செம சான்ஸ்.! மளமளவென சரிந்த தங்கம்.! ஒரே நாளில் ரூ.1,240 குறைந்தது.!

gold price
gold priceimage credit-dailynewsegypt.com
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று சிறிய அளவில் மட்டுமே தங்கத்தின் விலை உயர்ந்தது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் தொடங்கினால், அது தங்கத்தின் விலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

விலை உயர்வை முன்னரே கணித்த இந்தியன் ரிசர்வ் வங்கி, டன் கணக்கிலான தங்கத்தை வாங்கிக் குவித்துள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள இல்லத்தரசிகள் அனைவருடனும் போட்டி போடும் அளவிற்கு ரிச்ர்வ் வங்தி தங்கத்தை வாங்கியுள்ளது.

தங்க முதலீடு தற்போது நல்ல யுக்தியாக இருக்கும் சூழலில், மாதந்தோறும் ரூ.1,000 வீதம் சிறுக சிறுக முதலீடு செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

நேற்று (ஜூலை 27) வாரத்தின் முதல் நாளிலேயே தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.1,05,840-க்கு விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கு விற்பனையானது.

தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 28) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,240 குறைந்து, ரூ.1,05,720-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.235-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,35,000-க்கு விற்பனையாகிறது

ஆடித் தள்ளுபடியாக தற்போது செய்கூலி, சேதாரம் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. விலையில் தள்ளுபடி செய்தால் அதுதான் ஜாக்பாட் ஆஃபராக இருக்கும். இதுவரை நகைக் கடைகளில் இப்படியான ஒரு அறிவிப்பு வெளியானதில்லை.

தங்கத்தின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, வருங்காலத்தில் இதுமாதிரியான தள்ளுபடிகள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
'ஆட்டோ ஸ்வீப்' : இப்படி கூட பணத்தை முதலீடு பண்ணலாம்!
gold price
gold price
goldAI Image

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

ஜூலை 27: 1 கிராம் - ரூ.13,370 1 சவரன் ரூ.1,06,960

ஜூலை 26: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400

ஜூலை 25: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400

ஜூலை 24: 1 கிராம் - ரூ.13,230 1 சவரன் ரூ.1,05,840

ஜூலை 23: 1 கிராம் - ரூ.13,500 1 சவரன் ரூ.1,08,000

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

ஜூலை 27: 1 கிராம் - ரூ.240

ஜூலை 26: 1 கிராம் - ரூ.240

ஜூலை 25: 1 கிராம் - ரூ.240

ஜூலை 24: 1 கிராம் - ரூ.240

ஜூலை 23: 1 கிராம் - ரூ.245

கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை மட்டுமே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. ஆனால் வெள்ளி விலை மாற்றமில்லாமல் ரூ.240-க்கே விற்பனையாகிறது. வெள்ளியின் தற்போதைய நிலைத்தன்மை, வெள்ளி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
2026-ல் அதிக லாபத்தை தரப்போகும் முதலீடு இதுதான்.! பிரபல முதலீட்டாளர் பளீச்..!
gold price
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com