

உலகளாவிய நிகழ்வுகள் மற்றும் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினசரி மாற்றமடைகிறது. கடந்த 1 மாதத்திற்கும் மேலாக தங்கத்தின் விலையானது ஏறுவதும், இறங்குவதுமாகவே உள்ளது.
கடந்த சில வாரங்களாகவே தொடக்கத்தில் சரிந்து, பிறகு மீண்டும் உயர்வது வாடிக்கையாகி விட்டது. தங்கத்தின் இந்த விலை மாற்றம் இல்லத்தரசிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் நிலையில், ரூ.1 லட்சத்துக்கும் கீழே குறையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்குள் தங்கத்தின் விலையில் மிகப்பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
நேற்று (ஜூலை 16) தங்கத்தின் விலை ரூ.240 குறைந்த நிலையில், வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையானது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,05,200-க்கும், ஒரு கிராம் ரூ.13,150-க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி ரூ.240-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையானது.
நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 17) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து, ரூ.1,04,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.13,100-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.235-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,35,000-க்கு விற்பனையாகிறது
2025-ம் ஆண்டு இதே ஜூலை 17-ல் 1 சவரன் தங்கம் ரூ.72,840-க்கும், 1 கிராம் ரூ.9,105-க்கும் விற்பனையானது. 2025 ஜூலை 17-ல் 1 கிராம் வெள்ளி ரூ.124-க்கு விற்பனையானது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையோடு இதனை ஒப்பிட்டால், ஒரே ஆண்டு இடைவெளியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகரித்துள்ளது. இந்த அபரிமிதமான விலை உயர்வால் தான், தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து ஊக்குவிக்கிறார்கள்.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:
ஜூலை 16: 1 கிராம் - ரூ.13,150 1 சவரன் ரூ.1,05,200
ஜூலை 15: 1 கிராம் - ரூ.13,180 1 சவரன் ரூ.1,05,440
ஜூலை 14: 1 கிராம் - ரூ.13,150 1 சவரன் ரூ.1,05,200
ஜூலை 13: 1 கிராம் - ரூ.13,200 1 சவரன் ரூ.1,05,600
ஜூலை 12: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:
ஜூலை 16: 1 கிராம் - ரூ.240
ஜூலை 15: 1 கிராம் - ரூ.240
ஜூலை 14: 1 கிராம் - ரூ.235
ஜூலை 13: 1 கிராம் - ரூ.240
ஜூலை 12: 1 கிராம் - ரூ.240
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும், இப்போதும் இதன் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் சாமானிய மக்கள் மத்தியில் முதலீடு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக வருங்காலத்தில் தங்கத்தின் விலை உயரும் என்ற கணிப்பே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.