வெறும் 10 ரூபாயில் தங்கம், வெள்ளி வாங்கலாமா? ஜியோவின் அசத்தல் திட்டம்..!

ஜியோ ஃபைனான்ஸ் (JioFinance) செயலியில் வெறும் ரூபாய் 10 இருந்தாலே டிஜிட்டல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்க முடியும்.
digital gold|டிஜிட்டல் தங்கம்
digital gold|டிஜிட்டல் தங்கம்image credit-jiofinance.in
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்ய விருப்பமுள்ளவர்கள், இனி 10 ரூபாய் இருந்தாலே போதும்; முதலீடு செய்யலாம் என புதிய திட்டத்தை ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு, 'ஜியோ கோல்டு 24கே டேஸ்' என்ற சிறப்பு பண்டிகை கால திட்டத்தை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

குறைவான முதலீடு, அதிக பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் முறையில் எளிதாக தங்கம் வாங்குவதை நோக்கமாகக் கொண்டு, இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஃபைனான்ஸ் (JioFinance) செயலியில் SafeGold நிறுவனத்தின் கூட்டாண்மை மூலம் JioGold மற்றும் JioSilver ஆகிய டிஜிட்டல் சேமிப்பு திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் நீங்கள் ரூ.10 முதல் முதலீடு செய்ய முடியும்.

டிஜிட்டல் தங்கம் - ஜியோ ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இந்த முதலீட்டுத் திட்டங்களின் முக்கிய விவரங்கள்:

ஜியோ தங்கம் (SmartGold / JioGold) :

வெறும் ரூ.10-ல் இருந்து தொடங்கலாம்.

24 காரட் (99.99% தூய்மையான) தங்கத்தை வாங்கலாம்.

நீங்கள் வாங்கும் தங்கத்திற்கு இணையான தங்கம் காப்பீடு செய்யப்பட்ட பெட்டகங்களில் (Insured Vaults) பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.

உங்கள் டிஜிட்டல் தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் பணமாக மாற்றிக் கொள்ளலாம் அல்லது சான்றளிக்கப்பட்ட தங்க நாணயங்களாக, நகைகளாக உங்கள் வீட்டிற்கே டெலிவரி பெறலாம்.

ஜியோ வெள்ளி (JioSilver) :

ஜியோ ஃபைனான்ஸ் நிறுவனம் புதிதாக 'ஜியோசில்வர்' (JioSilver) என்ற டிஜிட்டல் வெள்ளி முதலீட்டு சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தச் சேவையின் கீழ், பயனர்கள் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.10 முதல் ரூ.1 லட்சம் வரையிலான தொகையில், நேரடிச் சந்தை விலையில் டிஜிட்டல் வெள்ளியை வாங்கலாம்.

பயனர்கள் தங்கள் வசம் உள்ள வெள்ளியை விற்கும்போது, ​​அதற்கான தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

99.9% தூய்மையான, இயற்பியல் வெள்ளி (Physical-backed) இருப்புடன் இணைக்கப்பட்டது.

வாராந்திர அல்லது மாதாந்திர அடிப்படையில் தொடர்ச்சியான வெள்ளி SIP-களை (Systematic Investment Plan) அமைக்கும் வசதியையும் JioSilver வழங்குகிறது.

பயனர்கள் நேரடியாக வெள்ளி நாணயங்களை வாங்கலாம் அல்லது தாங்கள் சேமித்து வைத்துள்ள டிஜிட்டல் வெள்ளியை நாணயங்களாக மாற்றிக்கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகுதியான கொள்முதல்களுக்கு JioPoints வழங்கப்படும் என்றும், இவற்றைச் செயலிக்குள் பிராண்ட் வவுச்சர்கள், ஷாப்பிங் தள்ளுபடிகள் மற்றும் கூட்டாளர் சலுகைகளைப் பெறப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கான கட்டணங்கள், ஜிஎஸ்டி மற்றும் நேரடி டெலிவரி (Redemption) தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

இதையும் படியுங்கள்:
றெக்கை கட்டிப் பறந்த தங்கம்... சத்தமில்லாமல் சறுக்கிய வெள்ளி! இன்றைய விலையில் அதிரடி மாற்றம்!
digital gold|டிஜிட்டல் தங்கம்

வாங்குவதற்கான கட்டணங்கள் மற்றும் ஜிஎஸ்டி (GST)

* நீங்கள் டிஜிட்டல் தங்கம் அல்லது வெள்ளி வாங்கும் போது, மொத்த பரிவர்த்தனை மதிப்பில் 3% ஜிஎஸ்டி (GST) கட்டாயமாக வசூலிக்கப்படும். இந்திய சட்டப்படி இது ஒரு பொருளாக (Commodity) கருதப்படுவதால் இந்த வரி விதிக்கப்படுகிறது. (உதாரணமாக: நீங்கள் ரூ.1,000-க்கு தங்கம் வாங்கினால், ரூ.30 ஜிஎஸ்டி போக மீதி ரூ.970 மதிப்புள்ள தங்கம் உங்கள் கணக்கில் சேரும்).

