4 நாட்களில் ரூ.2,920 உயர்வு..! ஷாக் கொடுத்த தங்கம் விலை.!

Gold rate hike
தங்கம் விலை
Updated on

சர்வதேச அளவிலான பொருளாதார மாற்றம், போர் மற்றும் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் தினசரி மாற்றம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.50,000 வரை விற்பனையானது. ஆனால் இப்போது வெறும் ஒரே வருட கால இடைவெளியில் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்துள்ளது. சாமானிய மக்களுக்கு தங்கத்தின் விலையேற்றம் பேரிடியாக விழுந்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை மீண்டும் போர் தொடங்கினால், அது தங்கத்தின் விலையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

நடப்பாண்டின் தொடக்கத்திலும் தங்கம் விலை உயர்வை சந்தித்த நிலையில், 2026 ஆம் ஆண்டு முடிவதற்குள் ஒன்றரை லட்சத்தைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலையில் பெரிய மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து உயரந்து வரும் தங்கம் கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,360 உயர்ந்துள்ளது.

நேற்று (ஜூலை 22) ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,680 உயர்ந்து ஒரு சவனர் ரூ.1,07,440-க்கு விற்பனையானது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.245-க்கு விற்பனையானது.

இதையும் படியுங்கள்:
​உயிர் காக்கும் மருந்துகளே ஆபத்தா? - ஆய்வில் சிக்கிய 159 தரமற்ற மருந்துகள்!
Gold rate hike

தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 23) தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து, ரூ.1,08,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.13,500-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த மாதம் இதே தேதியில் (ஜூன் 23) ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,480-க்கு விற்பனையானது. ஒரு மாத இடைவெளியில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதால், பெரிய அளவில் மாற்றமில்லை.

கடந்த 2025 ஆம் ஆண்டில் இதே தேதியை (2025 ஜூலை 21) எடுத்துப் பார்த்தால், ஒரு சவரன் தங்கம் ரூ.75,040-க்கு விற்பனையாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தான் தங்கத்தின் விலை ஏற்றத்தைக் கண்டுள்ளது. இந்த ஏற்றம் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தை அடைந்தது.

இது ஆடி மாதம் என்பதால் தங்க நகைகளுக்கு பல நகைக் கடைகளில் சேதாரம், செய்கூலிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. விலை உயர்வால், ஆடைகளைப் போல் தங்கத்திற்கும் ஆடி ஆஃபர் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

தங்கம் விலை
Gold Price

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

ஜூலை 22: 1 கிராம் - ரூ.13,230 1 சவரன் ரூ.1,07,440

ஜூலை 21: 1 கிராம் - ரூ.13,220 1 சவரன் ரூ.1,05,760

ஜூலை 20: 1 கிராம் - ரூ.13,150 1 சவரன் ரூ.1,05,200

ஜூலை 19: 1 கிராம் - ரூ.13,135 1 சவரன் ரூ.1,05,080

ஜூலை 18: 1 கிராம் - ரூ.13,135 1 சவரன் ரூ.1,05,080

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

ஜூலை 22: 1 கிராம் - ரூ.245

ஜூலை 21: 1 கிராம் - ரூ.240

ஜூலை 20: 1 கிராம் - ரூ.235

ஜூலை 19: 1 கிராம் - ரூ.235

ஜூலை 18: 1 கிராம் - ரூ.235

முதலீட்டு யுக்தி:

தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு தற்போதைய சூழலில் நல்ல யுக்தி தான். இருப்பினும் வெள்ளியைக் காட்டிலும் தங்கத்தில் முதலீடு செய்வது தான் நல்ல முதலீட்டு யுக்தி என நகைக்கடை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில் வெள்ளியின் விலையானது நிலைத்தன்மையுடன் இருக்காது. திடீரென ஏறும்; ஆனால் ஏறிய வேகத்திலேயே திடீரென இறங்கி விடும். முதலீடு செய்வதற்கு முன் பொருளாதார ஆலோசகருடன் நன்கு ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
பதவி ஒரு பக்கம், ரசனை மறுபக்கம்! ஜனநாயகனுக்காக லீவ் போட்ட அமைச்சர்..!!
Gold rate hike

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

logo
Kalki Online
kalkionline.com