

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில வாரங்களாக ஏறுவதும், இறங்குவதுமாகவே உள்ளது. கடந்த வாரத்தில் கூட இந்த ஏற்ற இறக்கத்தைப் பார்க்க முடிந்தது. இருப்பினும் தங்கத்தின் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லையென்றே சொல்ல வேண்டும். ஆனால் இல்லத்தரசிகள் பலரும் தங்கத்தின் விலை எப்போது ரூ.1 லட்சத்திற்கு கீழே சரியும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்த 1 மாதத்தில் தங்கத்தின் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். அது விலை உயர்வா அல்லது விலை சரிவா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நேற்று (ஜூலை 19) ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மாற்றமின்றி விற்பனையானது.
இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,05,080-க்கும், ஒரு கிராம் ரூ.13,135-க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி ரூ.235-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனையானது
நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 20) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து, ரூ.1,05,200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.13,150-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கு விற்பனையாகிறது.
2025-ம் ஆண்டு இதே ஜூலை 20-ல் 1 சவரன் தங்கம் ரூ.73,360-க்கும், 1 கிராம் ரூ.9,170-க்கும் விற்பனையானது. 2025 ஜூலை 20-ல் 1 கிராம் வெள்ளி ரூ.126-க்கு விற்பனையானது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையோடு கடந்த ஆண்டு விலையை ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரே ஆண்டில் யாருமே எதிர்பார்க்காத வகையில் உயர்வை சந்தித்துள்ளது.
இந்த எதிராபாராத விலை உயர்வால் தான், தங்கம் மற்றும் வெள்ளி முதலீடு நல்ல லாபத்தைக் கொடுக்கும் என பொருளாதார நிபுணர்கள் பலரும் ஊக்குவிக்கிறார்கள்
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:
ஜூலை 19: 1 கிராம் - ரூ.13,135 1 சவரன் ரூ.1,05,080
ஜூலை 18: 1 கிராம் - ரூ.13,135 1 சவரன் ரூ.1,05,080
ஜூலை 17: 1 கிராம் - ரூ.13,100 1 சவரன் ரூ.1,04,800
ஜூலை 16: 1 கிராம் - ரூ.13,150 1 சவரன் ரூ.1,05,200
ஜூலை 15: 1 கிராம் - ரூ.13,180 1 சவரன் ரூ.1,05,440
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:
ஜூலை 19: 1 கிராம் - ரூ.235
ஜூலை 18: 1 கிராம் - ரூ.235
ஜூலை 17: 1 கிராம் - ரூ.235
ஜூலை 16: 1 கிராம் - ரூ.240
ஜூலை 15: 1 கிராம் - ரூ.240
வருங்காலத்தில் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும் என்ற கணிப்பே முதலீட்டுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் வெள்ளியின் விலை இனி உயர்வது சற்று கடினம் என்றே சொல்லப்படுகிறது. ஏனெனில் வெள்ளி விலையைப் பொறுத்தவரை உயர்வோ அல்லது வீழ்ச்சியோ அது பெரிய அளவில் இருக்கும்.
இந்த ஆண்டிலேயே வெள்ளி விலை அதிகபட்சமாக ஒரு கிராம் ரூ.430 வரை உயர்ந்ததை யாரும் மறக்க வேண்டாம். ஆனால் இப்போது இதன் விலை பாதியாக சரிந்துள்ளது
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.