

தங்கத்தின் விலை கடந்த 4 நட்களாக சரிவை சந்தித்த நிலையில், நேற்று (ஜூலை 9) மாலை திடீரென உயர்ந்தது. நேற்று முன்தினம் (ஜூலை 8) காலை மற்றும் மாலை என இரண்டு முறை தங்கத்தின் விலை சரிந்தது.
4-வது நாளாக நேற்று காலை ரூ.240 குறைந்த தங்கத்தின் விலை, மாலையில் ரூ.800 உயர்ந்து அதிர்ச்சியளித்தது. அதேபோல் வெள்ளி விலையும் காலையில் கிராமுக்கு ரூ.5 குறைந்து, மாலையில் ரூ.5 உயர்ந்தது.
இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே தங்கததின் விலை சரிந்த நிலையில், திடீரென உயர்ந்தது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஜூலை 09) தங்கம் ஒரு சவரன் ஒட்டுமொத்தமாக ரூ.560 உயர்ந்தது.
இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,06,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,320-க்கும் விற்பனையானது. 1 கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,45,000-க்கு விற்பனையானது.
நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 10) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து, ரூ.1,06,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.13,350-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த ஆண்டு இதே நாள் ஜூலை 10-ல் 1 சவரன் தங்கம் ரூ.72,160-க்கும், 1 கிராம் ரூ.9,020-க்கும் விற்பனையானது. இன்றைய விலையோடு இதனை ஒப்பிட்டுப் பார்த்தால், ஓரே ஆண்டில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட பாதியளவு உயர்ந்துள்ளது.
2025 ஜூலை 10-ல் 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், ஓரே ஆண்டில் வெள்ளியின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்த அபரிமிதமான விலை உயர்வால் தான் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர்.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:
ஜூலை 09: 1 கிராம் - ரூ.13,320 1 சவரன் ரூ.1,06,560
ஜூலை 08: 1 கிராம் - ரூ.13,250 1 சவரன் ரூ.1,06,000
ஜூலை 07: 1 கிராம் - ரூ.13,400 1 சவரன் ரூ.1,07,200
ஜூலை 06: 1 கிராம் - ரூ.13,560 1 சவரன் ரூ.1,08,480
ஜூலை 05: 1 கிராம் - ரூ.13,700 1 சவரன் ரூ.1,09,600
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:
ஜூலை 09: 1 கிராம் - ரூ.245
ஜூலை 08: 1 கிராம் - ரூ.245
ஜூலை 07: 1 கிராம் - ரூ.250
ஜூலை 06: 1 கிராம் - ரூ.250
ஜூலை 05: 1 கிராம் - ரூ.260
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது உச்சத்தில் இருந்தாலும், ஏற்ற இறக்கத்தையே சந்தித்து வருகிறது. பிரதமர் மோடியின் வலியுறுத்தலுக்குப் பின், நாட்டு மக்கள் தங்க நகை வாங்குவதை வெகுவாக குறைத்துள்ளனர். இருப்பினும் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போது மீண்டும் அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூண்டுள்ளதால், தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.