#JUST IN: காலையிலேயே குட் நியூஸ்.! தங்கம் விலையில் திடீர் சரிவு!

Gold rate
Gold
Updated on

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் தினசரி மாற்றம் ஏற்படுவதால், கடந்த சில நாட்களாக ஏறுவதும், இறங்குவதுமாகவே இருக்கிறது. ஆனால் இனி விலையேற்றம் அதிகமாக இருக்கும் என்றே பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரவுள்ளது என்ற அறிவிப்பு வெளியான உடனேயே சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 100 டாலருக்கும் மேல் உயர்ந்தது. இனி தங்கம் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயரும் என்ற கணிப்பு, நகைப் பிரியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தங்கத்தை இனி ஆபரண நகையாக வாங்கும் சாமானிய மக்கள், அதில் முதலீடு செய்ய முயற்சிக்க வேண்டும். முதலீட்டுப் பார்வையில் தங்கத்தின் விலையை கவனித்து வந்தால், அதன் விலை உயர்வது நமக்கெல்லாம் மகிழ்ச்சியாகவே இருக்கும்.

நேற்று (ஜூன் 16) ஒரு சவரன் தங்கம் ரூ.80-ம், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000-ம் குறைந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,12,480-க்கும், ஒரு கிராம் ரூ.14,060-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,75,000-க்கு விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 17) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து, ரூ.1,12,240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.14,030-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு இதே ஜூன் 17-ல் 1 சவரன் தங்கம் ரூ.73,600-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், இடையில் இருக்கும் வித்தியாசமானது கடந்த ஆண்டு விறபனையான தங்கத்தில் கிட்டத்தட்ட 50% விலை உயர்ந்துள்ளது.

அதேபோல் 2025 ஜூன் 17 அன்று 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால் இடையில் இருக்கும் வித்தியாசமானது, கடந்த ஆண்டு விறபனையான வெள்ளியின் விலையை விட அதிகம்.

Gold and Silver Rates
Gold and Silver
இதையும் படியுங்கள்:
வேலை மாறினாலும் இனி கவலை வேண்டாம்! ஊழியர்களுக்கு சூப்பரான பென்ஷன் அப்டேட்!
Gold rate

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 16: 1 கிராம் - ரூ.14,060 1 சவரன் ரூ.1,12,480

ஜூன் 15: 1 கிராம் - ரூ.14,070 1 சவரன் ரூ.1,12,560

ஜூன் 14: 1 கிராம் - ரூ.13,860 1 சவரன் ரூ.1,10,880

ஜூன் 13: 1 கிராம் - ரூ.13,860 1 சவரன் ரூ.1,10,880

ஜூன் 12: 1 கிராம் - ரூ.13,800 1 சவரன் ரூ.1,10,400

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 16: 1 கிராம் - ரூ.275

ஜூன் 15: 1 கிராம் - ரூ.280

ஜூன் 14: 1 கிராம் - ரூ.270

ஜூன் 13: 1 கிராம் - ரூ.270

ஜூன் 12: 1 கிராம் - ரூ.265

2035-ல் ஒரு சவரன் தங்கம் ரூ.9 லட்சத்திற்கும் மேல் விற்பனையாகும் என பிரபல முதலீட்டாளர் ராபர்ட் கியோசாகி கணித்துள்ளார். குறுகிய காலத்தில் அதிக இலாபம் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு நிகராக, தங்கம் மற்றும் வெள்ளி முதலீடும் இலாபம் கொடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
2035-ல் தங்கத்தின் விலை ரூ.9 லட்சமா? கியோசாகியின் பகீர் கணிப்பு!
Gold rate
logo
Kalki Online
kalkionline.com