#JUST IN: செம சான்ஸ்..! ரூ.15,000 சரிவு..! தங்கம் வாங்குவோருக்கு ஜாக்பாட்.!

Gold Price today
Gold Price
Updated on

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக ஏறுவதும், இறங்குவதுமாகவே இருக்கிறது. அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் நேற்று (ஜூன் 18) கையெழுத்தான நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தங்கத்தை இனி ஆபரண நகையாக வாங்கும் சாமானிய மக்கள், அதில் முதலீடு செய்ய முயற்சிக்க வேண்டும். முதலீட்டுப் பார்வையில் தங்கத்தின் விலையை கவனித்து வந்தால், அதன் விலை உயர்வது நமக்கெல்லாம் மகிழ்ச்சியாகவே இருக்கும்.

நேற்று (ஜூன் 18) ஒரு சவரன் தங்கம் காலையில் ரூ.240 உயர்ந்த நிலையில், மாலையே திடீர் சரிவை சந்தித்தது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,11,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,950-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,70,000-க்கு விற்பனையானது

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 19) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,040 குறைந்து, ரூ.1,08,560-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.380 குறைந்து ரூ.13,570-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.15 குறைந்து, ரூ.255-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.15,000 குறைந்து ரூ.2,55,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு இதே ஜூன் 19-ல் 1 சவரன் தங்கம் ரூ.74,120-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், இடையில் இருக்கும் வித்தியாசமானது கடந்த ஆண்டு விறபனையான தங்கத்தில் கிட்டத்தட்ட 50% விலை உயர்ந்துள்ளது.

அதேபோல் 2025 ஜூன் 19 அன்று 1 கிராம் வெள்ளி ரூ.122-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால் இடையில் இருக்கும் வித்தியாசமானது, கடந்த ஆண்டு விறபனையான வெள்ளியின் விலையை விட அதிகம்

gold price
gold price
இதையும் படியுங்கள்:
பழையபடி 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய முடியுமா? TRAI-யின் அதிரடி முயற்சி!
Gold Price today

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 18: 1 கிராம் - ரூ.13,950 1 சவரன் ரூ.1,11,600

ஜூன் 17: 1 கிராம் - ரூ.14,030 1 சவரன் ரூ.1,12,240

ஜூன் 16: 1 கிராம் - ரூ.14,060 1 சவரன் ரூ.1,12,480

ஜூன் 15: 1 கிராம் - ரூ.14,070 1 சவரன் ரூ.1,12,560

ஜூன் 14: 1 கிராம் - ரூ.13,860 1 சவரன் ரூ.1,10,880

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 18: 1 கிராம் - ரூ.270

ஜூன் 17: 1 கிராம் - ரூ.275

ஜூன் 16: 1 கிராம் - ரூ.275

ஜூன் 15: 1 கிராம் - ரூ.280

ஜூன் 14: 1 கிராம் - ரூ.270

கடந்த வருடம் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கியவர்களுக்கு, தற்போது நல்ல லாபம் கிடைத்துள்ளது. கவலைப்பட வேண்டாம்; இப்போது வாங்கினால் கூட, அடுத்த வருடத்தில் தங்கமும், வெள்ளியும் உங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும். தங்கம் விலை உயர்ந்து வருகிறதே என கவலைப்படாமல், அதில் முதலீடு செய்தால் வருங்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும் என்பதே நிதர்சனம்.

அதறகேற்ப பொருளாதார நிபுணர்களும் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை ஊக்குவித்து வருகின்றனர். 2035-ல் ஒரு சவரன் தங்கம் ரூ.9 லட்சத்திற்கும் மேல் விற்பனையாகும் என பிரபல முதலீட்டாளர் ராபர்ட் கியோசாகி கணித்துள்ளார்.

குறுகிய காலத்தில் அதிக இலாபம் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு நிகராக, தங்கம் மற்றும் வெள்ளி முதலீடும் இலாபம் கொடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
2035-ல் தங்கத்தின் விலை ரூ.9 லட்சமா? கியோசாகியின் பகீர் கணிப்பு!
Gold Price today
logo
Kalki Online
kalkionline.com