#JUST IN: தங்கம் விலை திடீர் உயர்வு.! லாபம் யாருக்கு? நஷ்டம் யாருக்கு? முழு விவரம் உள்ளே!

Gold price
Gold Price
Updated on

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே உயர்ந்து வருகிறது. அதற்கு முன்பு வரை மிகக் குறைந்த அளவில் தான் மாற்றம் இருந்து வந்தது. ஆனால் அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு 2-வது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, தங்கத்தின் விலையில் வரலாறு காணாத விலையுயர்வு ஏற்பட்டது.

இதற்கிடையில் சாமானியர்கள் மற்றும் இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்தது தங்கத்தின் விலை. இருப்பினும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாகவே இருக்கிறது.

தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியில் மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது மட்டுமின்றி, வரியையும் அதிகரித்தது.

நேற்று (ஜூன் 8) தங்கம் விலை ரூ.1,040 குறைந்தது. ஆனால் வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையானது. கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.4,480 வரை குறைந்தது.

இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,12,560-க்கும், ஒரு கிராம் ரூ.14,070-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,70,000-க்கு விற்பனையானது.

உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி மிகப்பெரிய முதலீட்டுப் பொருளாக உள்ளது. விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காணம் தான். இருப்பினும் உலகளாவிய போர் பதற்றம், டாலர் வீழ்ச்சி, தொழில்துறை பயன்பாடு மற்றும் வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தினசரி மாற்றம் ஏற்படுகிறது.

விலை உயர்ந்தால், தங்கத்தை ஆபரண நகையாக வாங்குபவர்களுக்கே அதிர்ச்சியாக இருக்கும். அதே சமயம் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இது நல்லதொரு இலாபத்தை ஈட்டித் தரும்.

தங்கம் விலை உயர்ந்து வருகிறதே என வருத்தப்படாமல், அதில் முதலீடு செய்தால் வருங்காலத்தில் நல்ல இலாபத்தை ஈட்ட முடியும் என்பதே நிதர்சனம். அதறகேற்ப பொருளாதார நிபுணர்களும் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை ஊக்குவித்து வருகின்றனர்.

குறுகிய காலத்தில் அதிக இலாபம் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு நிகராக, தங்கம் மற்றும் வெள்ளி முதலீடும் இலாபம் கொடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 9) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,040 உயர்ந்து, ரூ.1,13,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.130 உயர்ந்து ரூ.14,200-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தாலும், முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
LIC-யில் போட்ட பணம் அவ்ளோதானா? இந்தியாவை அதிரவைத்த ரூ.15.15 லட்சம் கோடி மெகா மோசடி.!
Gold price

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 8: 1 கிராம் - ரூ.14,070 1 சவரன் ரூ.1,12,560

ஜூன் 7: 1 கிராம் - ரூ.14,200 1 சவரன் ரூ.1,13,600

ஜூன் 6: 1 கிராம் - ரூ.14,200 1 சவரன் ரூ.1,13,600

ஜூன் 5: 1 கிராம் - ரூ.14,430 1 சவரன் ரூ.1,15,440

ஜூன் 4: 1 கிராம் - ரூ.14,480 1 சவரன் ரூ.1,15,840

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 8: 1 கிராம் - ரூ.270

ஜூன் 7: 1 கிராம் - ரூ.270

ஜூன் 6: 1 கிராம் - ரூ.270

ஜூன் 5: 1 கிராம் - ரூ.280

ஜூன் 4: 1 கிராம் - ரூ.285

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : இனி எந்த வைரஸ் வந்தாலும் பயமில்லை.! வந்தாச்சு AI தடுப்பூசி.!
Gold price
logo
Kalki Online
kalkionline.com