ரூ.5,000 உயர்வு.! இடியை இறக்கிய தங்கம், வெள்ளியின் இன்றைய விலையேற்றம்.!

Gold Price
Gold
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தங்கத்தின் விலை கடந்த வாரத் தொடக்கத்தில் வீழ்ச்சியை சந்தித்தது. அதேபோல் இந்த வாரமும் 2 நாட்களாக சரிவை சந்தித்து வரும் வருகிறது. தங்கத்தின் இந்த சரிவு இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், 1 லட்சத்துக்கும் கீழே குறையுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஒரு மாதத்திற்கு தங்கத்தின் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருறாதார நிபுணர்கள் கருதுகின்றனர். நேற்று (ஜூலை 13) தங்கத்தின் விலை ரூ.400 சரிந்த நிலையில், வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது.

இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,05,200-க்கும், ஒரு கிராம் ரூ.13,150-க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி ரூ.235-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 15) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து, ரூ.1,05,440-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.13,1800-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது.

2025-ம் ஆண்டு இதே ஜூலை 15-ல் 1 சவரன் தங்கம் ரூ.73,160-க்கும், 1 கிராம் ரூ.9,145-க்கும் விற்பனையானது. 2025 ஜூலை 15-ல் 1 கிராம் வெள்ளி ரூ.125-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், ஒரே ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துள்ளது.

இந்த அபரிமிதமான விலை உயர்வால் தான் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர். கடந்த ஆண்டே நீங்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்திருந்தால், தற்போது நல்ல லாபம் கிடைத்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
நலம் TN தொடக்க விழா.. மேடையிலிருந்து இறங்கி வந்த முதல்வர் விஜய்..!
Gold Price
தங்கம் விலை
Gold

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 14: 1 கிராம் - ரூ.13,150 1 சவரன் ரூ.1,05,200

ஜூலை 13: 1 கிராம் - ரூ.13,200 1 சவரன் ரூ.1,05,600

ஜூலை 12: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400

ஜூலை 11: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400

ஜூலை 10: 1 கிராம் - ரூ.13,350 1 சவரன் ரூ.1,06,800

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 14: 1 கிராம் - ரூ.235

ஜூலை 13: 1 கிராம் - ரூ.240

ஜூலை 12: 1 கிராம் - ரூ.240

ஜூலை 11: 1 கிராம் - ரூ.240

ஜூலை 10: 1 கிராம் - ரூ.245

தங்கத்தின் விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும், இப்போதும் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக சரிந்து வந்தாலும், வருங்காலத்தில் உயரும் என்றே கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
​‘ரோடு சேஃப்டி’ இனி வேற லெவல்! முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.!
Gold Price
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com