முதல்வர் விஜய் பிறந்தநாளில் தங்கம் விலை சரிந்ததா.? உயர்ந்ததா.?

Gold rate
Gold
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் கடந்த வாரத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக தங்கத்தின் விலை ரூ.2,080 வரை குறைந்தது.

தங்கத்தின் ஏற்ற இறக்கம் காரணமாக ஆபரண நகையாக வாங்கும் சாமானிய மக்கள், அதில் முதலீடு செய்ய முயற்சிக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

நேற்று (ஜூன் 21) ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,08,800-க்கும், ஒரு கிராம் ரூ.13,600-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,55,000-க்கு விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 22) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,08,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,600-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு இதே ஜூன் 22-ல் 1 சவரன் தங்கம் ரூ.73,680-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், இடையில் இருக்கும் வித்தியாசமானது கடந்த ஆண்டு விறபனையான தங்கத்தில் கிட்டத்தட்ட 50% விலை உயர்ந்துள்ளது.

அதேபோல் 2025 ஜூன் 22 அன்று 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால் இடையில் இருக்கும் வித்தியாசமானது, கடந்த ஆண்டு விறபனையான வெள்ளியின் விலையை விட அதிகம்.

gold price
gold
இதையும் படியுங்கள்:
2035-ல் தங்கத்தின் விலை ரூ.9 லட்சமா? கியோசாகியின் பகீர் கணிப்பு!
Gold rate

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 21: 1 கிராம் - ரூ.13,600 1 சவரன் ரூ.1,08,800

ஜூன் 20: 1 கிராம் - ரூ.13,600 1 சவரன் ரூ.1,08,800

ஜூன் 19: 1 கிராம் - ரூ.13,570 1 சவரன் ரூ.1,08,560

ஜூன் 18: 1 கிராம் - ரூ.14,060 1 சவரன் ரூ.1,12,480

ஜூன் 17: 1 கிராம் - ரூ.14,030 1 சவரன் ரூ.1,12,240

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 21: 1 கிராம் - ரூ.255

ஜூன் 20: 1 கிராம் - ரூ.255

ஜூன் 19: 1 கிராம் - ரூ.255

ஜூன் 18: 1 கிராம் - ரூ.270

ஜூன் 17: 1 கிராம் - ரூ.275

கடந்த வருடம் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கியவர்களுக்கு, தற்போது நல்ல லாபம் கிடைத்துள்ளது. கவலைப்பட வேண்டாம்; இப்போது வாங்கினால் கூட, அடுத்த வருடத்தில் தங்கமும், வெள்ளியும் உங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

தங்கம் விலை உயர்ந்து வருகிறதே என கவலைப்படாமல், அதில் முதலீடு செய்தால் வருங்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும் என்பதே நிதர்சனம். அதற்கேற்ப பொருளாதார நிபுணர்களும் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை ஊக்குவித்து வருகின்றனர்.

குறுகிய காலத்தில் அதிக இலாபம் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு நிகராக, தங்கம் மற்றும் வெள்ளி முதலீடும் இலாபம் கொடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது

இதையும் படியுங்கள்:
அமெரிக்காவில் கூட இது இல்ல! மும்பை மெட்ரோவை பார்த்து வியந்த அமெரிக்க பெண்!
Gold rate
logo
Kalki Online
kalkionline.com