

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் தினசரி மாற்றம் ஏற்படுவதால், கடந்த சில நாட்களாக ஏறுவதும், இறங்குவதுமாகவே இருக்கிறது. ஆனால் இனி விலையேற்றம் அதிகமாக இருக்கும் என்றே பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரவுள்ளது என்ற அறிவிப்பு வெளியான உடனேயே சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 100 டாலருக்கும் மேல் உயர்ந்தது. இனி தங்கம் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயரும் என்ற கணிப்பு, நகைப் பிரியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தங்கத்தை இனி ஆபரண நகையாக வாங்கும் சாமானிய மக்கள், அதில் முதலீடு செய்ய முயற்சிக்க வேண்டும். முதலீட்டுப் பார்வையில் தங்கத்தின் விலையை கவனித்து வந்தால், அதன் விலை உயர்வது நமக்கெல்லாம் மகிழ்ச்சியாகவே இருக்கும்.
நேற்று (ஜூன் 17) ஒரு சவரன் தங்கம் ரூ.240 குறைந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,12,240-க்கும், ஒரு கிராம் ரூ.14,030-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,75,000-க்கு விற்பனையானது.
கடந்த வருடம் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கியவர்களுக்கு, தற்போது நல்ல லாபம் கிடைத்துள்ளது. கவலைப்பட வேண்டாம்; இப்போது வாங்கினால் கூட, அடுத்த வருடத்தில் தங்கமும், வெள்ளியும் உங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும்.
தங்கம் விலை உயர்ந்து வருகிறதே என கவலைப்படாமல், அதில் முதலீடு செய்தால் வருங்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும் என்பதே நிதர்சனம். அதறகேற்ப பொருளாதார நிபுணர்களும் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை ஊக்குவித்து வருகின்றனர்.
2035-ல் ஒரு சவரன் தங்கம் ரூ.9 லட்சத்திற்கும் மேல் விற்பனையாகும் என பிரபல முதலீட்டாளர் ராபர்ட் கியோசாகி கணித்துள்ளார். குறுகிய காலத்தில் அதிக இலாபம் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு நிகராக, தங்கம் மற்றும் வெள்ளி முதலீடும் இலாபம் கொடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 18) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து, ரூ.1,12,480-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.14,060-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.270-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,70,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:
ஜூன் 17: 1 கிராம் - ரூ.14,030 1 சவரன் ரூ.1,12,240
ஜூன் 16: 1 கிராம் - ரூ.14,060 1 சவரன் ரூ.1,12,480
ஜூன் 15: 1 கிராம் - ரூ.14,070 1 சவரன் ரூ.1,12,560
ஜூன் 14: 1 கிராம் - ரூ.13,860 1 சவரன் ரூ.1,10,880
ஜூன் 13: 1 கிராம் - ரூ.13,860 1 சவரன் ரூ.1,10,880
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:
ஜூன் 17: 1 கிராம் - ரூ.275
ஜூன் 16: 1 கிராம் - ரூ.275
ஜூன் 15: 1 கிராம் - ரூ.280
ஜூன் 14: 1 கிராம் - ரூ.270
ஜூன் 13: 1 கிராம் - ரூ.270