ரூ.2,400 வரை எகிறிய தங்கம் விலை.! நகைப் பிரியர்கள் அதிர்ச்சி.!

Gold Price today
Gold Price
Updated on

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தினசரி மாற்றம் ஏற்படுவதற்கு சர்வதேச நடவடிக்கைகளும் ஒரு காரணம் தான். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் தங்கத்தின் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், டாலர் வீழ்ச்சியால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்திருப்பதே மிக முக்கிய காரணமாகும்.

தங்கத்தை ஆபரண நகையாக வாங்கும் சாமானிய மக்கள், அதில் முதலீடு செய்ய முயற்சிக்க வேண்டும். முதலீட்டுப் பார்வையில் தங்கம் விலையை கவனித்து வந்தால், அதன் விலை உயர்வது நமக்கெல்லாம் மகிழ்ச்சியாகவே இருக்கும்.

நேற்று (ஜூன் 11) தங்கம் விலை 1 சவரன் ரூ.2,400 குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,08,000-க்கும், ஒரு கிராம் ரூ.13,500-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,60,000-க்கு விற்பனையானது

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 12) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,400 உயர்ந்து, ரூ.1,10,400-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.300 உயர்ந்து ரூ.13,800-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.265-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,65,000-க்கு விற்பனையாகிறது.

gold price
gold rate

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 11: 1 கிராம் - ரூ.13,500 1 சவரன் ரூ.1,08,000

ஜூன் 10: 1 கிராம் - ரூ.13,800 1 சவரன் ரூ.1,10,400

ஜூன் 9: 1 கிராம் - ரூ.14,200 1 சவரன் ரூ.1,13,600

ஜூன் 8: 1 கிராம் - ரூ.14,070 1 சவரன் ரூ.1,12,560

ஜூன் 7: 1 கிராம் - ரூ.14,200 1 சவரன் ரூ.1,13,600

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 11: 1 கிராம் - ரூ.260

ஜூன் 10: 1 கிராம் - ரூ.260

ஜூன் 9: 1 கிராம் - ரூ.270

ஜூன் 8: 1 கிராம் - ரூ.270

ஜூன் 7: 1 கிராம் - ரூ.270

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.! ஓட்டுநர் உரிமம் இருக்கா.? இனி 50 வயது வரை அலைய தேவையில்லை!
Gold Price today

கடந்த ஆண்டு இதே ஜூன் 12-ல் தங்கம் விலை என்னவாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரிந்தால் நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். 2025 ஜூன் 12-ல், 1 சவரன் தங்கம் ரூ.72,800-க்கு விற்பனையானது. நடப்பாண்டு இதே தேதியுடன் ஒப்பிட்டால் ரூ.37,600 உயர்ந்துள்ளது. நீங்கள் கடந்த வருடமே தங்கத்தை வாங்கியிருந்தால், உங்களுக்கு இந்தத் தொகை தற்போது லாபமே.

அதேபோல் 2025 ஜூன் 12 அன்று 1 கிராம் வெள்ளி ரூ.119-க்கு விற்பனையானது. ஆனால் இன்று ரூ. 260-க்கு விற்பனையாகிறது. இதற்கிடையில் இருக்கும் வித்தியாசமானது கடந்த ஆண்டு விறபனையான வெள்ளியின் விலையை விட அதிகம்.

கடந்த வருடம் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கியவர்களுக்கு, தற்போது நல்ல லாபம் கிடைத்துள்ளது. கவலைப்பட வேண்டாம்; இப்போது வாங்கினால் கூட, அடுத்த வருடத்தில் தங்கமும், வெள்ளியும் உங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
​ETF-களை நம்பி முதலீடு செய்யலாமா.? ராபர்ட் கியோசாகியின் திடீர் எச்சரிக்கை.!
Gold Price today
logo
Kalki Online
kalkionline.com