#JUST IN: குட் நியூஸ்.! ரூ.10,000 சரிவு.! தங்கம் வாங்க துடிப்போருக்கு அடித்தது ஜாக்பாட்.!

Gold  Price
Gold
Updated on

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நடப்பாண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.21,000 வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக தங்கத்தின் விலை ரூ.2,080 வரை குறைந்தது. இதன் காரணமாக தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழே இறங்குமா என்று சாமானிய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இருப்பினும் தங்கத்தின் ஏற்ற இறக்கம் காரணமாக ஆபரண நகையாக வாங்கும் சாமானிய மக்கள், அதில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

நேற்று (ஜூன் 23) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,08,480-க்கும், ஒரு கிராம் ரூ.13,560-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,50,000-க்கு விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 24) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,680 குறைந்து, ரூ.1,06,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.210 குறைந்து ரூ.13,350-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது

கடந்த ஆண்டு இதே ஜூன் 24-ல் 1 சவரன் தங்கம் ரூ.73,240-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு இதனை ஒப்பிட்டால், இடையில் இருக்கும் வித்தியாசமானது கடந்த ஆண்டு விறபனையான தங்கத்தில் கிட்டத்தட்ட 50% விலை உயர்ந்துள்ளது.

அதேபோல் 2025 ஜூன் 24 அன்று 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால் இடையில் இருக்கும் வித்தியாசமானது, கடந்த ஆண்டு விறபனையான வெள்ளியின் விலையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

gold price
gold
இதையும் படியுங்கள்:
வாட்ஸ்அப்பை ஆளப்போகும் இந்தியர்: யார் இந்த குணால் ஷா.?
Gold  Price

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 23: 1 கிராம் - ரூ.13,560 1 சவரன் ரூ.1,08,480

ஜூன் 22: 1 கிராம் - ரூ.13,600 1 சவரன் ரூ.1,08,800

ஜூன் 21: 1 கிராம் - ரூ.13,600 1 சவரன் ரூ.1,08,800

ஜூன் 20: 1 கிராம் - ரூ.13,600 1 சவரன் ரூ.1,08,800

ஜூன் 19: 1 கிராம் - ரூ.13,570 1 சவரன் ரூ.1,08,560

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 23: 1 கிராம் - ரூ.250

ஜூன் 22: 1 கிராம் - ரூ.255

ஜூன் 21: 1 கிராம் - ரூ.255

ஜூன் 20: 1 கிராம் - ரூ.255

ஜூன் 19: 1 கிராம் - ரூ.255

தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறதே என கவலைப்படாமல், அதில் முதலீடு செய்தால் வருங்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். அதறகேற்ப பொருளாதார நிபுணர்களும் தங்கம் மற்றும் வெள்ளி மேலும் உயரும் எனக் கணித்துள்ளனர். குறுகிய கால முதலீடுகளில் அதிக இலாபம் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு நிகராக, தங்கம் மற்றும் வெள்ளி முதலீடும் இலாபத்தை அள்ளிக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
மின்வெட்டுப் பேச்சுக்கே இனி இடமில்லை: 10 குழுக்களுடன் களத்தில் குதித்த முதல்வர் விஜய்!
Gold  Price
logo
Kalki Online
kalkionline.com