தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் கடந்த 2 மாதங்களாக பெரிய அளவில் சரிவோ அல்லது உயர்வோ இல்லை. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்குள் குறையுமா என எதிர்பார்க்கும் நகைப் பிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தங்கத்தின் விலை வெகுவாக சரியும் என்ற கணிப்பே இதற்கு முக்கிய காரணம். தங்கம் குறித்த கணிப்புகள் வெளியானாலும், பெரும்பாலான சமயங்களில் அவை பொய்க்கின்றன. ஆகையால் விலை சரிந்தால் மட்டுமே இந்தக் கணிப்பையும் நம்மால் ஏற்க முடியும்.
கடந்த 2 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.1,720 வரை சரிந்த நிலையில், நேற்று (ஜூலை 30) தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது. இதன்படி ஒரு சவரன் ரூ.1,05,840-க்கு விற்பனையானது. கடந்த 2 நாட்களாக வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனையாகி வருகிறது.
தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 31) தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து, ரூ.1,06,040-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.13,255-க்கு விற்பனையாகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.800 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 உயர்ந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போது 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பே ரூ.95.37 காசுகளாக உள்ளது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனையாகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்போது மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹார்மூஸ் நீரிணைக்கு அந்நியர்கள் எவரும் சொந்தம் கொண்டாட முடியாது என ஈரான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றம் அதிகரித்தால், அது நேரடியாக பொருளாதார சந்தையை பாதிக்கும். இதன் விளைவு நிச்சயமாக தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஜூலை 30: 1 கிராம் - ரூ.13,230 1 சவரன் ரூ.1,05,840
ஜூலை 29: 1 கிராம் - ரூ.13,155 1 சவரன் ரூ.1,05,240
ஜூலை 28: 1 கிராம் - ரூ.13,215 1 சவரன் ரூ.1,05,720
ஜூலை 27: 1 கிராம் - ரூ.13,370 1 சவரன் ரூ.1,06,960
ஜூலை 26: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
ஜூலை 30: 1 கிராம் - ரூ.235
ஜூலை 29: 1 கிராம் - ரூ.235
ஜூலை 28: 1 கிராம் - ரூ.235
ஜூலை 27: 1 கிராம் - ரூ.240
ஜூலை 26: 1 கிராம் - ரூ.240
அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முதலீடுகள் குறையும் போது தானாகவே தங்கத்தின் விலையில் சரிவு ஏற்படும்
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.