#JUST IN: பீகாரில் முதல்வர், 2 துணை முதல்வர்கள் பதவியேற்பு.!

Bihar CM
Bihar CM
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

பீகார் மாநிலத்தில் முதல்முறையாக இன்று ஆட்சியமைத்துள்ளது பாஜக. பீகார் முதலமைச்சராக சற்றுமுன் பதவியேற்றுக் கொண்டார் சாம்ராட் சவுத்ரி. இவருக்கு ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பீகார் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் ராஜினாமா செய்த நிலையில், ஏற்கனவே துணை முதல்வராக இருந்த சாம்ராட் சவுத்ரி இன்று பீகார் மாநில புதிய முதல்வராக பதவியேற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரான் கப்பல்களை தடுத்து நிறுத்திய அமெரிக்க கடற்படை.!
Bihar CM

பீகாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணி 243 தொகுதிகளில் 202 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து நிதிஷ்குமார் பீகாரில் 10வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில் எம்பி-யாக பாராளுமன்றத்தில் நிதிஷ்குமார் செல்லவிருப்பதால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பீகாரின் புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றுள்ளார்.

மேலும் பீகாரில் 2 துணை முதல்வர்களும் பதவியேற்றுள்ளனர். ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பிஜேந்திர பிரசாத் யாதவ் மற்றும் விஜய் குமார் சௌத்ரி ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: மோடி - இபிஎஸ் மெகா ரோடு ஷோ.! தென்னகத்தில் அதிரும் அரசியல் களம்!
Bihar CM
logo
Kalki Online
kalkionline.com