#JUST IN: ஸ்டாலின் - தேஜஸ்வி - டி.கே.எஸ்: தமிழக அரசியலில் உருவெடுக்கும் மெகா கூட்டணி பலம்!

2026 election prediction
DMK Campaign
Updated on

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்ய இருக்கிறார். இந்நிலையில் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

தமிழ்நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை வென்று, திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: தவெக நிர்வாகிகள் பொய் சொல்கிறார்கள் - கடலூர் காவல் துறை அதிரடி அறிவிப்பு.!
2026 election prediction

பீகார் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த அரசியல் தலைவர்கள், திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது ஆளுங்கட்சிக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்த கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், “பொதுமக்களுக்கு திமுக கூட்டணி சார்பில் ரூ.8,000 இல்லத்தரசிகள் கூப்பன் உள்பட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை வென்று திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்” என பரப்புரையில் தெரிவித்தார்.

தமிழகத்தில் முன்னணி கட்சியாக இருக்கும் திமுக, காங்கிரஸ் உடனும், அதிமுக, பாஜக உடனும் கூட்டணி வைத்துள்ளன. இந்நிலையில் திமுகவுக்கு ஆதரவாக பீகார் மற்றும் கர்நாடகா தலைவர்கள் பிரச்சாரம் செய்வது, அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது.

திமுக இதுவரை தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வென்று ஆட்சி அமைத்ததில்லை. அந்த வரலாற்றை திமுக மாற்றி அமைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: தமிழகத்திற்கு மீண்டும் வருகிறார் ராகுல் காந்தி.!
2026 election prediction

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com