வார தொடக்கத்திலேயே ஷாக்..! தாறுமாறாக எகிறியது தங்கம் விலை.!

ஜூலை 27: தங்கம் விலை நிலவரம்.!
தங்கம் விலை நிலவரம்
Gold Price
Updated on

அமெரிக்க சந்தை நிலவரங்கள், உலகளாவிய போர்த் தாக்கம் மற்றும் பொருளாதார மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், தங்கத்தின் விலை தினந்தினம் மாற்றத்தை சந்தித்து வருகிறது.

இன்று (ஜூலை 27) சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 32 டாலர் உயர்ந்து, 4,104 டாலருக்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியின் விலை 1 டாலர் உயர்ந்து 59.67 டாலருக்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம், இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தை மிகச் சிறந்த முதலீடாக கருதி, இந்தியன் ரிசர்வ் வங்கி டன் கணக்கிலான தங்கத்தை வாங்கிக் குவித்துள்ளது. தங்கத்தில் மொத்தமாக முதலீடு செய்ய முடியவில்லை என்றாலும், மாதந்தோறும் ரூ.1,000 வீதம் சிறுக சிறுக முதலீடு செய்வதும் நல்ல பலனைக் கொடுக்கும்.

நேற்று (ஜூலை 26) ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,05,840-க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கு விற்பனையானது.

தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 27) தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து, ரூ.1,06,960-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை உச்சத்தில் இருக்கும் இந்நேரத்தில், ஜவுளிக் கடைகள் போல நகைக் கடைகளும் ஆடித் தள்ளுபடி வழங்கினால் ஜாக்பாட் ஆஃபராக இருக்கும். இதுவரை இப்படியான ஒரு அறிவிப்பு வெளியானதில்லை. விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, வருங்காலத்தில் இதுமாதிரியான தள்ளுபடிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
2026-ல் அதிக லாபத்தை தரப்போகும் முதலீடு இதுதான்.! பிரபல முதலீட்டாளர் பளீச்..!
தங்கம் விலை நிலவரம்
 தங்கம் விலை
Gold price

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

ஜூலை 26: 1 கிராம் - ரூ.13,230 1 சவரன் ரூ.1,05,840

ஜூலை 25: 1 கிராம் - ரூ.13,230 1 சவரன் ரூ.1,05,840

ஜூலை 24: 1 கிராம் - ரூ.13,230 1 சவரன் ரூ.1,05,840

ஜூலை 23: 1 கிராம் - ரூ.13,500 1 சவரன் ரூ.1,08,000

ஜூலை 22: 1 கிராம் - ரூ.13,230 1 சவரன் ரூ.1,07,440

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

ஜூலை 26: 1 கிராம் - ரூ.240

ஜூலை 25: 1 கிராம் - ரூ.240

ஜூலை 24: 1 கிராம் - ரூ.240

ஜூலை 23: 1 கிராம் - ரூ.245

ஜூலை 22: 1 கிராம் - ரூ.245

தங்கம் மற்றும வெள்ளியில் முதலீடு செய்ய நல்ல நேரம் என்று ஒன்று இல்லவே இல்லை. காலம் தாழ்த்தாமல் விரைவாக முதலீடு செய்வது மட்டுமே சிறந்தது.

இதையும் படியுங்கள்:
​ETF-களை நம்பி முதலீடு செய்யலாமா.? ராபர்ட் கியோசாகியின் திடீர் எச்சரிக்கை.!
தங்கம் விலை நிலவரம்
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com