

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. அவ்வகையில் இன்று திருச்சியில் பிரச்சாரத்தை மேற்கொள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விமானம் மூலமாக திருச்சி செல்கிறார்.
அதே நேரம் தஞ்சாவூரில் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சிக்கு செல்கிறார். இருவரும் இன்று மதியம் சென்னையில் இருந்து புறப்படும் விமானத்தில் ஒன்றாக பயணிக்க உள்ளனர்.
தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் இபிஎஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் கடுமையான வார்த்தை போர்களில் ஈடுபட்டு வருகின்றனர். இபிஎஸ் குறித்து உதயநிதியும், உதயநிதி குறித்து பழனிசாமியும் பிரச்சாரத்தில் கடுமையாக பேசி வரும் நிலையில், தற்போது இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் ஒரே நேரத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வரும்போது, ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, எப்படியான ரியாக்ஷனை வெளிப்படுத்துவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.