ரீசார்ஜ் கடைகளில் இவற்றை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.