* தங்கம் வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் இடையே ஒரு சிறிய விலை வித்தியாசம் (Spread Cost) இருக்கும். இதில் காப்பீடு, பெட்டகப் பராமரிப்பு மற்றும் அறங்காவலர் (Trustee) கட்டணங்கள் அடங்கும்.

* நீங்கள் வாங்கும் தங்கம் மற்றும் வெள்ளி பாதுகாப்பான பிரின்க்ஸ் (Brinks) பெட்டகங்களில் சேமிக்கப்படும். இதற்கு முதல் 5 ஆண்டுகள் வரை எந்த கட்டணமும் இல்லை (இலவசம்). 5 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆண்டுக்கு 0.3% முதல் 0.4% வரை ஒரு சிறிய பராமரிப்புக் கட்டணம் வசூலிக்கப்படலாம்.

தங்கத்தை நேரில் டெலிவரி (Physical Delivery) பெறும் முறை

உங்கள் டிஜிட்டல் தங்கத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அரசாங்கத்தால் சான்றளிக்கப்பட்ட (NABL-certified) 24K தங்க நாணயங்களாகவோ அல்லது கட்டிகளாகவோ மாற்றி உங்கள் வீட்டிற்கே டெலிவரி பெற்றுக் கொள்ளலாம்.

Jio Finance
Jio Finance image credit-business-standard.com

உங்களின் டிஜிட்டல் தங்க இருப்பு 0.5 கிராம் அல்லது அதற்கு மேல் இருக்கும்போது மட்டுமே நேரில் டெலிவரி பெற விண்ணப்பிக்க முடியும்.

0.5 கிராம், 1 கிராம், 2 கிராம், 5 கிராம், மற்றும் 10 கிராம் ஆகிய அளவுகளில் நாணயங்களாகப் பெறலாம்.

தங்கத்தை நேரில் மாற்றும்போது அதற்கான சேதாரக் கட்டணம் (Making Charges), விநியோகக் கட்டணம் (Delivery Costs) மற்றும் அதற்கான ஜிஎஸ்டி (GST) தனியாக வசூலிக்கப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாணயத்தின் வடிவத்தைப் பொறுத்து இந்தக் கட்டணம் மாறுபடும்.

நீங்கள் 5 கிராமுக்கு மேல் தங்க நாணயங்களை டெலிவரி பெற விரும்பினால், டெலிவரியின் போது அரசாங்க அங்கீகாரம் பெற்ற அடையாளச் சான்றை (ஆதார்/பான் கார்டு) சமர்ப்பிக்க வேண்டும்.

உங்களின் டிஜிட்டல் தங்க இருப்பைப் பயன்படுத்தி Tanishq மற்றும் Caratlane போன்ற பிரபல நகைக்கடைகளில் நகைகளாகவும் மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
​இறங்குவது போல் பாவ்லா காட்டி.. இன்று உச்சம் தொட்ட தங்கம்! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
digital gold|டிஜிட்டல் தங்கம்

எப்படி வாங்குவது?

உங்கள் மொபைலில் JioFinance App செயலியைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் கணக்கை (KYC) சரிபார்க்கவும்.

செயலியில் உள்ள Digital Gold (SmartGold) அல்லது JioSilver பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையை (ரூ. 10-ல் இருந்து ஆரம்பித்து) உள்ளிட்டு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.

டெலிவரி பெறுவது எப்படி?

JioFinance செயலியைத் திறந்து JioGold பகுதிக்குச் செல்லவும்.

நேரடி சந்தை விலையைச் சரிபார்த்து, 'Redeem' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் பெற விரும்பும் நாணயத்தின் எடை மற்றும் அளவைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்களது டெலிவரி முகவரியை (Delivery Address) உள்ளிடவும்.

இதையும் படியுங்கள்:
Jio IPO-வில் விண்ணப்பிக்கலாமா? முதல் நாள் நிலவரமும் எச்சரிக்கையும்!
digital gold|டிஜிட்டல் தங்கம்

இறுதித் திரையில் காட்டப்படும் மேக்கிங் மற்றும் டெலிவரி கட்டணங்களைச் சரிபார்த்து, பணம் செலுத்தி ஆர்டரை உறுதி செய்யவும்.

logo
Kalki Online
kalkionline.com